பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு
அந்த பாரத நாட்டை பார் தான் (உலகு)
பார்த்து சிரிக்குது – அதற்கு
சாதியும் மதமும் சான்றாய்
நிற்குது
பார் முழுதும் பார் தான் (மதுக்கூடம்)
திறந்து கிடக்குது தமிழகத்தில்
மட்டுந்தான் பாரால்
ஆட்சி நடக்குது
மதுவிற்கு ஆண் சமூகம்
அடிமையாய் கிடக்குது
மாதுவெல்லாம் மதுவால் மயங்கி நிக்குது
மது விற்பனையை அதிகரித்து
மனிதனின் மதியை குறைத்தார்கள்
காரணம் கேட்டேன்
மக்கள் திட்டம் நிறைவேற்ற மது விற்பனை
மக்கள் திட்டம் என்ன
தாலிக்கு தங்கம் வழங்குதல்
ஓ... ஒருத்தி தாலி அறுத்து
மற்றொருத்திக்கு தாலியா?
9159526673
Selvanabi90@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக