4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூன், 2022

வணிகமாகிய வாழ்க்கை - முனைவர் கோ.வ.பரத்வாஜ்

 

வணிகமாகிய வாழ்க்கை

ஒத்த இயற்கை வாழ்க்கையை பிடித்தது

நம்பிக்கை கைவீசுங்க கடைக்கு போகாதீங்க என வணிகத்தின் பல்லவி நுகர்வோரின் சரணம்

மஞ்ச வெள்ள பைகளுக்கு இன்று காது அறுத்து போச்சு

கடல் சேரனுக்கு நீல ஆடையை தோலில் போட்டு

வெண்ணிற இதழ்களால் முதல் வணிகன் என உச்சரித்தபடியே

அக்கரையின் துறையில் முகங்களை பதிக்கும் நாவாய் கூட்டங்களின்

முதுகு சுமையை வணிகர்கள் ஏற்ற இறக்கத்தை உள்ளங்கையின்

திசையில் பார்க்கின்றன

கோவலன் கண்ணகி  நெல் விற்பனை குடும்பம்

ஆதலால் தான் கடைவைத்து வாழலாம் என்றது விவசாய சமூகம்

பாண்டியனின் கபாடமும் , புதுப்பினாரின் வைரமும் போன்ற ரத்தினங்கள்

என்  கணிதத்தில் வெளிச்சமயம் ஆகியது

காவேரியின் வாய் சிவந்த வெற்றிலைக்கும் கெங்கம்மா

சமச்ச கோதுமை அப்பத்திற்கு உறவானது

இல்லத்து மணியை அழுத்தி இறைவனின் கற்பூரம் போல் பல நிறுவனங்கள்

உடை , இடம் தொடும் ஆவிரல் வலிப்பதே இல்லை

உப்பு மூட்டையை சுமந்து செல்லும் கழுதைகள் இன்று தண்ணீரிலும் செல்கிறது

காக்கா நரி ஆயா வட  சுட்ட நிலா கிடங்கில்  அதிபர்கள் அடுத்த கணமே

மானிடா! அழியாத வரம் தான் வணிகம் வாழ்கையின் ஆதாரமே !

 

                                        முனைவர் கோ..பரத்வாஜ்