4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

சொற்றொடர்களில் புணர்ச்சி அமையும் விதம் - க. தேவிபாலா

 

 

 சொற்றொடர்களில் புணர்ச்சி அமையும் விதம்

 

க. தேவிபாலா

முனைவர்ப் பட்ட ஆய்வாளர்

தமிழ்த்துறை,

தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),

திருப்பத்தூர்,    

திருப்பத்தூர் மாவட்டம் - 635601.

 

முன்னுரை

                தனிமொழியுடன் இலக்கண உறுப்புகள் இணையும் ஒட்டுமொழியாக தமிழ்மொழியை வகைப்படுத்தியுள்ளனர்  தனிமொழியுடன் இலக்கண உறுப்புகள் இணைவதற்கும் ஒரு சொல்லோடு மற்றொரு சொல் இணையும் போதும் அவை எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. என்பதை உணர்ந்து கோட்பாடுகள் வகுத்து வைத்துள்ளனர். அது புணர்ச்சிக் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. எல்லாச் சொல்லும் பொருள் உணர்த்தும் என்பது தொல்காப்பியர் கூற்றாக இருக்க எல்லாச் சொற்களின் இணைவிற்கும் கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளதா? எனில் இல்லை என்றுதான் கூறமுடியும். வகுத்துள்ள சில கோட்பாடுகளே சில இடங்களில் தவறாகப் போகும்  நிலையும் உள்ளன. புணர்ச்சிக் கோட்பாடு எவ்விதம் சொற்களிலும் சொற்றொடர்களிலும் அமைந்துள்ளன என்பதையும்; உடம்படுமெய்யின் தோற்றம் அவை அமையும் முறை பற்றியும் பழங்காலத்தில் அதன்  தேவை குறித்தும் சில இடங்களில் புணர்ச்சியினால் பொருள் பிழைபட நேரிடுகிறது என்பதையும் விதியினை மீறிய சொற்களும் சில உள்ளன என்பதையும் இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள புணர்ச்சி விதியினைப் பயன்படுத்தி விளக்கமுறை ஆய்வுமுறையைக் கொண்டு இக் கட்டுரையானது ஆராயப்படுகிறது.                                              

 

சொற்களுள் நடைபெறும் புணர்ச்சியை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில் அதற்கு சொற்களைப் பிரித்தறிய நன்கு தெரிந்திருக்க வேண்டும். சொற்களின் புணர்ச்சி இலக்கணம் கூறுவதற்குச் சொற்களைப் பகுத்துப் பகுதி, விகுதி என்று பிரிக்கத் தெரிந்தால்தான் பிரிக்கக் கூடிய சொல்லில் (பகுபதம்) நடைபெறும் புணர்ச்சியை விளக்க முடியும். தனிச்சொல்லுக்குள் நடைபெறும் புணர்ச்சி பற்றித் தொல்காப்பியர் கூறவில்லை. எனினும் நன்னூல் தனிச்சொல்லுக்குள் நடைபெறும் புணர்ச்சி பற்றிக் கூறியுள்ளது.

 ஈறுபோதல் இடைஉகரம் இய்யாதல்”1     (நன் - 136)  

என்ற நூற்பாபடி சிறியன்என்ற சொல்லின் புணர்ச்சியை கூறுகையில் சிறுமை + அன் என்பது மைகெட்டு சிறு + அன் என மாறி கரம் கரம் ஆகும் என்று கூறியதால் சிறி + அன் என்றாகி இடையில் உடம்படுமெய் ய்தோன்றி சிறியன்என மாறியது.  இவ்விதி பண்புப் பெயரில் வரும் சொற்;களுக்குப் பொருந்தி வருவதாக அமைந்துள்ளது. எனினும் சில தனிச்சொல்லுக்குள் நடைபெறும் புணர்ச்சியைக் கூறி விளக்க நூற்பாக்கள் வகுக்கப்படவில்லை என்றுதான் கூறவேண்டும். நடந்தான் என்ற சொல்லில் (நத்+த்+ஆன்) ந்வந்ததற்கான குறிப்பு நன்னூலிலும் இல்லை தொல்காப்பியத்திலும் இல்லை”2 எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடதக்க ஒன்றாகும்

இரண்டு அல்லது பல தனிச்சொற்கள் இணைந்து கூட்டுச் சொற்களாக உருவாகின்றன. அதாவது பார்க்க ஒரு சொல்லாக இருக்கும். ஆனால் பிரித்தால் அதில் இரு சொற்கள் அமைந்;திருக்கும் சொற்களும் பல உள்ளன. உதாரணத்திற்கு,

