4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

பூமித்தாயின் வேண்டுகோள்


என் பெயர் பூமி

நான் நீண்ட கூந்தல்,அழகான கண்கள்

அளவான கொங்கை,பளபளப்பான வயிறு

ஆக நான் அழகானதேவதையாக இருந்தேன்

அன்று என் இயற்கை அழகைப் பார்த்து

சந்திரன் பொறாமைப் பட்டான்

பல மக்களைப் பெற்றும்

நான் இளமையோடு இருப்பதால்

பலர் பொறாமையில் தவித்தனர்

ஆனால் இன்றோ என் நிலை

மக்களால் கைவிடப்பட்ட தாயின் நிலையானது

யாரிடம் சொல்வேன்

ஒசோண் புடவையால் என் மக்களைப்

பாதுகாத்தேன்

அதை அறிவியல் வளர்ச்சி என்ற பேரில்

கார்பணால் நிறைத்து ஓட்டையாக்கினான்

என் நண்பன் சூரியன் தக்கம் பார்த்து

புற உதா கதிர்களால் எச்சரித்தான்

நீ கேட்கவில்லை ,அபாயத்தை உணர்ந்தும்

உணராதது போல் நடித்தாய்

குன்றாம் என் கொங்கைகளை உடைத்து

ரெசார்ட்டு கட்டினாய்

நிலச்சரிவினால் என் எதிர்ப்பைத் தெரிவித்தேன்

நீ கேட்கவில்லை

என் மக்களாம் மரங்களை அழித்து

கட்டிடக் காடுகளை அமைத்தாய்

புழுக்கம் தாங்காமல் நான் நிலநடுக்கத்தால் எச்சரித்தேன்

நீ கேட்கவில்லை

என் கண்ணீர் ஆறாக ஓடியது

அதையும் பிளாஸ்டிக்கால் தடுத்தாய்

என் கணவனாம் கடலையும் விடவில்லை

ரசாயணக் கழிவுகளால் அசுத்தப் படுத்தினாய்

அடிக்கடி என்னைத் தொட்டுச் சென்ற

என் கணவனைச் சீண்டினாய்

என்னைத் தொந்தரவு செய்ததால்

சுனாமியாய் அதட்டினான் நீயோ

அவன் அதட்டும்போது ஓடி ஒளிந்தாய்

உன்னை நீ திருத்தவே  இல்லை

என் கூந்தலாம் மேகத்தை அசுத்தப்படுத்தினாய்

என் நண்பர்களாம் இடி மின்னல்கள்

எச்சரிக்கை விடுத்தனர்

நீகேட்கவே இல்லை

என் உறுப்புக்களை எல்லம் அழித்துவிட்டாய்

என்ன சொல்லியும் நீ கேட்கவில்லை

என் வயிற்றில் பிறந்த என் மக்களே

தங்களுக்குள் தின்னத் தொடங்கினர்

எதை எப்போது எங்கே தின்னவேண்டும்

என்றும் சொன்னேன் கேட்கவில்லை

அறிவியலால் எல்லாம் சாதிக்கலாம் என்றாய்

எங்கே இப்போது சாதித்துப் பார்

கொரோனா கிருமியிடம் உன் அறிவியலை

அறிவியல் தேவை தான் அதை

முறையாக, தேவைக்காகப் பயன்படுத்து

உன் சுகத்துக்காக,கேளிக்கைக்காக அல்ல

இது இயற்கை விடுத்த சவால்

இனியாவது திருந்து மானிடா.

                                                                                                முனைவர் ப. சாந்தி

                                                                        துறைத்தலைவர்&உதவிப்பேராசிரியர்

                                                                                                அரசு மகளிர்கல்லூரி,திருவனந்தபுரம்.