4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

புத்திசாலி பெண்


திருமதி. கா. இந்திராணி

நிறுவனர்பிரபா பப்ளிஷிங் ஹவுஸ்

வெளியீட்டாளர்இலக்கியச்சுடர் மாத இதழ்

வேலூர் – 1

 

ஓர் அழகிய கிராமத்தில் காலை பொழுதின் விடியலில் வெயில் வருகைக்கு முன்னரே சேவல் கூக்குரல் எழுப்புவதற்கு முன்னே திடுக்கிட்டு கண்விழித்து பார்த்த பார்வதிக்கு பொழுதுவிடிந்தால் என்ன நடக்குமோ என்ற அச்சத்திலும் பயத்திலும் பதட்டத்துடன் அன்றைய நாளில் நடந்தவைகளை நினைத்தவாறே கண்களை மூடி கட்டிலில் சாய்ந்தாள்.

வயலில் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய பரமனை யாரோ பின்னால் அழைப்பதுபோல் குரல் கேட்டது பரமனும் பார்வதியும் குரல்கேட்ட திசைநோக்கி சென்றனர். அங்கு ஒர் கம்பிராமன தோற்றத்தை உடையவர் பரமனை பார்த்து பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. உன்னை பண்ணையார் அழைத்து வர சொன்னார் என்று கூறி பரமனை அழைத்து சென்றார்.

பரமனுக்கு திருமணமாகி சில வருடம் தான் ஆகிறது. பரமன் மிகவும் நல்லவன். யார் உதவி என்று கேட்டாலும் உதவும் நல்லெண்ணம் படைத்தவன். எந்தவொரு வீண்சண்டை சச்சரவுகளை விரும்பாதவன் அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று வாழ்பவன். அவனை எல்லோருக்கும் பிடிக்கும். அவனுக்கு ஏற்றார்போலவே அவனுடைய மனைவியும் அன்பும் அழகும் உடையவாளாக இருந்தாள். பரமன்மேல் மிகுந்த அன்பு கொண்டிந்தாள். இவர்கள் இருவருமே பார்ப்போர் பொறாமைப்படும் அளவிற்கு ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து வந்தனர்.

பரமன் ஒன்றும் புரியாமல் பஞ்சாயத்துக்கு சென்றான். அங்கு ராமன் என்பவர் தன்னுடைய விலை உயர்ந்த பொருளை பரமன் திருடிவிட்டதாகவும் அவனுக்கு தகுந்த தண்டணை வழங்க வேண்டும் என்றும் கூறினான். பரமன் மறுத்தும், குற்றம் நடைப்பெற்றதாகவும் அதனை தன்னால் நிருப்பிக்க முடியும் என்றும் கூறி அனைவரின் முன்னிலையிலும் அதனை நிருப்பித்தான் ராமன். உடனே பண்ணையார் குற்றம் நடைப்பெற்று உள்ளதாகவும், இதைப்போல் தவறை வேறு யாரும் செய்யக்கூடாது என்பதற்காக பரமனுக்கு மரண தண்டனை அளிப்பதாகவும் கூறினார்.

இதனை கேட்ட பரமன் மௌனமாக நின்றான். ஆனால், பார்வதியோ இதுதவறான குற்றச்சாட்டு என முறையிட்டாள். இருந்தும் அவளால் நிருப்பிக்க முடியவில்லை. முடிவில் என்ன செய்வது என்று அறியாதவளாய் இறைவனிடம் முறையிட்டு அழத்தொடங்கினாள். சற்று நேரத்தில் பண்ணையாரின் மனைவி பண்ணையாரைப் பார்த்து ஐயா இவர்கள் இருவரும் ரொம்ப நல்லவர்கள் இவர்கள் மீது இரக்கம் காட்டுமாறு கூறினாள். அதற்கு பண்ணையார் என்னால் என்ன செய்யமுடியும் குற்றம் நிரூப்பித்தாகிவிட்டது. இனி என்னால் எதுவும் செய்ய முடியாது சரி நீ கேட்பதனால் நான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறேன்.

நாளை காலையில் இறைவன் முன்னிலையில் குடத்தில் இரண்டு சீட்டு குளுக்கி போடலாம். ஒரு சீட்டில் பரமன் குற்றவாளி என்றும் மற்றொரு சீட்டில் பரமன் குற்றவாளி இல்லை என்றும் எழுதி போடலாம். அதில் என்ன வருகிறோதோ அதைப்பொறுத்தே அவனுக்கு தண்டனை அளிப்பதா, இல்லையா என்பது முடிவு செய்யப்படும் என்று கூறினார். அனைவரும் அதனை ஏற்று கலைந்தனர்.