                நாம்என்ற தன்மை பன்மை பெயரோடு கள்விகுதி இணையும்போது  கரத்திற்கு இனமான கர ஒற்று தோன்றி நாங்கள் என மாறியுள்ளது. இதனை அகப்புணர்ச்சி என்றும் கூறுகின்றனர். (ஒரு சொல்லுக்குள் நடைபெறும் புணர்ச்சி)

புணர்ச்சி அறிமுகம்

                இரண்டு சொற்கள் அமையும் தொடரில் முதலாவதாக அமைந்த சொல்லைத் தொல்காப்பியர் நிறுத்தற் சொல்’; என்றும் பவணந்திமுனிவர் நிலைமொழிஎன்றும் (இது பகாப்பதம் பகுபதம் என நிற்கும்.) இரண்டாவதாக அமைந்த சொல்லை குறித்துவருகிளவிஎன்றும் வருமொழிஎன்றும் கூறியுள்ளார்கள். இவ்விரு சொற்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து பொருள் தரும்படி நிற்றலே புணர்ச்சி ஆகும். புணர்ச்சிஎன்ற சொல்லின் அடிச்சொல் புணர் என்பதற்கு ஒலித்தல்’ ‘கரை’ ‘கடலலை’ ‘தனிமைஎனவும் புணர்வுஎன்ற சொல் இசைவு’ ‘இணைவு’ ‘உடல்கலப்புஎனவும் புணர்ப்புஎன்ற சொல் தொடர்பு’ ‘நட்பு’ ‘சூழ்ச்சி’ ‘செயல்’ ‘உடல்’ ‘கடல்;’ எனவும் புணர்ச்சி என்;ற சொல் கலவி’ ‘சேர்க்கை’ ‘சந்திஎனவும் புணர்தல்என்பதற்கு அளவளாதல்’ ‘சேர்தல்’ ‘கூடுதல்’ ‘பொருந்துதல்எனவும் பொருள் கூறப்பட்டுள்ளன. ஆக புணர் என்ற அடிச்சொல்லைப் பின்பற்றி வரும் சொற்கள் யாவற்றிற்கும் சேர்தல்’ ‘இணைதல்என்ற பொருளையே தந்துள்ளன. புணர்+சி அதில் வல்லொற்று மிகுந்து புணர்ச்சி என்றாகியுள்ளது. 

புணர்ச்சி அமையும் நிலை

                நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் உயிரெழுத்தாகவும்; மெய்யெழுத்தாகவும் அமையும்.

உயிர்+ உயிர்  =     மணி+ அடித்தான்

உயிர்+ மெய்  =     கனி+ மொழி

மெய் + மெய் =     மீன்+ வலை

மெய்+உயிர்   =     கண்+ இமை

இவ்வாறாக அமையும் முறை சொன்மை நிலை எனவும் பகுபதமாகவும் பகாப்பதமாகவும் அமையும் நிலைமொழியுடன் இணையும் வருமொழி பெயராகவும் வினையாகவும் அமையும்.

பெயர் + பெயர       ;               =      மீன் + கண்.

பெயர்+ வினை              =      கண்ணன் + வந்தான்.

வினைூ பெயர்              =      படித்தான் + அவன்.

வினை + வினை                     =      வந்தான் + சென்றான்

இவ்வாறாக அமையும் முறையைப் பொருண்மை நிலைஎனவும் கூறப்பட்டுள்ளன.    

புணர்ச்சியின் வகைகள்

                புணரும் சொற்களின் சொன்மை நிலையும் பொருண்மை நிலையும் இணைந்து இயல்பையும் மாற்றத்தையும் தோற்றுவிக்கின்றன. இதன் அடிப்படையில் புணர்ச்சியை இயல்புப் புணர்ச்சி என்றும் விகாரப் புணர்ச்சி என்றும் பிரிக்கலாம்.

இயல்புப் புணர்ச்சி அமையும் முறை

                மாற்றம் இல்லாமல் இயல்பாக இணையும் சேர்க்கை இயல்புப் புணர்ச்சி ஆகும். கீழ்க்காணும் மூன்று நிலைகளில் இயல்புப் புணர்ச்சி அமைந்து வருகிறது.

