4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

இன்னுமா தூக்கம்

 



விழித்துக் கொள் என்றேன் கண்களை
பொறு பொறு என்றது மூளை
கனவை கலைத்து விடாதே
என்றது இதயம்

பொறுமையோடுகவனித்தேன்
சிரிப்பில் முகம் சிவந்தது
சட்டென்று கோபத்தில் வெடித்தது
பின்பு அழுகையாய்மாறியது
நவரசம்பொழிந்தது முகம்

நாடக ஒத்திகை நடக்கிறது
என்ற வியப்பில்உற்றுநோக்கினேன்.....

கேள்விக்கணைகள்சரமாரியாய்
இதழ்கள் உமிழ்ந்தன.

விழி மூடியகருப்புத்திரையில்
உரிமை ஒளி(லி)ப்படம்.

கருப்பை அழிப்பதில்
கருப் (பை) நிறத்தை மறந்துவிடாதீர்கள்

என் குருதி சிவப்பு
உன் குருதியின் வண்ணம் வேறுஎன்றால்
வர்ணம் பிரித்து மேன்மைக் கொள்

புரியாத மொழியில் பிதற்றாதே
புரியும் மொழியில் ஓதிடு...

கல்வியைபுசிக்கவிடாமல்புசித்தவர்கள்
இன்று வரை
கல்வி பட்டினியில்
நாங்கள்.

புறம் தள்ளியே
முன்னிலையை தக்க வைத்து
முதுகில் சவாரி செய்தவர்கள்.

எம் முதுகு நிமிர்ந்த விட்ட வருத்தமோ...
சவாரி செய்ய முடியாதஏக்கமா?

விழித்துக்கொண்டேன்என்பது
உன் புலம்பலா அல்லது
இன்னும் எப்படி தூங்கவைப்பது
என்ற சிந்தையா

இப்படி ஒரு நாடகம் அரங்கேறியதை
என்னால் அறியமுடிந்தது
நாடகத்தின் பெயர் என்ன
என்று கேள்விச்சிந்தனையில்மூழ்கினேன்

சட்டென்று - அம்மா

இன்னுமா தூக்கம் என்றாள்

அதட்டலில்
அத்தனை ஒப்பனையும்
மென்று விழுங்கி
உயிர் உடல் என்னும்
ஆடையை ஏற்றது.

இருப்பினும்நிர்வாணமாய்

உணர்கிறேன்

முதல்முறையாக

ன்னையேஎன்சிந்தை

அதட்டுகிறேன்
இன்னுமா தூக்கம் என்று.....


புனிதஜோதி
சூளைமேடு
சென்னை 94
8760798455
mirrageunfold@gmail.com