4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

கல்விக்கண் திறந்த காமராசர்



சூலையில் இம்மண்ணில்

உதித்த சூரியனே !

ஏழைகளின் மனதினைவிட்டு

அகலா சந்திரனே !

கல்விக்குக் கண்கொடுத்து

கலைமகளின் அருந்தவப்

புதல்வனானாய் !

சமூகத்தில் மண்டிக்கிடந்த

அறியாமை தளைகளை உந்தன்

அறிவின் முன்மண்டியிடச் செய்தாய் !

பசியறிந்து பாலூட்டும் தாயைப்போல

பகல் உணவை ஊட்டினாய்

பசிப்பிணியைப் போக்கினாய்!

பாடுபட்ட பாமரனின் கைகளில்

ஏடெடுத்துக் கொடுத்தாய் !

ஆடு மேய்ப்பவனுக்கு கல்வியறிவு

கொடுத்து ஆக்ஸ்போடுக்கு

அனுப்பி வைத்தாய் !

படிக்காத மேதையே நீதான்

இங்கு பலரை படிக்க வைத்து

மேதை யாக்கினாய்!

சிறந்த உணவும், சீருடையும் தந்து

சிறார்களை சிட்டாய்

பள்ளிதனை நோக்கி

பட்டாம்பூச்சியாய் பறக்க

வைத்தாய் !

விருதுநகரில் பிறந்த நீதான்

பலரை விருது வாங்கவும்

வைத்தாய் !

பாலைவனமாய் கிடந்த பள்ளிக்கூடங்களை

பசுஞ்சோலை வனங்களாக்கினாய் !!

கல்விக்காக நீ கண்ணை மட்டுமல்ல

உன்னையே தந்துச் சென்றாய்!

காமராசா நீதான் என்றும்

கல்விக்கும் ராசா.

பா.மகேஸ்வரி

இளங்கலை தமிழ்இலக்கியம்

மணக்கால் அய்யம்பேட்டை

திருவாரூர் மாவட்டம