(அ) நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் இணையும் போது மாற்றம் ஏற்படாதிருத்தல். (எகா) மரம் + விழுந்தது =மரம்விழுந்தது

(ஆ)  நிலைமொழியின் ஈற்று மெய்யெழுத்து வருமொழி முதல் உயிரெழுத்தோடு இணைந்து உயிர்மெய் எழுத்தாக அமைவதும் இயல்பு ஆகும். (எகா) கடல் +  அலை =கடலலை

                உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே”3       ( நன் - 204 )

என்ற நூற்பாவும்

                புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது

                மெய்யொடுஞ் சிவணும் அவ்வியல் கெடுத்தே”4      (தொல் - 204)

என்ற நூற்பாவும் இயல்புப் புணர்ச்சியை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

(இ) குற்றியலுகரச் சொற்கள் நிலைமொழியாக நிற்க வருமொழி உயிராக அமைந்தால் இதுவும் இயல்பாகவே அமையும் அதாவது நிலைமொழியின் ஈற்றிலுள்ள கெட்டு மெய் நின்று வருமொழிக்கு உயிரேற இடம் கொடுக்கும். (எ.கா) பட்டு +ஆடை,  பட்ட் +  ஆடை = பட்டாடை இதனை

                குற்றியலுகரம் அற்றென மொழிப”5 (தொல் - 106)

என்ற நூற்பா இதனை உணர்த்திச் செல்கிறது.

விகாரப் புணர்ச்சி அமையும் விதம்

                மாற்றங்களோடு வரும் புணர்ச்சி விகாரப்புணர்ச்சி ஆகும் மாற்றமானது சொல்லின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும்; நடைபெறும். மெய்பிறிதாதல் மிகுதல் குன்றல் என்று தொல்காப்பியமும் தோன்றல் திரிதல் கெடுதல் என நன்னூலும் குறிப்பிடுகின்றன. திரிபு, அழிவு, ஆக்கம், திரட்டு (இது வடமொழிப் புணர்ச்சியைக் குறிப்பதாக அமைகிறது) என தொன்னூல் விளக்கமும்  நிலைமாறுதல்’ (தசை என்பது சதை என மாறுவது) என  இலக்கணக் கொத்தும்  காலத்திற்கேற்றவாறு சேர்த்து கூறுகின்றன.

(அ) தோன்றல் விகாரம்

                நிலைமொழியின் ஈற்றெழுத்திற்கும் வருமொழியின் முதலெழுத்திற்கும் இடையில் ஓரெழுத்து தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும். வருமொழியின் முதலெழுத்து க,,,ப என்ற வரிசையில்    அமைந்தால் அவ்வெழுத்துகளின் ஒற்று    மிகுந்து       வருதல் (திரு+குறள்=திருக்குறள்) அவ்விரண்டு மொழிகளுக்கிடையே சாரியைத் தோன்றுதல் (அவைூஐ=அவற்றை) ஒற்று இரட்டித்துவருதல் (மண்+அரிப்பு=மண்ணரிப்பு) நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் உயிரெழுத்தாக இருக்கும் பட்சத்தில் அதனை உடம்படுத்தத் தோன்றும் மெய்யெழுத்தின் தோற்றம் (மணி அடித்தான் மணியடித்தான்) எனப் பல நிலைகளில் தோன்றல் விகாரமானது அமையும். தோன்றல் விகாரமானது உச்சரிப்பை எளிமையாக்குவதற்கும் பொருள் நிலைப்பேறுக்காகவும் ஒலியின் நயம் கருதியும் தோன்றுகின்றன”6 எனக் கூறப்பட்டுள்ளது.

(அ.1) கண்+அழகு இந்த சொல்லிற்கு உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதி;ப்படி கணழகுஎன்று தொடரை உச்சரிப்பதில் கடினம் இருக்கிறது. ஆனால் கணழகுஎன்பது கண்ணழகுஎனப் புணரும்போதுதான் உச்சரிப்பும் எளிமையாகிறது பொருளும் புரிகிறது. இதற்கு கீழ்க்கண்ட நூற்பா பயன்படுகிறது.

                தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்”7   (நன் 205)

(ஆ.2) புளி+பழம்=புளியம்பழம் (பொருளின் நிலைப்பேறினை உணர்த்தும் தோன்றல் விகாரம்);.

(இ.3) புளி+கறி=புளிங்கறி (ஒலிநயத்திற்காகத் தோன்றிய விகாரம்).

