4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

ஊரடங்கு நீட்டிப்பு



சேதி  தெரியுமா சேதி தெரியுமா

சீனா வூகானில் புதிய வைரஸ்

அப்படியா...

 அதற்கென் இப்ப?

அங்கொன்று இங்கொன்று பரவுது

இங்க பார்த்தாயா கொரானாவ

அமெரிக்காவையும் ஐரோப்பாவையும்

ஆட்டி படைக்குது -ஐயோ

அடக்கம் பண்ணுது

ஆசியாவை ஒண்ணும் பண்ணாது தெரியுமா?

வெயிலோ வெயில்...

அலட்சியம் அதீத  நம்பிக்கை

வருது வருது எங்கும்

 கொரானா பரவுது பரவுது

அம்மையை வேப்பிள்ளை தடுத்தாற்போல...

எந்த நோயும் மருந்து கொடு சரியாகும் மூத்தோர் சொல்

எல்லாநாடும் மருந்து தேடிகிட்டேயிருக்குது?

மருத்துவமனைகள் கூடிற்று

மருத்துவர்கள் கூடினார்கள்

மக்களைவெளியேவிடாது காவலர்கள்காத்தனர்

துப்புரவாளர்கள் தூய்மை காத்தனர்

கைகளை அன்றாடம் கழுவினோம்

முக கவசங்களை அணிந்து கொண்டோம்

கபசுர குடிநீர் குடிக்க பழகினோம்

காய்கறியை கழுவிப் பதப்படுத்தி உண்டோம்

எதிர்ப்புச் சக்தியைகூட்டிக் கொண்டோம்

வைரஸை கண்டு கதிகலங்கி நிற்கிறோம்

வையத்து கடவுளரை வணங்கி நிற்கிறோம்

விதி வந்தால் போவோம் ஒரு சாரார்

மதி வழியே மருந்து தேடும் ஒரு சாரார்

நிதி வேண்டி நீதிமன்றத்தில் ஒரு சாரார்

 நதி நீந்தி  குடிமகன்கள் ஒரு சாரார்

எல்லாநாட்டிலும்உயிரின் போராட்டம்

தனிமனித விலகல்இல்லையே?

 சமூக விலகல் இல்லையே?

தானாக பரிசோதனை தவிப்போர்க்கு தேவை உதவி

ஊரடங்கு நீட்டிப்பு 

ஊர்மக்கள் பரிதவிப்பு...

இந்நிலை எப்போது மாறுமோ?

இறைவா இயல்புநிலைக்கு இக்கணமேஅழைத்துச்செல்!

இயற்கை யோடுவாழ்ந்தோம்

அந்த நாள் எப்போது மலரும்?

கொரானா வைரஸோடு  அல்லவா?
கவலையுடன்  இன்று வாழ்கிறோம்

காத்திடு உலகை காத்திடு

காத்திருப்போர் பட்டியலில் உலகமாந்தர்கள் யாவரும்...

  

ச.குமார்
உதவிப்பேராசிரியர்
அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.மதுரை-625104
8610845737