4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

குறுங்கவிதை


 

முயற்சி

விபரீதங்கள்

முட்களாய்க் குத்தினாலும்

எண்ணங்கள் திசைமாறிப் பறந்தாலும்

மனதில் முயற்சி உடையவர்

மனம் ஒன்றிச் செயல்படுபவர்

வெற்றிக்கனியை எட்டுவர்||

மனஉறுதி

மனதில் உறுதி உடையவர்;

மலையையும் பிளப்பர்

வானம்

அவருக்குத் தொட்டுவிடும் தூரம்தான்||

சுமை

சும்மா இருப்பதே

சுகம் என்பவன்

பூமியில் பிறந்ததே

சுமை என்பான்||

குறிக்கோள்

குறிக்கோள் இல்லாதவன் மனம்

அவனுடன் செயல்பட மறுக்கும்

குறிக்கோள் உடையவன் மனம்

அவனுடைய உறக்கத்தைத் துரத்தும்||

 

தம்பதியருக்கு விண்ணப்பம்

குழந்தைச் செல்வம் வேண்டி

கோயில் கோயிலாய் ஏறும் தம்பதியரே

ஏங்காதீர்

பெற்றால்தான் பிள்ளையா

குப்பைத் தொட்டியிலும்

சாக்கடை நீரிலும்

தள்ளப்பட்ட மழலைகள்

கடவுள் உமக்குத் தந்த பரிசு

அதை ஏற்றுக்கொள்வீர்

மனிதனாகப் பிறந்ததன்

பயனை நுகர்வீர்||

 

 

பரிசு

அன்பு ஒன்றே தெய்வீகம்

அதுவே உம்மானசீகம்

அன்பில் திளைத்து

பண்பில் உயர்ந்து

உம்மை நாடும் சுற்றம்

உம்மைத்தேடும் நட்பு

அதுவே கடவுள் தந்த பரிசு||

முனைவர்.செ.நாகஜோதி

உதவிப்பேராசிரியை,

வே.வன்னியப்பெருமாள்பெண்கள்கல்லூரி,

விருதுநகர்.