(ஆ) திரிதல் விகாரம் அமையும் முறை

                ஒன்று மற்றொன்றாக மாறுவதே திரிதல் என்பதாகும். நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது நிலைமொழியின் ஈற்றெழுத்தோ வருமொழியின் முதலெழுத்தோ அல்லது இரண்டுமோ என மூன்று நிலைகளில் திரிதல் விகாரம்  அமைகிறது.

(எ கா)

மண்+பாண்டம்=மட்பாண்டம் (நிலைமொழியின் ஈறு திரிந்துள்ளது)

தேன்+தமிழ்=தேன்றமிழ் (வருமொழியின் முதல் திரிந்துள்ளது)

இயல்+தமிழ்=இயற்றமிழ் (ஈறும் முதலும் திரிந்துள்ளன)

இந்த மூன்றையும் பார்க்கும்போது மெய்யெழுத்து மட்டுமே திரிந்துள்ளதைக் காண முடிகிறது. எனவேதான் தொல்காப்பியர் வெறுமனே பிறிதாதல்என்று கூறாமல் மெய்பிறிதாதல்எனக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார் போலும்.

(இ) கெடுதல் விகாரம் அமையும் முறை

                நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது நிலைமொழியின் ஈறு கெட்டு நிற்பது கெடுதல் விகாரம் ஆகும். இவ்வாறாக ஈறு கெட்டு நிற்பது இயல்பீறு மொழியிலும் விதியீறு மொழியிலும் நடைபெறும்

(அ)இயல்பீறு மொழி: இயல்பீறு என்பது நிலைமொழி ஈறு எந்த நிலையிலும் கெடாமல் நிற்பது (மலைூஅருவி=மலையருவி).

விதியீறு மொழி: விதியீறு என்பது நிலைமொழி ஈறு புணர்வதற்கு முன்பாகவே மாற்றம் பெற்று நிற்பது குல(ம்)+சிறப்பு =குலச்சிறப்பு

                தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய மூன்று விகாரங்களும் ஒரே சொல்லிலும் அமைந்து வருவதும் உண்டு (அறுபது, பனங்காய்) சொற்றொடர்களில் மட்டுமல்லாது தனிச்சொற்களின் முதலிலும் இடையிலும் கூட புணர்ச்சி நடைபெறுவதுண்டு.

(எகா) 1. கடன்+ மை= கடமை

                2.             வந்தேன் இதில் வாஎன்பது எனக் குறுகியும் த்’ ‘ந்’;ஆக திரிந்தும் வந்துள்ளன.

பொருண்மை வழி புணர்ச்சியின் வகைகள்

                இரு சொற்கள் புணரும்போது இடையில் வேற்றுமை உருபுகள் வெளிப்பட்டும் மறைந்தும் வேற்றுமையல்லாத வழிப் பொருண்மையிலும் அமைந்து வருகின்றன. அமையும் பொருண்மை காரணமாக வேற்றுமைப் புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி என இருவகையாகப் பிரி;க்கலாம்.

(அ) வேற்றுமைப் புணர்ச்சி அமையும் முறை

                வேற்றுமைப் புணர்ச்சியில்  வேற்றுமை உருபுகள் நிலைமொழியோடு சேர்ந்து ஒலிப்பதாக அமையும். ஆனால், வேற்றுமையல்லாத வழியில் புணர்கையில் பிளவுபட்டு; தனியே ஒலிப்பதாக அமையும். இதனை புணரும் சொற்கள் பிளந்து ஒலித்தலை அல்வழி என்றும் ஒட்டி ஒலிப்பதை வேற்றுமை என்றும் கூறவேண்டும்”8  எனக் கூறப்பட்டுள்ளது..   ஒட்டி ஒலிப்பதாகிய வேற்றுமைப் புணர்ச்சியில்  பெயராகிய தொகையும் (முத்துப்பல்) உருபுப் புணர்ச்சியில்; அடைமொழித் தொடரும் (செங்கட்கோழி) மரூஉமொழியும் (அருமந்த) மயங்கியல் மொழியும் அடங்கி வருவனவாகவும் கூறப்பட்;டுள்ளன. வேற்றுமை உருபு வெளிப்பட்டோ(வீட்டைக் கட்டினான்})  அல்லது மறைந்தோ(வீடு; கட்டினான்) வரும். வேற்றுமை உருபு அல்லாத முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் அல்வழித்தொடரில் இணைந்து வருகிறது.

                வேற்றுமைப் புணர்ச்சியானது  பெரும்பாலும் அஃறிணை ஒருமைப்பெயர்ச் சொல்லோடு உயர்திணை அல்லது அஃறிணைப்பெயர்கள் புணர்ந்து வருவதாகவே அமைந்துள்ளன.

