4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

சங்ககால மருதநில மக்களின் வாழ்வியல்

 


முனைவர்பீ. பெரியசாமி

தமிழ்த்துறைத்தலைவர்

டி.எல்.ஆர். கலைமற்றும்அறிவியல்கல்லூரி (இருபாலர்)

விளாப்பாக்கம், இராணிப்பேட்டைமாவட்டம்,

தமிழ்நாடு, இந்தியா. அஞ்சல்குறியீட்டுஎண்- 632521.

கைபேசி 9345315385

மின்னஞ்சல்periyaswamydeva@gmail.com

 

ஆய்வுச்சுருக்கம்

மருதம் என்பது நிலத்தைக் குறித்தும், ஊடல் என்பது திணைசார் ஒழுக்கத்தைக் குறித்தும் நிற்கிறது. பயிரிடல், களையெடுத்தல், நீர்ப்பாய்ச்சுதல், அறுவடைசெய்தல் என வேளாண்மை சிறப்பாகச் செய்யப்பட்ட நிலமாக மருதம் திகழ்கின்றது. மருத நிலத்தில் வாழக்கூடியவர்கள் நெல்லைக்கொடுத்து நெய்தல் நிலத்தவரிடமிருந்து மீனைப் பெற்றிருக்கிறார்கள். இவ்விடத்தில் நெல்லும், மீனும் சமமாகக் கருதப்பட்டிருக்கின்றது. ஐந்து நிலத்திலும் உற்பத்திமுறை சமமாக இருந்திருக்க வேண்டும். இல்லையாயின் பண்டமாற்று முறை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. மருதநிலம்மற்ற நானில மக்களுக்கும் கொடுக்குமளவு அதிக உற்பத்தியைச்செய்திருக்கிறது. இதனால் நானிலத்தவர்களும் மருதநிலத்தைச் சார்ந்து வாழ்ந்திருக்கின்றனர். பாடல் எண்ணிக்கையைத் தவிர்த்து வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் மற்றதிணைகளைப் பிண்ணுக்குத் தள்ளிவிட்டு மருதத்திணை முதல் இடத்தில் இருக்கின்றது. அக்கால மக்கள் நிலத்தை உயர்வாகக் கருதியிருக்கின்றனர். ஆகையால்தான் மனிதனின் வாழ்வியல் ஒழுக்கத்திற்கு ஈடாக நிலம் கூறப்பட்டிருக்கின்றது.

முக்கியச்சொற்கள்

மருதநிலம், உழவு, நெல்வேளாண்மை, பண்டமாற்றுமுறை, இருப்பிடம், வளர்ச்சிநிலை, பண்பாட்டு உருவாக்கம், கலித்தொகை

முன்னுரை

மருதநில மக்கள் நெல்லை விளைவித்தனர். அவர்கள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்தது போக மற்றவற்றை அருகில் வாழும் நிலமக்களுக்குப் பண்டமாற்றாகவும் மேலானதானமாகவும் கொடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக மற்றநிலவாழ் மக்களுக்கு மருதநிலத்தவர்கள் மதிப்புக்கு உள்ளவர்களாகத் தெரிந்திருக்கிறார்கள். மருதநிலத்தவர்கள் நெல் மட்டுமல்லாது வேறுபயிர்களையும் வேளாண்மை செய்திருக்கிறார்கள். நீர்வளம், நிலவளம்,இயற்கைவளம், வேளாண்மைவளம்என அனைத்து வளங்களையும்பெற்றுச்செழிப்பானதொருநிலமாக மருதம் திகழ்ந்திருக்கின்றது.அவ்வாறானநிலப்பரப்பில்வாழ்ந்தஉழவர்குடிமக்கள்எவ்வாறானசமூகக்கட்டமைப்பைஉருவாக்கினர்என்பதைஆய்வதேஇக்கட்டுரையாகும்.

