4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 செப்டம்பர், 2022

தமிழர் பண்பாடு எங்கே போயிற்று - மு.பிரேமா

 

தமிழர் பண்பாடு எங்கே போயிற்று

(உடை, கலாச்சாரம், மனிதநேயம், விருந்தோம்பல்)

 

 

நம் கலாச்சாரம் கட்டவிழ்த்து விட்ட

மாடுகளாக சுற்றி திரிகிறது

நம்தமிழ் பண்பாடு எங்கே போயிற்று!

ஆடைகளை அணிவதில் கூட

மேலை நாட்டு பழக்கத்தை பின்பற்றுகிறோம்

நம்பாரம்பரிய உடை எங்கே

பண்டிகை காலத்தில் மட்டும் தானா?

நம் தமிழ் பண்பாடுஎங்கே போயிற்று!

பண்பாடுகள் எல்லாம் நடைமுறையில் கொட்டிக்கிடந்தது

அன்று இன்றோ போய் பாருங்கள்

தெருமுனையின் பொது சுவற்றிலே ஒவியமாக

அதில் அசுத்தம் செய்யாமல்

இருக்க மட்டும் தானா?

நம் தமிழ் பண்பாடுஎங்கே போயிற்று!

 

 

செடி கொடிகளுக்கு கூட  மதிப்பு

கொடுத்து முல்லைக்கு தேர்

கொடுத்தான் பாரி அன்று இன்றோ

மனிதஉயிர் துடித்துடித்துக் கொண்டிருந்தாலும்

கண்டுக் கொள்ளாமல் போவது இன்று

நம்தமிழ் மனிதநேயம் எங்கே போயிற்று

விருந்தினரை வரவேற்று உபசரித்து இன்முகம்

காட்டல் அன்று இன்றோ

இயந்திரத்தைப் போல ஓடி உழைத்துக்

கொண்டிருக்கிறான் பண்பற்று, பாசமற்று,

மனிதநேய மற்று! நம்தமிழர் பண்பாடு எங்கேபோயிற்று!


வாழ்க தமிழ் வளர்க தமிழ் பன்பாடு 



மு.பிரேமா,

முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி,

குற்றாலம்-627802

Ph9791881659.  premakannan1993@gmail.com