4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2022

கற்க கசடற - முனைவர் கோ.வ.பரத்வாஜ்

 

                             

         கற்க கசடற                                                                               பிறப்பில் முதல் குரல் அம்மா                                                 

இறப்பில் கடைசி குரல் அப்பா - இதை

யார் கற்பித்தது தாய் தந்தைக் கையில்

இயல் ,இசை , நாடகம் கற்றோம்        

மூன்றாம் கண்ணை  திறந்து

எட்டு திக்கிலும் வாழ் என்ற ஆசான்  கிழக்கு அல்லவா அத்தி , அரசு , ஆலம் ,வேம்பு அடியில் கற்றவன்

அரசன்    ஆனதும்  வசிப்பதற்காக அவற்றை சாயக்கிறான்

பிறந்தநாளுக்கு ,கல்யாண நாளுக்கு அச்செடியை வழங்குவது சரியோ!

பறவைகள் , விலங்கு குணத்தை விளையாட்டு பொம்மையோடு

குழந்தையின் பயம் போயே போச்சே

ராணுவம் ,ரயில் , வானூர்தி ,பேருந்து நிலையங்களில்

கேட்டலின் படி ஓடுகிறார்கள் அங்கு தாமத்திற்கு  தடமில்லை

ஐம்பொறிகளின் பல்கலைக்கழகத்தில் அசைவு கற்றலில்நிசத்தமாய்

மன நோயாளிகள் அவர்களை வாழவைக்கும் சமுதாயம் தானே

ஹெலன்கிலர் தொடுவுணர்வால் படித்ததால் ஐம்பூதங்களும் கற்றுக்கொண்டது

கண்ணுக்கும் கைக்கும் இடையே ஞானவித்தகரை பெற்ற

ஜி்.டி நாயுடுவின் பார்த்து கற்றல் ஆரம்பம் தானே

ஓரமாய் நின்ற டிராக்டரில் கட்டபட்ட காளை

உந்தன் மகசூல் இவ்வளவு தானே அம்மா …

உழவன்,புயவன்,வேடன் சுயமாக முதலில் கற்றவர்கள் இவர்கள்தான்

கசடுகளை நீக்கி மென்மேலும் கற்கவே நாம்முயலூவோம் என

திருகுறள்  வழி நின்று விளக்குவோம் நிற்க அதற்கு தக.

முனைவர் கோ..பரத்வாஜ்