ஐந்நிலத்தில் மருதம்

மனித வாழ்விற்கு இருக்க இடம், உடுத்த உடை, உண்ணஉணவுஆகியவை அடிப்படைத்தேவையாகும். உயிர் வாழ்வதற்கு உணவு மிகவும்இன்றியமையாதது. அவ்வுணவுத்தேவையைச்சங்ககாலமக்களுக்குப்பூர்த்தி செய்தது மருதநிலமாகும். சங்ககாலத்தில் மருதநில மக்கள் நெல்லை விளைவித்தனர். அவர்கள் தங்கள் தேவையைப் பூர்த்தி செய்ததுபோக மற்றவற்றை அருகில் வாழும் நிலமக்களுக்குப் பண்டமாற்றாகவும், மேலானதானமாகவும் கொடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக மற்றநிலம்வாழ் மக்களுக்கு மருதநிலத்தவர்கள் மதிப்புக்கு உள்ளவர்களாகத் தெரிந்திருக்கிறார்கள்.  மருதநிலத்தவர்கள் நெல் மட்டுமல்லாது வேறுபயிர்களையும் வேளாண்மை செய்திருக்கிறார்கள். நீர்வளம், நிலவளம், இயற்கைவளம், வேளாண்மைவளம்என அனைத்து வளங்களையும் பெற்றுச் செழிப்பான தொருநிலமாக மருதம் திகழ்ந்திருக்கின்றது.

"கிழங்கு அகன்று சாப்பிட்ட குறிஞ்சி மக்களைவிட, வரகு, சாமை,சாப்பிட்ட முல்லை மக்களைவிட இவர்கள் வயிராற வாயாரச்சாப்பிட்டும்,வளர்ச்சியடைந்த மக்களாயுள்ளனர். அவர்கள் வாழ்ந்த இடம் ஊர்என்று அழைக்கப்படுகிறது. நிலைப்பகுதியாக மக்கள் வாழும் இடமே ஊர்ஆகும். வேளாண்மை செய்யஆரம்பித்ததும்மந்தைமேய்த்துக்கொண்டு நாடோடியாகத்திரிந்த மக்கள் ஓரிடத்தில் இருந்து விடுதல்இயல்பு. மருதநிலவளர்ச்சியுடன் தமிழர் நிலைத்து வாழ்ந்தமைக்குஅடையாளம் இது'' (சி. மௌனகுரு, பண்டையதமிழர்வரலாறும்இலக்கியமும், .50)

தமிழ்ச் சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேநாகரிகத்தில் வளர்ச்சிகண்டசமூகமாகும். அதற்கு மருதநிலம்சான்றாகத்திகழ்கின்றது.

மருதநிலத்தொழில்கள்

மருதநிலம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியாகும். இந்நிலத்தில் உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர் ஆகியோர் மக்களாக வாழ்ந்துள்ளனர். செந்நெல், வெண்ணெல் போன்றவற்றை உற்பத்திசெய்தனர். நீர் வளமாக ஆற்றுநீர், கிணற்றுநீர், குளத்து நீர் போன்றவைஇருந்திருக்கின்றன. விழாச் செய்தல், வயற்களைக்கட்டல், நெல்லரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புதுநீராடல்ஆகியவை முக்கியத்தொழில்களாகஇருந்துள்ளன.

உழவர்கள்

மருதநிலத்தில்உழவுத்தொழிலைச் செய்து வந்தவர்களேஉழவர்கள்.இவர்கள் உழவர், உழத்தியர், கடையர், கடைச்சியர் என்று பலவாறுஅழைக்கப்பட்டனர். இவற்றில் பல்வேறு உட்பிரிவுகள்இருந்திருக்கின்றன.

"உழவர் அமைதிக் காலத்தில் உழவுத்தொழிலைச் செய்து வந்ததோடு,போர்க்காலத்தில்போர்ப்பணியும் புரிந்து வந்தனர்."(ஞா. தேவநேயப்பாவாணர், . நக்கீரன்(பதி), பழந்தமிழாராய்ச்சி, .98)

சங்க இலக்கியத்தில்மள்ளர் என்ற சொல் உழவுத் தொழில் செய்வோரையும், போர்வீரரையும்குறித்து வருவது ஒப்பு நோக்கத்தக்கது.

 "அந்தணர், அரசர், வணிகர்,வேளாளர் என்னும் நாற்பெருங்குலத்தாருள், வேளாளர்ஏனைமுக்குலத்தில்லறத்தாரையும் தாங்கி வந்ததினால்வேளாளரேஇல்லறத்தாராகக்கருதப்பட்டனர். மருதநிலத்தூரில் நிலையாக வசித்துஆறிலொருகடமையைஅரசனுக்கு ஒழுங்காக இறுத்து வந்தவரும்வேளாளரே"(ஞா. தேவநேயப்பாவாணர், . நக்கீரன்(பதி), பழந்தமிழாராய்ச்சி, பக்.98-99)

"வண்ணான், மயிர்வினைஞன், செம்மான், குயவன்கொத்தன், கொல்லன், கன்னான், தட்டான், தச்சன், செக்கான்,கைக்கோளம், பூக்காரன், கிணையன் (கிணைப்பறையன்), பாணன், கூத்தன்,வள்ளுவன், மருத்துவன் ஆகிய பதினென்தொழிலாரும்உழவனுக்குப்பக்கத்துணையாயிருந்து தத்தம் தொழிலைச் செய்து அவனிடம் கூலிஅல்லது தாம் செய்த பொருட்கு விலை பெற்று வந்தனர். "(ஞா. தேவநேயப்பாவாணர், . நக்கீரன்(பதி), பழந்தமிழாராய்ச்சி, .99)

இவ்வாறு உழவுத்தொழில் செய்து வந்த வேளாளருக்குத் துணையாகப் பல்வேறு சமூகத்தினரும் உடனிருந்திருக்கின்றனர்.

"வேளாளர், உழுதுண்பாரும்உழுவித்துண்பாரும் என இருவகையர். உழுதுண்பாருக்குக்கருங்களமர்,காராளர் என்னும் பெயர்களும், உழுவித்துண்பாருக்குவெண்களமர்,வெள்ளாளர் என்னும் பெயர்களும்உரியன. உழவர், களமர், கடையர்,வேளாளர்என்பனஇருசாராருக்கும்பொதுவாகும். ஆயினும் ஈற்றுப்பெயர்தவிர ஏனையவெல்லாம்உழுதுண்பார்க்கே சிறப்பாக வழங்கின.  அவருக்குமள்ளர் என்னும் பெயருண்டு அவர் தந்நிலத்தில்உழுவாரும் பிறர் நிலத்தில்உழுவாரும் என இரு நிலைமையர்"(ஞா. தேவநேயப்பாவாணர், . நக்கீரன்(பதி), பழந்தமிழாராய்ச்சி, . 100)

பல்வேறு உழவுக்குடிகளின் பொதுப்பெயராகத்தான் உழவர் என்ற சொல் கையாளப்பட்டிருக்கின்றது. திருமணம் என்ற ஒழுக்கவியல் கோட்பாட்டிற்குள் வந்தப்பின் இல்லறம், குடும்பம், குழந்தை என்ற அமைப்பு தானாக உருவாக்கப்பட்டுவிடுகிறது. இக்குடும்பம் என்ற கட்டமைப்பைமீறியும் வாழமுற்பட்டிருந்திருக்கின்றனர். அதன் பிரதிபலிப்பு பரத்தமையாகும். இல்லறத்தில் மனைவியை விட்டுவிட்டு கணவன் வேறொரு பெண்ணைஅதாவது பரத்தையை நாடுதல் உருவாயிற்று. ஆகையால்தான் மருதநிலத்தின் திணைசார் ஒழுக்கமாகத் தொல்காப்பியர் ஊடலும் ஊடல் நிமித்தத்தைக் கூறுகின்றார். மருதநிலத்தலைவனின் ஒழுக்க மீறலைக் கூறுகின்ற பாடல்கள் ஏராளம் உள்ளன.