(ஆ) அல்வழிப் புணர்ச்சி அமையும் முறை

                அல்வழிப் புணர்ச்சி தொக்கி வரும் தொடர்களில் ஐந்தின் வழியாகவும் தொகாநிலைத் தொடர்களில் ஒன்பதின் காரணமாகவும் அமைந்து வருகிறது.

(ஆ.1) தொகைநிலைத் தொடர் அமையும் முறை

                இரு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாக மாறும்போது தொகைக்குரியவை மறைந்து நிற்றல் தொகைநிலைத் தொடர் ஆகும்.

1.             வினைத்தொகை      -      ஊறுகாய்.

2.             .பண்புத் தொகை     -      செந்தாமரை.

3.             உவமைத்தொகை    -      பவளவாய்.

4.             உம்மைத்தொகை     -      வெற்றிலைபாக்கு.

5.             அன்மொழித்தெiகை  -      பொற்றொடி.

மேற்கூறிய புணர்ச்சிpல் ஒற்று மிகுந்து வராமல் அதாவது தோன்றல் விகாரம் இல்லாமல் திரிதலும் கெடுதலுமே அமைந்திருப்பது அறியமுடிகிறது.

(ஆ.2) தொகாநிலைத் தொடர் அமையும் முறை

                இரு சொற்கள் இணையும்போது இடையில் எச்சொல்லும் மறைந்து நில்லாமல் ஒரு சொல்லைத் தொடர்ந்து மற்றொரு சொல் நிற்பது தொகாநிலைத் தொடராகும். இவை ஒன்பது நிலைகளில்  அமையும்.(எ கா)

1.எழுவாய்த் தொடர்         -      கண்ணன் வந்தான்

2.விளித்தொடர்                     -      கண்ணா வா!

3.பெயரெச்சத்தொடர்         -      சென்ற கண்ணன்

4.வினையெச்சத்தொடர்             -      சென்று வந்தான்

5.தெரிநிலை வினைமுற்றுத்தொடர்  -  சென்றான் கண்;ணன்

6.குறிப்பு வினைமுற்றுத்தொடர்            -  கரியன் கண்ணன்

7.இடைச்சொல் தொடர்                    -  மற்றொன்று கேள்

8.உரிச்சொற்;றொடர்                -  நனிபேதை

9.அடுக்குத்தொடர்                  -  பாம்பு பாம்பு

நன்னூல் ஒன்பது நிலைகளில்  அமையும் என விரிவாக கூறியிருக்க இடைச்சொல், உரிச்சொல், வினைச்சொல் முதலியன தொடர்ந்து வருவது அல்வழித்தொடர் என சுவாமிநாதம் கூறுகிறது.

                வேற்றுமையின்;றி விரிவாய்த் தொகையாய்ப்

                 பேரில் வினையிடையுரிச் சொற்றொடர் பொருள் அல்வழியே” 9 ( சுவாமி -27)

குற்றியலுகரப் புணர்ச்சி அமையும் முறை

                புணரும் சொற்கள்  குற்றியலுகரச் சொற்களாக இருப்பின் வருமொழி உயிரெழுத்தாக அமைந்தால் குற்றியலுகரம் கெடுவதும் வருமொழி முதலில் வல்லின எழுத்துகள் வரின் அம்மெய் மிகுந்து வருவதும் இலக்கண விதி ஆகும்.

(எகா) பட்டு+ஆடை=பட்டாடை வருமொழி உயிர் வந்து நிலைமொழி உகரம் கெட்டு உடலும் உயிரும் இணைந்து புணர்ந்துள்ளது.

                விட்டு+சென்றான்=விட்டுச்சென்றான் வருமொழி வல்லின எழுத்து வந்ததால் ஒற்று மிகுந்து புணர்ந்துள்ளது

                குற்றியலுகரத்திற்கு கூறப்பட்டுள்ள சில விதிகள் முற்றியலுகத்திற்கும் பொருந்தி வருவதாகவும் உள்ளன. (எகா) அது+எப்படி=அதெப்படி. குற்றியலுகரப் புணர்ச்சி செய்யுளுக்கே உரியது என்றும் ஓர் ஒலியனாகக் கருதப்பட்டது”10 எனக் கூறப்பட்டுள்ளது.; தொல்காப்பியர் குற்றியலுகரத்திற்கென ஒரு தனி இயலே அமைத்திருப்பதில் இருந்து அதன் தேவை புரிகிறது. இருந்தாலும் அதன் தேவை குறைந்து காணப்பட்டதால்தான் நன்னூலார் குற்றியலுகரப் புணர்;ச்சியை உயிரீற்றுப் புணரியலின் உட்கூறாக அமைத்திருக்கலாம்.

