4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

பூமித்தாயின் புலம்பல்

 
ஒரேயொருஆதாமையும்

ஏவாலையும்கொண்டுதான்

தருமத்திற்குதருமன்

பலத்திற்குவீமன்

வீரத்திற்குஅர்ச்சுணன்

நேர்மைக்குசகாதேவன்

நட்புக்குக்கர்ணன்

அறிவுக்குதுரோணர்

அறுசுவைக்குநளன்

கற்புக்கோர்கண்ணகி

கண்ணகிக்கோர்மதுரை

திருக்குறளுக்கோர்வள்ளுவன்

வள்ளுவனுக்கோர்வாசுகி

புதுக்கவிதைக்கோர்பாரதி

பாரதிக்கோர்கண்ணம்மா

அகிம்சைக்கோர்காந்தி

திமிருக்கோர்கட்டபொம்மன்

என்றுநல்லவிதைகளைத்தான்

நான்கொடுத்தேன்

எங்கேயோ?எப்படியோ?

எப்பொழுதோ?ஏனோ?

எந்தக்கள்வனோத்தெரியவில்லை

என்விதையில்

நஞ்சைக்கலந்துவிட்டான்அந்த

நஞ்சுக்கலந்தவிதைகள்தான்

இன்றுஅறியாமை, ஆணவம்,

வன்முறை, களவு, பொய்என்ற

மரங்களாகவளர்ந்துள்ளது..இந்த

நச்சுமரங்களைஅகற்றஎன்றைக்கு

நான்பிஞ்சுவள்ளுவன்பாரதி

என்றதங்கக்கோடாரிகளைஉயிர்ப்பிக்கின்றேனோ!

அன்றுதான்என்மூச்சின்சூடுதணியும்

.கவிதா எம்..,பி.எட்.,

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

ஏ.இ.டி கல்லூரி, நரசிங்கபுரம்.

kavitha461977@gmail.com

8122702986