"பொருளாதார வளமும் அதனால் உண்டாகியதலைமைப்பாடும்  மிக்கதலைவன் மருதநிலத்தில் வாழ்ந்தநிலவுடைமையாளனே.பரத்தையரைநாடிச் செல்லும் வாய்ப்பும்வசதியும் அவனுக்கே கூடுதலாய் அமைந்தவை."(வாசுகி. சொக்கலிங்கம், மருதத்திணை, .86)

"ஆடவன் ஒருவன் பல பெண்களோடு உறவு கொள்வதால்சமூகரீதியான ஒழுக்க நியாயங்கள் சிதைவுக்குள்ளாவதாடு, அவனுடையபொருளாதாரமும் சீர்கெட்டு விடுகிறது. அது அவன் குடும்பத்தோடுநின்றுவிடாது. காலகதியில் அவனுடைய உற்றார்உறவினர்களுக்கும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் சமூகமும் பாதிப்படையநேரலாம். இதனாலும்கரணத்தோடு கூடிய திருமணம்வற்புறுத்தப்பட்டதெனலாம்." (வாசுகி. சொக்கலிங்கம், மருதத்திணை, .161)

நெல் வேளாண்மை

"ஆறு, குளம், ஏரி முதலிய நீர் நிலைகளிலிருந்து உழவர்கள் வயலுக்கு நீர்ப்பாய்ச்சினர். உழுது சேறாக்கித் தொளிகலக்கினர். பரம்படித்துப் பண்படுத்தினர். நாற்றுநட்டனர் களை பறித்தனர். நீர்ப்பாய்ச்சினர் பறவைகளும், விலங்குகளும் பயிரை அழித்துவிடாமல் பாதுகாத்தனர். நெல்லறுத்துப் போரடுக்கினர் பிணையல் அடித்துப் பொலிதூற்றினர்.நெல்லைமலைபோலக் குவித்தார்."                     (வெ. பெருமாள்சாமி, சங்க்காலத்தமிழகத்தின்சமூகநிலை, .88)

இயற்கைவளம் மிகுந்து வயலும் வயல் சார்ந்து காணப்படுவதுமருதநிலமாகும்.

 "மருதநில மக்கள் பயிர் செய்து பண்டமாற்றில் தலைமைபெற்றுச் செல்வக்குடியினராய் வாழ்ந்ததால் அங்குக் கலை ஆடல்பாடல்கள் பரவ, பரத்தமையும்வாழ்வின் ஒரு பகுதியாயிற்று" (வாழ்வியல்களஞ்சியம், தொகுதி -10, .253)

இதனால், மருதத்திணை மக்களிடம் ஊடல் என்பது திணைசார் ஒழுக்கமாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. மருதம் என்பது நிலத்தைக் குறித்தும், ஊடல் என்பது திணைசார் ஒழுக்கத்தைக் குறித்தும் நிற்கிறது. பயிரிடல்களையெடுத்தல், நீர்ப்பாய்ச்சுதல், அறுவடைசெய்தல் எனவேளாண்மை சிறப்பாகச் செய்யப்பட்ட நிலமாக மருதம் திகழ்கின்றது.

இருப்பிடம்

ஐந்து நிலத்திலும்ஐந்நிலத்தவர்கள்இருந்துள்ளனர்.

