4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 டிசம்பர், 2020

காற்றில் கரைந்த கீதம் - தா.சரவணன்

 

 

காற்றில் கரைந்த கீதம்

நெல்லூரில் பிறந்து

எல்லா ஊரிலும்

இசையால் நிறைந்தவனே

 

உன் குரலை

இசையில் கலந்து

காற்றில் நீ விட்ட

போதெல்லாம்

எங்கள்

செவிகள் எடுத்து

இதய சிம்மாசனத்தில்

அமர்த்திக்கொண்டது

பிறகு ஏன்

இவ்வளவு சீக்கிரமாய்

இசைப்பதை விட்டுவிட்டு

இறைவனிடத்தில்

இளைப்பாற போனாய்

 

பட்டி தொட்டி எங்கும்

 உன்

பாடலை பரப்பிவிட்டு

 இன்று நீ

நிரந்தர படுக்கையாய்

ஆனது நியாயம்  தானா?

 

இன்னும்

மூச்சு விடாமல்

பாடுவாய் என்றிருந்தோம்

மூச்சே இல்லாமல்

போவாய் என

நினைக்கலையே!

 

பன்முக வித்தகனே

பாடல்களில் பவனி வந்து

அழுகின்ற மனதை

தாலாட்டுபவனே

இன்று நீ

மெளனமாகி விட்டதை

கேட்டு தாங்கலையே நெஞ்சம் !

 

மண்ணுலகை

மகிழ்வித்து

பல கோடி

மனங்களில் மலர்ந்த

உன்னை

விண்ணுலகிற்கு

அழைத்து சென்றவன்

செவிடனாய் இருந்திருப்பான்

ஆம்

அப்படி இல்லை என்றால் 

அவன் 

உன் பாடலை கேட்டு

உன்னுடனே

தங்கியிருப்பான்

 

பன்மொழி பாடகனே

எங்கள் தின

பாடசாலை நீ தானே

இனி புதிதாய்

பாடல் சொல்ல

இல்லாமல் போனாயே

 

எத்திசையிலும்

உன் பாட்டு

உள்ளம் இனிக்குமே

அதை கேட்டு

இனி

உன் பட்டோடு நினைவு

எப்படித்தான்

விடியுமோ இரவு

 

கடலாய் திரளும் 

உன் கானம்

கதவடைத்து போனதனால்

எங்கள் கண்கள் எல்லாம்

ஈரம்

 

கடின சொற்களையும்

கனிவாக்கி தருபவனே

நீ கண்முடி காணாமல்

போனதனால்

எங்கள் கண்களில்

கண்ணீர் கோலம்

 

தா.சரவணன்

9786577516

கல்யாணமந்தை

திருவண்ணாமலை (மாவட்டம்)635703