4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 மே, 2021

விரல் பேசும் வித்தை ! - இரா. விஜயலெட்சுமி,

 

விரல் பேசும் வித்தை !

 

விரைந்து நடந்தால் வீதி தேய்ந்துவிடுமோ                            

நிமிர்ந்து நடந்தால்  நீரூபம் முட்டிவிடுமோ                                        

நீரில் நிந்தினால் தேகம் குளிர்ந்துவிடுமோ – எனச்

சோம்பித் தயங்கித் தேங்கி நிற்போருக்குத் தன்

தேகம் கூட சுமைதான் !

கரையில் நின்று கனவு காண்போர்க்கு                                 

 அச்சம் மட்டுமே மிச்சம் !

களத்தில் இறங்கிக் காரியம் ஆற்றுவோர்க்கு                      

அச்சமெல்லாம் துச்சம்!           

விரலசைவில் ஆயிரம் வித்தைகள்

கத்தையாய் ஒளிந்திருக்க    

வெறுங்கை எனும் வெற்றுப் பேச்செதற்கு?                       

கையாலாகாத் தனமெதற்கு? 

குப்பையில் கிடந்தாலும் நிறம் மாறா

குன்றிமணியைப் போல்,               

காகிதம், கப்பலாய் கவின்பெறுவதும்     

பூக்களாய் பூப்பதும்

நெகிழிப் பொருள்கள்  நெளிவுசுளிவுடன் 

விதவிதமாய் வடிவங் கொள்வதும்           

கல்லெல்லாம் கலையழகுடன் கண்சிமிட்டுவதும்

சிலையெல்லாம் சிங்காரத்துடன் சிரித்திருப்பதும்      

களிமண்கூட காவியமாய் உருப்பெறுவதும்  -  இன்று

கழிவுப்பொரு ளெல்லாம் கலைப்பொருளாய்

கோலங் கொள்வதும்

மனிதனின்  கைவண்ணத்தால் !!                   

வண்ணவண்ணமாய்  எண்ணத்தில்

கற்பனைச் சிறகசைக்க           

வனைதற்கு முனைந்திடு !   

வளைந்திடு! வனைந்திடு!

   

நம்பிக்கைத் சூரியன் உதித்திட்டால் 

நீயும் பிரம்மாவே!!              

சுடர்விளக்காய் நீயிருந்நால்    

தூண்டிவிட விரல்களா இல்லை? 

வாய்ச்சொல் வீரராய் வலம்வராது

நெஞ்சில் உரங்கொண்டு              

முடியுமென்ற முனைப்போடு

மன ஒருமைப்பாடெனும்

கவசமணிந்து செயல்வீரம் காட்டினால்      

ஆயிரமாயிரம் வித்தைகள்         

பேசாதோ உன்விரல்கள் !

ஆயிரமாயிரம் கலைகள்        

வடிக்காதோ உன்கைகள் !

  இரா. விஜயலெட்சுமி