 "தமிழரசர்காலத்தில், தமிழ் மக்கள் திணை நிலை-திணை மயக்க நிலை ஆகிய இருநிலைப்பட்டு வாழ்ந்து வந்தனர். குறிஞ்சியில் குறவரும், முல்லையில்இடையரும், மருதத்தில்உழவரும், நெய்தலில்செம்படவரும், பாலையில்கள்ளர், மறவர் முதலியோருமாக ஒவ்வொரு திணைக்குலமும் தனித்தனிவாழ்வது திணைநிலை. சிற்றூரிலும்பேரூரிலும்நகரிலும்மாநகரிலும் பலதிணைக்குலம் கலந்து வாழ்வது திணை மயக்க நிலை. முதலாவது மருதநிலத்திலும் பின்னர் பிற நிலத்தூர்களிலும் திணைமயக்க நிலையாலும் தொழிற்பிரிவினாலும் பல குலங்கள் ஏற்பட்டிருந்தன. ஆசிரியரும் பூசாரியாரும் துறவியாரும் அந்தணர் என்றும், ஆட்சிவினைப் பூண்டோர் அரசர் என்றும், விற்பனையும் இருவகை வாணிகமும் மேற்கொண்டோர் வணிகர் என்றும், கைத்தொழில் செய்பவர் வினைவலர் என்றும், குற்றேவல் செய்பவர் ஏவலர் என்றும், இரந்துண்போர் இரப்போர் என்றும் மருதநிலமக்கள் எழுபெருவகுப்பினராக வகுக்கப்பட்டு நால்வகை நிலத்தும் நாடு முழுதும் பரவினர். (ஞா. தேவநேயப்பாவாணர், . நக்கீரன்(பதி), பழந்தமிழாராய்ச்சி, .130)

பெரும்பான்மை கருதியும், தொகுப்பு முறை எளிமை கருதியும் இந்நிலத்திற்குரியவர் இவரே என்று கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு தமிழகப் பரப்பளவில் ஐந்நிலங்களின் தன்மைகள் பரவலாகக் காணப்பட்டு அவை அருகருகே இருந்திருக்கின்றன.

முல்லைநிலத்தின் வளர்ச்சி நிலை

வளர்ச்சி என்பது முன்னேற்றம் ஆகும். ஐந்நிலத்தின்வளர்ச்சியைஇரண்டு விதங்களில் அணுக முடிகிறது. ஒவ்வொரு நிலமும்தன்னளவில்ஒரு வளர்ச்சி நிலையையும், பிரிதொரு வகையில் சமசீரற்ற வளர்ச்சிநிலையையும்கொண்டிருந்தது. ஒரு நிலம், அந்நிலத்திற்குரியவர்கள்,அவர்களின் தேவை, அத்தேவைகளை நிவர்த்தி செய்தல், அவர்களுக்கென்றுதனிப்பட்ட வாழ்வியல் முறைகள், பழக்கவழக்கங்கள், தொழில்கள்,இயற்கைச் சூழல் என்பன போன்ற செய்திகள் தன்னளவிலான வளர்ச்சியில்அடங்குகின்றன. இவ்வாறு ஐந்து நிலங்களுக்கும் தனிப்பட்ட தன்மைகள்உள்ளன. அவைகள் அந்தந்த நிலத்தைச் சீராக இயக்கியிருக்கின்றன.மேலும் தன்னளவில் சீராக இயங்குமளவிற்குவளர்ச்சியினைப்பெற்றிருந்திருக்கின்றது. பிரிதொருவளர்ச்சிநிலைசமச்சீரற்றதாகும். இதுஒவ்வொரு நிலத்தின் பொருளாதார வளர்ச்சியைஒப்பிட்டளவில்காண்பவையாகும். பொருளாதாரத்தில் முதன்மையாக உள்ள நிலத்தைமையமாகக் கொண்டு மற்ற நிலங்களின்வளர்ச்சியைக்கணக்கிடுதலாகும்.பொருளாதார அடிப்படையில் ஐந்நிலங்களில்சமச்சீரற்ற நிலைஇருந்திருப்பதைஆராய்ச்சியாளர்கள் பலரும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.அவர்களால் உணவு தேடும் நிலை, உணவு உற்பத்தி நிலை, திட்டமிட்டஉணவு உற்பத்தி முறை, கடலை வழியாக்கி வாணிபம் செய்தல், திருடுதல்என்ற ஐந்து விதமான கருத்துகள்முன்வைக்கப்படுகின்றன. உற்பத்தி, தேவைஆகிய இரண்டும்சமச்சீரற்றகருத்தாக்கத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.இக்கருத்தாக்க அடிப்படையில் திட்டமிட்ட உணவு உற்பத்தி முறையைக்கையாண்ட மருதநிலத்தவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் உச்சத்தைக்கண்டிருந்தனர். இதனைச் சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள்,

