4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 நவம்பர், 2021

நாற்காலியும் மேசையும் - முனைவர் கோ.வ.பரத்வாஜ்

 


நாற்காலியும் மேசையும்

தாய் மடியில் அமர்ந்தேன்

ஜென்ம மேசையைக் கண்டேன்

தந்தை மடியில் அமர்ந்தேன்

தடைகளைத் தகர்க்கும் மந்திர மேசையைக் கண்டேன்.

 

பாட்டன் பாட்டியோடு திண்ணையில் அமர்ந்து கதை கேட்டேன்

இராஜாக்களின் ஆளுமை மேசை கொண்டேன்.

 

பள்ளிக் கல்லூரியில் அமர்ந்தேன்

ஆற்றிவு சீர்படுத்தல் என்னும்

ஆசானின் மேசையைக் கொண்டேன்.

 

அரசாங்க வேலையில் அமர்ந்தேன்

நாடுயுர ஆவண மேசையைக் கொண்டேன்.

 

மண வாழ்க்கையோடு அமர்ந்தேன்

இல்லறம் நடத்த கணக்கு மேசையைக் கொண்டேன்.

 

ஓய்வு நாற்காலியில் அமர்ந்தேன்

ஓரம் ஒதுக்கிய ஆயுள் காலத்தான் (எமன்) மேசையைக் கொண்டேன்.

 

திண்ணை, மனைக்கட்டை, நாற்காலி, மேசை,  மேடை

இவ்வைந்திலும் எது சிறந்தது?.........

 

வாழ்க்கையே நீ தீர்மானிப்பாய்………. 

முனைவர் கோ..பரத்வாஜ்