4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

தாயுமானவன்(அப்பா)



காசு பணம் இருந்ததில்லை!

ஆனா அன்புக்கு பஞ்சம் வச்சதில்லை!

கண் அயர ஓய்வு எடுத்ததில்லை!

உழைக்காம உங்கள நான் பார்த்ததில்லை!

 

அம்மாவ அதட்டி பேசுனதில்லை!

நீ இருந்தவர அலாரம் தேவைப் படவேவில்லை!

ஹோட்டல்ல சாப்பிட்டுப் பார்த்ததில்லை!

நாலு சட்டைக்குமேல வச்சுக்கிட்டதில்லை!

 

உன் உடன்பிறப்ப விட்டுக்கொடுத்ததில்லை!

உன் கஷ்டத்த எங்களிடம் காட்டுனதில்லை!

ஆயிரம் கவலை வந்தாலும்

எங்களைக் கலங்க விட்டதில்லை!

 

நெஞ்சு அதிர விறகுவெட்டி

கழுத்து வலிக்கப் பந்தல்போட்டு

கை வலிக்க நெல்அடித்து

கால் வலிக்க சைக்கிள்ஓட்டி

 

விரல்தேய கதிர் அறுத்து

மூச்சு வாங்க மாடுஇழுத்து

குனிந்து தலைவலிக்க புல்அறுத்து

தூங்காம பயிருக்குக் காவல்காத்து

 

கிடைச்ச வேலையெல்லாம் தயங்காமசெய்து

அன்றாடம் அரிசி வாங்கிவந்து

உண்டு உறங்கும் எங்கள்உப்பிய

வயிற்றைத் தொட்டுப்பார்த்து நிம்மதியாய்

 

உறங்க செல்லும் தாயுமானவனே…!

முன்னேற்றப் படியில் முழுவதுமாய்

எங்களை ஏற்றிவிட்டுக் கரையேற்றி விட்டோம்

என கண்அயர்ந்து விட்டாயோ!

 

இனியாவது ஓய்வு எடுப்பாய்என

நீ காட்டிய பாதையில் உன்அனுபவம் கொண்டு பயணிக்கிறோம்….!

உன்னைத்தவிர வேறு தெய்வம் எனக்கு

இருக்கப்போவதும் இல்லைஅப்பா!

.சகாயஜெசிகலா,

தமிழ்த்துறை,

உதவிப்பேராசிரியர்,

நாடார்சரஸ்வதிகலைமற்றும்அறிவியல்கல்லூரி, தேனி