4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2022

உள்ளிருப்பு - மைத்திரி அன்பு

 

உள்ளிருப்பு

 

மெளனம் உடைத்தெரிந்த மனதோடு

அலைகழிப்பின்

ஆடைபூண்டு

மயிரிழைகள் சிலிர்த்தெழ...

என்னையே கடைந்தெடுத்துக்கொண்டு

வருகிறது காதல்.

 

திறந்து பார்க்கத் தூண்டும்

ஆசை கிளறியாய்

அஃது ஆர்பறிக்க...

நினைவில் உருளுகிறது

உன்ஒரு இருப்பு.

 

எப்படித் தொடர்வது

உருக்கமற்ற உணர்ச்சிகளால்

வழியும் கண்ணீரிலும்;

நாவின் நீர்கசிவிலும்

தென்படாத என்னையும்;

எனக்கான உள்ளிருப்பையும்

 

நானாகவும் நீயாகவும்

எனக்குள் நானே அந்நியமாகும் வரை

உணரவேயில்லை

புணர்ச்சியின் திணரடிப்பை!

 

மெளனத்தினூடான சாத்தியக்கூறு

நிசப்தம் தழுவ

வந்து போகும் காற்றிலும்

தொடர்ந்து வரும் நிழலிலும்

பிணைதர மறுத்து களைகிறது

நமக்கான காத்திருப்பு!

 

எப்படியேனும்.. ..

முன்னேற்பாடுகளைத் தாண்டி

பிறர் கணிப்புகளுக்கு அப்பாற்ப்பட்ட

நடத்தை

ரகசிய உறவாய் தொடர...

வந்து விழுந்து விடுகிறது

அந்தரங்கமதை எடுத்துடுத்திய

காதல் நிழற்பாடுகள்!.