4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2020

வைரஸ் தந்த வரம்


வாமனனின் மூன்றடி வரம் இன்று

நாம்வாழ மகாபலியிடம் அல்ல

மக்களிடம் கேட்கிறோம்

ஊரடங்கு காலத்தில் தான்நாம்

உறவுகளிடம் உரையாடுகின்றோம்

தொலைக்காட்சி தொடர்தொல்லையின்றி

தாயம் பல்லாங்குழிக்கெல்லாம்

மறுவாழ்வு வரம்

வந்து தந்தது வைரஸ்

குழந்தைகளோடும் குடும்பத்தோடும்

பழக ஒதுக்கி பல மணிநேரம்

வரமாய் தந்தது வைரஸ்

வெளியே எங்கும் செல்லாமல் வீண்

செலவு ஏதும்இல்லாமல் இரண்டரை

மாத இல்லற வேள்வி

வீட்டுவேலைகள் எல்லாம் பெண்ணிற்கு

ஆண் சரிநிகர் சமானமாய்

முழுநேரமாய் கலையம் கலைந்து

நோய் அதுமட்டும்தான் மற்றதெல்லாம்

தன்னியல் பாய்சரியாகும் என்ற

அறிவை தந்தது வைரஸ்

தேவையின்றி வெளியில் சுற்றி

திரியாது இருக்க பாடம்

கற்றுத் தந்த ஆசான் வைரஸ்

கடவுள்கூட தனிமைபடுத்தி

காத்திருக்க வைக்கப்பட்டார் பக்தனுக்காக

காக்கும் கடவுள்?!

உலகையே ஊரடங்கவைத்த

அழிக்கும் அவதாரமாய்

ஒரு வைரஸ் அரக்கனாய்

சமரசம் உலாவும் இடமாய்

உலகையே நிசப்தமாக்கிய

நிமலன்நிர் மூலன் வைரஸ்

புலம்பெயர் தொழிலாளர்கள்

மீண்டும் ஓர் நாடோடியாய்

நிர்க்கதியாகிய வைரஸ்

உலகை சுத்திகரிக்கப்பட

வந்த ஓர் நோய் பிரளயம்

மறுசுழற்சி மனிதருக்கும் உண்டு!

.திருமால்

உதவிப்பேராசிரியர்-தமிழ்த்துறை

                                                       
 அகர்சந்த்மான்மல்ஜெயின்கல்லூரி(சுழல்-2)