உடம்படுமெய் சொற்களில் அமையும் முறை

                நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உயிரெழுத்து வந்தால் அந்த உயிர்கள் இணைய இடையில் மெய் தோன்றினால் மட்டுமே அந்தச் சொற்கள் இணையும் ஆக  சொற்களை இணைக்க அதாவது உடன்படுத்த வரும் மெய்யெழுத்தை உடம்படுமெய் என்பர் 

                                எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே

                                 உடம்படு மெய்யின் உருவுகொளல் வரையார்”11    (தொல் . 140)

எனத் தொல்காப்பியர் உடம்படுமெய் பற்றிக் கூறுகிறாரே தவிர உடம்படுமெய் எது என்று கூறவில்லை. உரையாசிரியர்கள் தான் ய்’‘வ்இரண்டும் உடம்படுமெய்யெழுத்து என்று கூறிச்செல்கின்றனர். ஆனால் நன்னூல்

                                இஈ ஐவழி யவ்வும் ஏனை

                                 உயிர்வழி வவ்வும் இவ் இருமையும்

                                 உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்”12       (நன் . 162)

என உடம்படுமெய் பற்றி மட்டுமல்லாது அது எங்கெங்கு வரும் என்பது பற்றியும் நூலில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தொன்னூல் விளக்கம் இ,,,ஐ வருமொழியாக வந்தால் யகரம் வரும் என கூறியுள்ளது. எனினும்  தமிழ்மொழியின் வழக்குகள் யாவற்றையும் உற்றுநோக்கின் ய்,வ் மட்டுமல்லாது ம்,ன்,ர் ஆகிய மெய்யொழிகள் கூட  உடம்படுமெய்களாக வரும்”13 என்று கூறப்பட்டுள்ளது.

                உடம்படுமெய்யைப் பேச்சுவழக்கில் நம்மை அறியாமலே பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். (மாவிலை, தினையளவு, விளையாட்டு) எனினும் எழுத்து வழக்கில் உடம்படுமெய் புணர்ச்சி; படிப்படியாகக் குறைந்து வருவதையும் காணமுடிகிறது.

                பல இன மக்களைக் கொண்ட இந்தியாவில் இன்று இனக் கலவரங்கள் பெரிய அளவில் இடம் பெறுவதை அறிந்து உள்ளங்குமுறுகிறது’. இங்கு உடம்படு மெய்யைப் பயன்படுத்தி எழுதினோமானால் பலவின’ ‘கொண்டவிந்தியாவில்’ ‘பெரியவளவில்என்றுதான் எழுதியிருக்கவேண்டும். இவ்வாறாக எழுதவேண்டும் என்பது ஆசிரியர்க்கும் தெரியாமல் இல்லை. இவ்வாறாக எழுதுகையில் பொருள் மயக்கமும் முரண்பட்டும் நிற்பதைக் காணமுடிகிறது. அதோடு கூட சில இடங்களில் நகை தோன்றவும் வைக்கிறது.

(எகா

நல்லூஅப்பர் =  நல்லவப்பர்

வெட்டியூஆள் = வெட்டியவாள்     

முறிந்தூஆணி = முறிந்தவாணி

மேற்கூறிய உதாரணங்களில் பொருள் மாறுபட்டும் சிரிப்பும் தோன்றும் வகையில் உடம்படுமெய் அமைவதைக் காணமுடிகிறது.      இதனாலேயே        தொல்காப்பியர் உடம்படு மெய்யை வற்புறுத்தாமைக்குக் காரணம் ள      பொருள் மயக்கத்திற்கு இடமளிக்கும்   என்று  உணர்ந்தமையே”14  எனக் கூறியுள்ளார்.

புணர்ச்சிக் கோட்பாடு தவறாகப் போகும் இடங்கள்

                பன்மைப் பொருளைத் தரும் கள்விகுதி சில சொற்களோடு இணையும்போது பொருளில் முரண்பாடு ஏற்படுகிறது. (எகா) செய்யுள், நாள் என்ற ள்ஈற்றெழுத்தை உடைய சொற்களுடன் கள்பன்மை விகுதி இணையும்போது செய்யுட்கள் நாட்கள் என ள்’ ‘ட்ஆக மாறும் என்பது இலக்கணவிதி இப்படியாக பன்மையை உணர்த்தாமல் செய்யுளாகிய கள் என்றும் புதிதாக இறக்கிய கள் எனவும் பொருளைத் தருகிறது. ஆக விதியினை ஏற்காமல் செய்யுள்கள் என எழுதுவதே சரியான பொருளைத் தரும்.

