4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

மாற்றத்திற்கு வித்திடு பெண்ணே..! - பா. மகேஸ்வரி

 


மாற்றத்திற்கு வித்திடு பெண்ணே!

மாற்றத்திற்கு வித்திடு பெண்ணே!

அக்கினிப் பறவையே உந்தன்

நம்பிக்கைச் சிறகை விரி!

 

அடைப்பட்டு கிடந்த உந்தன்

அறிவை அகிலம் அறிய

மாற்றம் என்னும் திறவுகோலை

கையில் எடு!

 

அகிலத்தை மாற்றும் அத்தனை

வல்லமையும் உன்னில் உண்டு!

அம்பிலிருந்து புறப்பட்டவில்லாய்

விரைந்துவா!

 

அடிமைத்தளைகளை உன்

அறிவைக்கொண்டு அகற்று!

பறக்கத் தொடங்கு வானம் உன்

கைக்கெட்டும் தூரமே!

மாற்றத்தை விதைத்துக் கொண்டேபோ

ஏமாற்றம் புதைக்குழிக்குள்

தானாய் போகும்!

 

தன்னிகரில்லாதவள் நீ!

தனித்துவமானவள்  நீ!

உன்மாற்றத்தின் வெளிச்சத்தில்

மண் மலரட்டும்!

 

தேனீயாய்மாறு அறிவை

தேடித்தேடி சேகரி!

வாழ்க்கை பாலையாய்  கிடந்தாலும்

முயற்சியால் சோலையாய்  மாற்று!

 

முடக்கிப்போடும்  முட்டுக்கட்டைகளையும்,

மூடத்தனத்தையும்  உந்தன் ஞானத்தினால்

நசுக்கிஎ றி!

எல்லாம் விதியென்று புலம்பாதே

உன்மதி கொண்டு அதைமாற்று!

 

உலகம் உன்னைத் தூற்றும்

கவலை கொள்ளாதே பெண்ணே

நாளை நிச்சயம் உன்னைப் போற்றும்!

நீ விதைக்கும் மாற்றம்

உன்னை ஒருநாள்

ஏணியில் ஏற்றும்!

 

கலங்கி நில்லாமல் வாழ்கைத்தரும்

வலிகளை வலிமையாய் மாற்று!

இன்று உன்னுடையது என்று நினை,

நாளை உனக்கானதாய் மாறும்!

 

மண்தாண்டு, மலைதாண்டு

கடல்தாண்டு, கண்டம்தாண்டு

முயற்சியை இனம் கண்டு!

உன்பாதங்கள் பலவழித் தடங்களை

இவ்வுலகிற்கு  வழங்கட்டும்!

 

கனவுகளை உன்கண்ணிலும்

பாதைகளை உன்பாதங்களிலும்

வைத்துநட!

முற்றுப்புள்ளி அல்ல நீ

முடிவுறாப் பக்கம் நீ!

 

எழுதுகோல்  கொண்டு

ஏறுபோல்  நடப்பாய்!

ஏவுகணை  அனுப்பி

உலகை   அளப்பாய்!

 

இறப்பை  கருத்தில்  கொள்ளாமல்

இலக்கை கருத்தில் கொள்ளும்

பீனிக்ஸ் பறவை  நீ!

தவழ்  காற்றுடன்

உழல்   அனலுடன்

வெல்  இவ்வுலகுடன் ……

பா. மகேஸ்வரி

இளங்கலை தமிழ்இலக்கியம்

மணக்கால் அய்யம்பேட்டை, திருவாரூர் மாவட்டம்.