4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

திரு.ப.ராஜசேகர் எழுதிய “மறைந்து போன தமிழ் இதழ்கள் (1800 – 1900)” –நூல் அறிமுகம்

நூல் அறிமுகம்முனைவர் பீ. பெரியசாமி

                    தலைப்பு  - மறைந்துபோன தமிழ் இதழ்கள் (1800- 1900)

ஆசிரியர்திரு..ராஜசேகர்

வெளியீடுஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 600 113.

வெளியீட்டு எண் – 1033

ISBN – 978-93-88972-35-2

பக்கங்கள் – 126

விலைரூ.80/-

நூலின் வகைஇதழியல் குறித்த ஆய்வு

நூல் பேசும் பொருட்கள்:

1.       தமிழ் இதழியல் ஆய்வுப் போக்கு

2.       இதழியல் தோற்றம், வளர்ச்சி, வரலாறு.

3.       இதழ்களின் மறைவு

4.       இதழியல் மாற்றம் - குறித்து விரிவாகப் பேசுகிறது.

நூலசிரியர் 1800-1900 வரை வெளிவந்த இதழிகளை தினசரி, வாரம், மாதம் இருமுறை மாதஇதழ், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இதழ்கள் என்று வரிசைப்படுத்தி அவற்றின் நிலைகளை விவரித்து இருப்பது அவரின் ஆய்வுப் புலமையினை வெளிப்படுத்துகிறது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு (2019) வழங்கிய ஆய்வேடே இந்நூல்.

            நூலாசிரியர் 1800-1900 கலத்திய இதழ்களைப் பொருண்மை அடிப்படையில் பின் வருமாறு மூவகைப்படுத்துகிறார்.

1. ஆங்கிலேயர்களுக்கு துதிப்பாடும் இதழ்கள்.

2. சமயப் பரப்புரை புரியும்இதழ்கள்,

3. சமுகப் பிரச்சனைகள். இந்திய விடுதலை ஆகியவற்றை முதன்மைப்படுத்துதலையும் ஆங்கிலேயரை எதிர்த்தலையும் செய்யும் இதழ்கள்.

            தமிழ் இதழியலின் தோற்றம் குறித்த விவரங்களும் 1800 – 1900 காலங்களில் வெளியான இதழ்களின் தொகுப்புகளும் அவை மறைந்து போனதற்கான காரணங்களும் இந்நூலில் தெளிவுற விளக்கப்பட்டுள்ளன.

1812 வெளியானமாசத்தின சரிதைஎன்ற தமிழ் மாத இதழ்தான் ஆசிய மொழிகளில் வெளியான முதல் இதழ் எனும் தகவல் தமிழ் மொழிக்குக் கிட்டிய அரும்பொருளாகும்.

மறைந்துபோன தமிழ் இதழ்கள் என்ற இந்நூல் இதழியல் ஆய்வுப்போக்கு இதழியல் தோற்றம், வளர்ச்சி, வரலாறு இதழ்களின் மறைவுக்கான காரணம், இதழியல் மாற்றம் என்ற அடிப்படையில் வகுத்தும் பகுத்தும் ஆராய்ந்துள்ளார். இதழியல் மறைவுக்கானக் காரணத்தை மூன்று கட்டங்களாக வகைப்படுத்தி அதற்கான காரணங்களை அழுத்தமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

சென்னை புதுப்பேட்டையை பூர்வீகமாகக் கொண்டவர். பி.. தமிழ் இலக்கியம் இளங்கலைப் பட்டத்தினைச் சென்னை இலயோலாக் கல்லூரியில் பயின்றார். பின்னர் முதுகலை (எம்.) ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டங்களைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய துறையில் நிறைவுச் செய்தார். தற்போது முனைவர் பட்டத்தினைச் (பி.எச்.டி.) சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையில் முனைவர் ஆ.ஏகாம்பரம் அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஆய்வு செய்து வருகிறார்.