4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2022

எங்கும் பெண்மை எதிலும் முதன்மை - முனைவர் கோ.வ பரத்வாஜ்

 

 எங்கும் பெண்மை எதிலும் முதன்மை   

                                                                                        பெண்ணாக பிறந்து, பருவமடைந்து, கல்யாணம் ஏற்று,

உண்டாகி, அம்மா என்னும் தோற்றம் எடுத்து

ஆறாம் நிலையில் மூதாட்டியானவளே

ஆறு அறிவைவார்த்து தந்த பெண்மையே,                                                                          மதிப்பில்லா இரு புஜ்ஜியத்தை இணைத்து

மண்விண்ணோடு மதியாக வீசும் முதன்மையே!

சிறையாளருக்கு  கல்வி அறிவு விளங்கு பூட்டிய

கிரண்பேடி குற்றவாளிகளின் உற்ற தோழியானாள்

இதோ மகளிர் பின்பற்றும்படி.                                                               

பிணியில் திரிந்தவர்களை அன்னை தெரேசா திருத்திக் கோடிட்ட வீதிகளில் இன்றைய சமூகச் சேவை முதன்மை.                   சிசேரியனில் பிறக்கும் ஆண் சிசுக்கள் க்யாங் க்யாங் என்ற நன்றி கிளியோப்பட்ராவுக்கு.                                      வேதனையான வானும் அறிவியலின் ஜோதியாக

மண்ணுக்கு விடாமல் சமாதி ஆக்கிக் கொண்டது,

கல்பனா சாவ்லா போல் சாதனையின் சந்திராக்கள் விண்கலத்தில்.                                      

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு

விடை சமையலறையில் பெண்மை.                                                        கோவிலில் கல்லாத சக்தி விமானத்தை இயக்குகிறது

மண்ணில் மாந்தர் வணங்கிய முன்னேற்றத்தின் போராமையால்.                                                மாநிலங்களின் எல்லையில் ஒக்கூர் மாசாத்துவான் தரும்

வேல் போல் சிலை அமைத்திடுங்கள்.                 அரளிச்செடியில் உரமான பெண்கள் இன்று

முதன்மையை நோக்கி ஆலமரம் போல்

விண்ணைத்தொடும் அளவிற்கு வளர்ச்சியே .                                                   கி-பி-மு  08,17,26 எண்ணில் பிறந்தவர்கள் எல்லாம்                 பெண்கள் சிறப்பு பெற்ற மூன்றாம் மதமே,

எங்கும் பெண்மை எதிலும் முதன்மை!       

                       முனைவர் கோ.வ பரத்வாஜ்