4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2022

கவி நிழல் - முனைவர் கோ.வ. பரத்வாஜ்

 

கவி நிழல்

பிறப்பு வளர்ப்பு இறப்பு

இதில் கண்ணதாசன் கவிநிழல் தலைப்பு

 

வராதே! என்றது கல்வி நிழல்

வா! என ஊட்டியது சுவைத்தமிழ் நிழல்

 

இன் திரையுலகைப் பஞ்சணையாய் விரித்து

துன்பத்தலையணையைப் போட்டு வகுத்து

கனவு நிழலானவன்

 

காற்று, தோல், தந்தி, மின்பலகை,

இக்கருவினுள் பிறந்த துள்ளல் நிழலானவன்

 

பாமரர்களுக்கு எளிய படத்தின்

நடை நிழலானவன்

 

பழுதாகாத இலக்கண இலக்கிய சுழலியின்

தமிழ்த்தேர் நிழலானவன்

 

 

இறைவன் இயற்கை

விலங்கு பறவை

காதல் உறவினர்கள்

இச்சமூகத்தின் அனுபவத்தின் அனுபவத்தை

எழுதுகோலில் எழுத்தை நூலாய் கோர்த்து தைத்த

ஏட்டின் நிழலானவன்

 

அரசியலரை பேசுபவதும் ஏசுவதும்

கட்சி மேடையின் நிழலானவன்

 

பதினெட்டு திங்கள் சிறையில் மாங்கனி மரத்தின்

காவிய நிழலானவன்

 

பொதுவுடைமைக் கருத்துக்களைக்

குவித்த மலையின் நிழலானவன்

 

பின்விளைவுகளைச் சொல்லும்

அஞ்சாத நிழலானவன்

 

தன் குரலில் முப்பாட்டு இசைத்ததோடு

இடுக்காட்டில் தத்துவத் தனல் நிழலானவன்

 

இக்கவிஞனின் நிழலை முனைவர் கோ.. பரத்வாஜ்

இங்ஙனம் வணங்குகிறேன்.

 முனைவர் கோ.. பரத்வாஜ்