4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூலை, 2020

கொரனா! & சிட்டுக்குருவி



எப்படியும் 

அரைமணிநேரமாவது நிறுத்ததில் !

 

பேருந்திற்குள் 

அருகருகே அரைமணிநேரமாவது

அவள் பக்கத்தில்!

 

பிரியமனமின்றி

மாலையிலும் அதுபோலவே...

 

இப்போது

 

தலைவாசலில் 

உன்னை நானும் 

பின்கதவில் 

என்னை நீயும்

பார்த்துக்கொள்ளாதபடி 

தலையில் சிக்க வைத்த கொரனா!

                                                    

சிட்டுக்குருவி

அதுவரை 

நம்மைபோல்

கடற்கரை அலைகளை வேவுப்பார்த்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகளைப் 

படம் பிடிப்பதற்காக நின்ற தருணத்தில் தான் 

எனக்கு புரிந்தது ! - இந்த சிற்றிடையாளை 

வரவேற்கத்தானோ சங்கமித்ததோவென்று!

முனைவர் ச.ஶ்ரீதர்