4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

இது சமூகபார்வை

 

உயர்ந்தவன்

தாழ்ந்தவன்

இருவரையும்

பருக வைக்கிறது

தேனீர்கடை

ஒற்றை கோப்பை

 

கையேந்தி பவனில்

உண்ணும் ஒருவன்

பசி என்று

கையேந்தும்

மற்றொருவனுக்கும்

வாங்குகிறான்

விற்பவனோ

விரட்டுகிறான்

 

வெளுத்தவன்

வழுக்கி விழுந்தால்

தூக்கிவிட கைகளிருக்கு

தான் அழுக்காகி

சுற்றுப்புறத்தை

சுத்தமாக்கியவன்

சுருண்டு விழுந்துகிடந்தும்

கண்டும் காணாமல் போகும்

கண்களை என்ன செய்வது?

 

சமூகத்தில்

செய்தி பார்க்காதவர்கள் உண்டு

சாதி பார்க்காதவர்கள் அரிது

அனைவரிடத்திலும்

சமமாக பழகி வருகிறது பணம்

 

பலர் பகலில்

பேருந்திற்காக நிற்கும்

நடைமேடையில்

இந்த சமூகத்தின்

கடைநிலையர்

இரவுதூக்கம் விடிகிறது

 

 

கூவமாற்றின் ஓரம் குடிசை,

கொசுக்கடியின் கொடுமை

மூத்திரசந்தின் முன்னாடி வசிப்பு

போக்குவரத்து,

மின்சாரமில்லாத

சில கிராமங்கள் என

இன்னும் இருக்கத்தான் செய்கிறது

ஓட்டுபோட்டவர்களுக்கான

அடிப்படை வசதியில்லாத

அவலம்

 

தா.சரவணன்,         

கல்யாணமந்தை,

தொடர்பு எண்:9786577516

திருவண்ணாமலை (மாவட்டம் )- 635703