பார்வதி யாரோ வாசலில் அழைப்பது போல் தோன்ற திட்டுக்கிட்டு எழுந்தால் சென்று கதவை திறந்தாள். வாசலில் ராமனின் மனைவியும் தன்னுடைய தோழியுமாகிய ரமா நின்றுக்கொண்டு இருந்தாள் ஏதோ பதட்டத்துடன் காணப்பட்டாள் உள்ளே வந்து கதவை மூடிவிட்டாள். பார்வதியிடம் பதட்டமடைந்த முகத்துடன் பார்வதி உன்னை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பண்ணையார்தான் என் கணவரிடம் நிறைய பணங்களைக் கொடுத்து பொய்யானபுகார் அளிக்க சொன்னதாகவும் நாளையும் இரண்டு சீட்டிலும் பரமன் குற்றவாளி என்றே எழுதி போடப்போவதாகவும் அதன் மூலம் பரமன் குற்றவாளி என நிரூபித்து அவன் இறந்த பிறகு உன்னை அடைய திட்டமிட்டுள்ளதாகவும் என்னிடம் கூறினார். தவறினால் உன்னை கொன்றுவிடுவேன் என்று கூறியதாலே அவர் அவ்வாறு செய்து விட்டார் என்னையும் என் கணவரையும் மன்னித்துவிடு எனக் கூறி சென்றுவிட்டாள்.

பார்வதிக்கு என்னசெய்வது என்றே புரியாமல் யோசித்தாள் அப்பொழுதுதான் பண்ணையார் தன்னிடம் தவறான எண்ணத்தில் நெருங்கி வந்ததும் அவ்வாறான எண்ணத்தில் என்னை நெருங்க வேண்டாம். உங்கள் குடும்பத்தைப் பாருங்கள், நல்லவராக நடந்து கொள்ளுங்கள் என்று எச்சரித்து அனுப்பியதும் ஞாபகம் வந்தது.

பஞ்சாயத்தில் உண்மையைச் சொல்லி கணவரைக் காப்பாற்றினால் தன் தோழியின் வாழ்க்கை பாழாகி விடும். அவளுடைய வாழ்க்கைக்கு தன்னால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றும் பண்ணையாரும் திருந்த வேண்டும் என்ற எண்ணத்தில் கடவுளிடம் வேண்டி நின்றாள்.

பொழுது மெல்ல விடிந்தது பண்ணையாருக்கு மிகுந்த சந்தோஷம் எப்படியும் தான் நினைத்தமாதிரி நடந்துவிடும். பரமன் இன்றோடு இறந்துவிடுவான் கொஞ்ச நாள் கழித்து பார்வதியிடம் நைசாகப்பேசி தன்னுடைய வலையில் விழவைக்க வேண்டியதுதான் பாக்கி என்று நினைத்தவாறே மிகுந்த சந்தோஷத்துடன் தயார் ஆனான்.

அனைவரும் கோவிலின் முன் ஒன்று கூடினர். அனைவரின் எண்ணமும் பரமன் குற்றவாளியா? இல்லையா? என்ன சீட்டில் வரும் என்ற எண்ணத்தில் அனைவரும் ஆவலாக எதிர்நோக்கினர். பண்ணையாரின் உதவியாளன் வந்து சீட்டு எழுதி குடத்திற்குள் போட்டு சென்றான். பண்ணையார் யாரவது வந்து சீட்டு எடுக்கும்படி கூறினார். பார்வதி சற்றும் யோசிக்காமல் தானே சீட்டு எடுத்து தருவதாக கூறினாள்.

பார்வதி குடத்தின் அருகே சென்று குடத்திலிருந்த சீட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்து அனைவரின் முன்னிலையில் அதனை படிக்குமாறு பண்ணையார் கூற சற்றும் யாரும் எதிர்பார்காதபடி சீட்டை தன் வாயில் போட்டு பார்வதி விழுங்கிவிட்டாள். ஏன் இப்படி செய்துவிட்டாய் அந்த சீட்டில் என்ன எழுதி இருக்கிறது என்று தெரியவில்லையே என்று அனைவரும் கேட்க. பார்வதியோ அய்யா நான் எடுத்த சீட்டு என்ன என்று அறிய வேண்டுமானால் குடத்தில் உள்ள மற்றொரு சீட்டைப் பார்த்தால் தெரிந்துவிடும் என்றாள்.

மற்றொரு சீட்டு கொண்டு வரப்பெற்று அதில் உள்ளதைப் படித்தனர் பரமன் குற்றவாளி என இருந்த்து. அப்படியானால் பார்வதி எடுத்த்து பரமன் குற்றவாலியில்லை என்ற சீட்டு என முடிவு செய்யப்பட்டு பரமன் விடுதலை செய்யப்பட்டான். பண்ணையார் அப்பெண்னின் புத்திசாலி தனத்தை பார்த்து வியந்தார். தன் மனம் வருந்தி திருந்தினார். ரமாவும் தன் கணவர் செய்த தவறை வெளிக்காட்டாமல் அவள் கணவனின் உயிரை காப்பாற்றிய தன் தோழியைப் பார்த்து கண்களிலே நன்றி பாராட்டினாள்.