புணர்ச்சி விதி தவிர்க்கப்படும் இடங்கள்

                தற்காலத்தில் விதிகள் தவிர்க்கப்பட்டு வருகிறது. (எகா)

                சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்

                 யாவினா முதலிய மென்றொடர் மொழியும்

                ஆயியல் திரியா வல்லெழுத்துத் தியற்கை”15 (தொல்-428)

மேற்கூறிய நூற்பாவில் சுட்டெழுத்தாக உள்ள மென்றொடர்க் குற்றியலுகரச் சொற்கள் முன் வல்லினம் வந்தால் ஒற்று மிகும் என்பது விதி ஆனால் தற்காலத்தில் அங்கு என்ற மென்தொடர்க் குற்றியலுகரம் அங்கே என மாற்றி எழுதப்படும் வழக்கம் வந்துள்ளது. அங்கே சென்றான் இது அங்குச் சென்றான் என்றுதான் எழுதியிருக்க வேண்டியது ஆனால் தற்போது ஒற்றை தவிர்க்க காரம்சேர்த்து எழுதப்பட்டு  வருகிறது.

                அதோடு இன்றுள்ள மொழியியலாளர் சில புணர்ச்சி விதிகளை ஏற்றும் பல புணர்ச்சி விதிகளை கைவிடலாம் என்றும் கூறியுள்ளார்கள். ஒருவர் கருத்தை மற்றொருவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு மொழி நமக்குக் கருவியாகப் பயன்படுகிறது. அதில், கருத்து முக்கியமே தவிர அதிலுள்ள ஒற்றுகள் அவசியமான இடத்தில் மட்டும் கையாண்டால் போதுமானதாக இருக்கும். ஏனென்றால் சொல்ல வந்த கருத்து முழுமையாகச் சென்றடைந்தால் போதுமானது என்ற கருத்தும் நிலவிவருகிறது. கருத்துத் தெளிவே முக்கியம் கருத்தைப் புலப்படுத்த மொழி ஒரு கருவியே என்ற கருத்து நிலவுவதால் இன்றைய தமிழ் நடையில் சந்தி விகாரங்கள் பெரும்பாலும் அவசியமான இடங்களிலேயே இடம்பெறலாம்என்று வேலுப்பிள்ளை கூறியிருப்பது நினைவில் கொள்ளத்தக்கது.

பழங்காலத்தில் புணர்ச்சியின் அவசியமும் இன்றைய நிலையும்

                பழங்காலத்தில் தமிழ்ச் சொற்களில் புணர்ச்சி அதிகமாக இடம்பெறுகிறது காரணம் என்னவென்றால் பண்டைக் காலத்தில் செய்யுள் நடை அதாவது சீரும் தளையும் முக்கியமாகக் கருதப்பட்டது. செய்யுள் யாப்பின் ஒலி முதன்மையே புணர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பது சிலர் கருத்து.”16 அதோடு ஏட்டில் எழுத்தாணியைக் கொண்டும் கல்லில் உளியைக் கொண்டும் எழுதியும் செதுக்கியும் வந்த காலக்கட்டத்தில் இன்றுபோல் இடைவெளிவிட்டு எழுதும் பழக்கம் இல்லை. சொற்கள் சேர்த்துச் சேர்த்து சிக்கனமாகவும் நெருக்கமாகவும் எழுதும் வழக்கம் இருந்ததால் எழுத்தில் சிக்கனம் தேவைப்பட்டதால் எழுத்துகளைப் புணர்ந்து எழுதவேண்டிய அவசியமும் தேவையும் இருந்த காலம் அது. ஆனால் தற்காலத்தில் அப்படிப்பட்ட அவசியமுமில்லை. வேவையுமில்லை. சொற்களுக்கிடையே இடைவெளிகள் விடுவதோடு ஆங்கிலக் கல்வியின் பயனாய்த் தமிழுக்குப் புதுவரவாகக் கிடைத்துள்ள குறியீடுகளும் புணர்ச்சிகள் சிலவற்றைத் தேவையற்றனவாக்கி விட்டன”17 எனக் கூறப்பட்டுள்ளதிலுருந்து புணர்ச்சியின் தேவை குறைந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. அதோடு வல்லினமெய்கள் இடவேண்டிய இ;;டங்களில் அதற்குப் பதிலாகப்; காற்புள்ளி இ;ட்டு எழுதும் முறையும் வழக்கில் இருந்து வருகிறது. (எகா)

