4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 செப்டம்பர், 2022

கடவுளும் கவிஞனும் - முனைவர் கோ.வ.பரத்வாஜ்

 

கடவுளும் கவிஞனும்

 

ஆகாயமும் ஆழியும்

இணையாத கருவறையின்

இறைவன்.

 

ஐம்பொறிகளில்

வாய் இல்லாததால்

பின்னணிக் குரல்

கவிஞன்.

 

கிறுக்கல் வடிவம் அவன்.

 

துதிப்பதற்குத்

திருத்திக்

கீதம் இசைத்த

கவிஞன்.

 

செய்யும் தொழிலே தெய்வம்

எனக் கடவுள்

கவிஞனிடம்

கேள்விக் கேட்கவில்லை.

 

இயற்கை அவன்

கையைப் பிடிக்கும்போது

கொரனா என்று

பாராங்கல்லாக்கிவிட்டான்.

 

இதோ,

 

சுடல மலை

சுண்டு விரல் வைத்தால்

தரும் யோகக் கலை

வரைந்தான் கவிஞன்.

 

உரிமைகளை

கட்டத்தில் எழுதாத

உத்தமன்.

 

அவைக் கவிஞனாக்கி

குடியுரிமை என்றால் என்ன?

 

ஆழம் போல் உயர்ந்து

வையகத்தில் புதுமையைக்

கண்டான்.

 

விழுதே!

எனை விழச்செய்யும்

மண்ணின் தாக்கத்தை

மடக்கு என்றான்.

 

அருகம்,

மஞ்சள் பிடியான்,

பரிசுத்தன்,

மிலிடி,

கலைஞானி,

கணினி,

எண்ணுப் பெயர்களில்

மாறுபவன்.

 

ஆண்டவன்,

இறைவன்,

உயிரானவன்,

ஏகன்,

ஐயன்,

ஒருவன்,

அவ்விதமாய்

துளி ஓசையின்

கவிநயம் எனது.

 

தமிழ்த் தோட்டத்தில்

அவனைக்

குறிஞ்சி என்பேன்.

நூறாவது மலராக

நான்

உன்னிடமே.

 

கால்கோளால்

நின்னைப் பற்றி

எழுதுகிறேன்

முக்காலத்திலும்

நம்மைப்

பிரிக்காத இயல்

இதுவே.

 

- முனைவர் கோ.வ.பரத்வாஜ்