4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

கை கதை சொல்லும்!


செ. பவித்ரா 

கீழ்வேளூர்,  நாகப்பட்டினம் மாவட்டம் 

                                             கைபேசி : 8124179895;  

மின்னஞ்சல் :abarpavi2000@gmail.com


        சோமு என்பவன் உலகம் தெரியாத ஒரு ஏழை வியாபாரி. ஊரில் உள்ளவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்யும் இயல்புடையவன். அவன் தாய் தந்தையின்றி வாழும்  பிள்ளை. ஒருநாள் சோமு தன் சொந்த வேலைகளை முடித்துவிட்டு அந்த ஆற்றங்கரையோரம் நடந்து வந்தான்.

        அந்த இடமோ ஊரின் பெரிய பணக்காரரான மாரி உடையது. அவர் அந்தப் பகுதியை தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு கொடுத்திருந்தார்.

         காரணம் என்னவோ அதிக பொருள்கள் அங்கு கிடைத்தால் ஊரில் தனக்கு நல்ல பெயர்  ஏற்படும் என எண்ணி தான்  நிலத்தை ஆய்வாளர்களுக்கு கொடுத்தார். இன்றோ மழை காரணத்தினால் அந்த ஆய்வாளர்கள் அங்கு வரவில்லை.

        அந்தப் பக்கமாக வந்த சோமு அங்கு ஒரு சிலையை கண்டெடுத்தான். அந்த சிலையோ பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. ஆனால் பாதி அளவு மண்ணில் புதைந்து கிடந்தது. இதனை எடுத்து பார்க்கலாமா என சிந்தித்து அதனை எடுப்பதற்காக அந்த சிலையைப் பிடிங்கினான். 

         ஆனால் அவற்றின் கைகள் மட்டும் தனியே உடைந்து வந்து விட்டது. என்ன செய்வது என்றே புரியாமல் திகைத்து நின்றான், சோமு. அந்த சமயம் இதனை நாம் மாரி அவர்களிடம் கொடுத்து விடலாமா! என எண்ணினான். அங்கு சென்றால் நம்மை ஏதாவது திட்டிவிடுவார்களோ என்னும் சந்தேகம் அவருக்கு ஏற்பட்டது. உடனே அங்கிருந்து வேகமாக தன் ஊரை நோக்கி ஓடினான். மழையும் சற்று நேரத்தில் குறைந்தது.

         சோமு தன் ஊரை அடைந்தான். மாணிக்கம் என்பவர் வழக்கம் போல வந்து சோமுவிடம் பேசினார். ஆனால் சோமுவுக்கோ ஏதோ நாம் செய்த தவறு இவருக்கு தெரிந்துவிட்டதாக எண்ணி எச்சிலை விழுங்கினான். பின் அவரிடம் ஏதோ பேசி சமாளித்து புறப்பட்டான். "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" போல காண்பவர்கள் எல்லாம் இவனை ஒரு குற்றவாளியாக பார்ப்பது போலவே இவனுக்குத் தோன்றியது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து ஓடிக் கொண்டிருந்தான்.

        அந்த சமயம் சோமுவிற்கு மிகவும் நெருக்கமான மாமா ஒருத்தர் அந்த பக்கம் வந்தர். அந்த மாமா ராமசாமியோ, இவருக்கு மிகவும் நெருக்கம். சோமுவின் பெற்றோர்கள் இறந்த சமயத்தில் சோமுவிற்கு மிகவும் உதவிகரமாகவும் பலமாகவும் இவர்களில் முக்கியமானவர் இவரே. ஆனால் இப்பொழுது ராமசாமி அவர்கள் கூப்பிட்டும் கண்டுக்காமல், சோமு தாம் செய்த தவறை இவர் கண்டுபிடித்து விடுவாரோ என  எண்ணி அங்கிருந்து வேகமாக ஓடி ஒரு மரத்தடியில் அமர்ந்தான்.

        அப்பொழுது அந்தப் பக்கமாக வந்த சோமுவின் நண்பர்கள் சிலர் சோமு ஏன் உன் முகம் துவண்டு இருக்கிறது என கேட்க, சோமுவோ நடந்ததை எல்லாம் அப்படியே கூறினான்.

உடனே நண்பர்கள் எல்லாம் அவரவர்களுக்குத் தெரிந்த சில தகவல்களைக் கூறத்தொடங்கினர். ஒருவனே டேய் சோமு இதை நீயே வச்சுக்காத போலீஸ் கண்டுபிடிச்சா அடி பின்னி எடுத்துடுவாங்க என்றும் இன்னொருத்தவனோ, இதை நீயே வச்சுக்கோ டா வச்சுகிட்டு பிற்காலத்தில நீ இத வித்தா பெரிய கோடீஸ்வரன் ஆகலாம் என்று சிலரும், மற்றொருவனோ இதை நீ கண்டுபிடித்ததாகக் சொல்லி போலீஸ் கிட்ட ஒப்படைச்சா உனக்கு தான் அதிக பணம் கொடுப்பார்கள் என சிலரும் ஏதேதோ கூறினர். இப்படி அவரவர் தங்களுக்கு தெரிந்ததை எல்லாம் கூறத் தொடங்கினர்.

        சோமுவிற்ககோ ஒன்றும் விளங்கவில்லை. அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்று அந்த கையை பார்த்தப்படியே கண்களை மூடினான்.

ஆழ்ந்த சிந்தனையில் படுத்திருந்த அவனோ, ஏதோ ஞான உதயம் பிறந்தது போல திடுக்கிட்டு எழுந்தான்.

        உடனே அந்த கையை எடுத்துக்கொண்டு விருவிருவென போலீஸ் ஸ்டேஷன் நோக்கி நடந்தான். போலீஸ் இடம் தான் கண்டுபிடித்ததாக கூறு என கூறிய நண்பனோ மற்ற நண்பர்களைப் பார்த்து சிரித்தான்.  சோமு அதிகாரிகளை சந்தித்து ஐயா இதனை நான்தான் உடைத்தேன் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் என கூறி உடைத்ததற்கு தன்னால் இயன்ற அளவிற்கு பணத்தையும் சேர்த்து கொடுத்துவிட்டு வெளியே சென்று தன் நண்பர்களை பார்த்து புன்முறுவல் புரிந்து, தன் மாமா ராமசாமியை பார்த்து கூப்பிட்டிங்களா மாமா? என்றான்.