                மக்களில் ஒருமுகப்பட்ட வேண்டுகோளுக்கு, பல தலைவர்கள் செவிசாய்க்கவில்லை.இந்த தொடரில் வேண்டுகோளுக்குப் என்று எழுதியிருக்க வேண்டும் .ஆனால் காற்புள்ளி இட்டு ஒற்று தவிர்க்கப்பட்டு வந்துள்ளது. மேலும் மாணவர்களின் எளிய வாசிப்பிற்காகவும் சொற்களை புணர்த்தி எழுதும் வழக்கம் குறைந்துள்ளது எனவும் கூறலாம்.

மதிப்பீடு 

                புணர் என்ற அடிச்சொல்லைப் பின்பற்றி வரும் சொற்கள் யாவற்றிற்கும் சேர்தல்’ ‘இணைதல்என்ற பொருளையே தந்துள்ளன. தனிச்சொல்லுக்குள் நடைபெறும் புணர்ச்சி பற்றித் தொல்காப்பியர் கூறவில்லை. எனினும் நன்னூல் தனிச்சொல்லுக்குள் நடைபெறும் புணர்ச்சி பற்றித் கூறியுள்ளது.விகாரப் புணர்ச்சியில் நான்காவதாக நிலைமாறுதல் என்பதை சுவாமிநாத தேசிகர் கூறியுள்ளார். தோன்றல் விகாரமானது மொழியின் உச்சரிப்பில் எளிமை, பொருள் நிலைப்பேறு, ஒலிநயம் என்பதின் நலன் கருதியும் விதிகள் அமைக்கப்ட்டுள்ளன.உடம்படுமெய்கள் ய,;வ் மட்டுமல்லாமல் ம,;ர்,ன் என்பவையும் உள்ளன. உடம்படுமெய்களின் தோற்றம் சில இடங்களில் பொருள் முரண்பாட்டையும் சிரிப்பையும் ஏற்படுத்துகின்றன.       பழங்காலத்தில் எழுத்துச் சிக்கனம் தேவைப்பட்டதால் எழுத்துகளைப் புணர்ந்து எழுதவேண்டிய அவசியமும் தேவையும் இருந்தன. தற்காலத்தில் வல்லினமெய்கள் இடவேண்டிய இ;;டங்களில் அதற்குப் பதிலாகப்; காற்புள்ளி இ;ட்டு எழுதும் முறையும் வழக்கத்தில் இருந்து வருவதை காண முடிகிறது. இன்றுள்ள மொழியியலாளர் சில புணர்ச்சி விதிகளைப் பயன்படுத்திப் பல புணர்ச்சி விதிகளை கைவிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

குறிப்புகள்

1. திருஞானசம்பந்தம்.ச., நன்னூல், ப.72

2. சண்முகதாஸ்.அ., தமிழ்மொழி இலக்கண இயல்புகள், ப.123

3. திருஞானசம்பந்தம்.ச., நன்னூல், ப.113

4. இளங்குமரன்.இரா., தொல்காப்பியம், ப.128

5. மேலது ப.112

6. சண்முகதாஸ்.அ., தமிழ்மொழி இலக்கண இயல்புகள், ப.128

7. திருஞானசம்பந்தம., , நன்னூல், ப.113

8. வேங்கடராமன்.கா.கோ., இலக்கண வழிகாட்டி, ப.90

9. சண்முகம்.செ.வை., சுவாமிநாதம,; ப.51

10.சண்முகதாஸ.அ., தமிழ்மொழி இலக்கண இயல்புகள், ப.121

11. இளங்குமரன்.இரா., தொல்காப்பியம,; ப.127

12. திருஞானசம்பந்தம்.ச.,நன்னூல், ப.93

13.சொக்கலிங்கம்.க., உரைநடைத் தெளிவு ஓர் அறிமுகம், ப.75

14 மேலது, ப.75

15. இளங்குமரன்.இரா., தொல்காப்பியம், ப.428

16.சொக்கலிங்கம். க., உரைநடைத் தெளிவு ஓர் அறிமுகம், ப.71

17. மேலது, ப.71