 "வளர்ந்தசெழிப்பான நிலம் நோக்கி பிற மதத்தினரும், பிற நாட்டினரும்,பிராமணர்களும், கைவினைஞர்களும் வருதல் இயல்பு. அவர்களின் வருகைமருத நிலத்தை மேலும் வளரச்செய்தது. ஏனைய நிலங்கள் இன்னும்தாழ்ந்தன. இவ்வகையில் இப்பரிணாமவளர்ச்சிப்போக்கில்நிலங்களின் வளர்ச்சி குன்றின.இவ்வகையில் சங்க இலக்கியங்கள்தொகுக்கப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டு மக்களிடையே ஒரு சமாந்திரவளர்ச்சியின்மையினைக் (Uneven Development) காண்கிறோம்." (சி. மௌனகுரு, பண்டையத்தமிழர்வரலாறும்இலக்கியமும், . 57)

என்று மௌனகுரு குறிப்பிடுகின்றார்.

ஒவ்வொரு நிலமும்தனித்தன்மைகளைக் கொண்டு அத்தன்மைகளுக்குஏற்ற பயிர்களை விளைவிக்கக் கூடியவையாகும். ஒரு நிலத்தின்தன்மையில்வளரக்கூடியவைபிரிதொரு நிலத்தில் செழிப்பாக வளர முடியாது.மேலும் ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு விதமானபொருட்கள்உற்பத்தி செய்யப்பட்டிருக்கின்றன. வாழ்வியல்தேவைகளைப் பொறுத்துஒரு நிலத்திலிருந்து மற்றொரு நிலத்திற்குப் பண்டமாற்று முறைநிகழ்ந்திருக்கிறது. மருத நிலத்தில் வாழக்கூடியவர்கள்நெல்லைக்கொடுத்து நெய்தல் நிலத்தவரிடமிருந்து மீனைப் பெற்றிருக்கிறார்கள். இவ்விடத்தில் நெல்லும், மீனும்சமமாகக் கருதப்பட்டிருக்கின்றது.ஐந்து நிலத்திலும்உற்பத்திமுறை சமமாக இருந்திருக்க வேண்டும்.இல்லையாயின் பண்டமாற்று முறை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை, மருதநிலம் மற்ற நானில மக்களுக்கும் கொடுக்குமளவு அதிக உற்பத்தியைச்செய்திருக்கிறது. இதனால் நானிலத்தவர்களும் மருதநிலத்தைச் சார்ந்து வாழ்ந்திருக்கின்றனர்.

 

மருதநிலபண்பாட்டுஉருவாக்கம்

தமிழில் முதன்மை இலக்கியங்களாக சங்கஇலக்கியஎட்டுத்தொகையும்பத்துப்பாட்டும்விளங்குகின்றன. முதற்பொருள்,கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றின் கீழ் ஐந்திணைகளாகப் பகுத்து, ஐந்திணைப்பாடல்களின் தொகுப்பாகத் திகழ்கின்றது. ஐந்திணைக்குரிய பாடல்களும் எண்ணிக்கையில் வேறுபட்டு அமைந்திருக்கின்றன. குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணையிலும் ஒருசிலதிணைகள் கூடுதலான பாடல்களும், ஒருசில திணைகள் குறைவானபாடல்களையும் கொண்டுள்ளன. எட்டுத்தொகை நூலில் அகம் பற்றிப்பேசக் கூடிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு,கலித்தொகை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு திணைவாரியாகப் பாடல் எண்ணிக்கையைப் பார்க்கின்றபொழுது கூடுதலான பாடல்கள் பாலைத்திணைக்கும், குறிஞ்சித்திணைக்கும் கிடைக்கின்றன. அதற்கடுத்தநிலையில் நெய்தல் திணைக்கும், முல்லைத்திணைக்கும், மருதத்திணைக்கும் கிடைக்கின்றன. பாடல்எண்ணிக்கையைத் தவிர்த்து வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் மற்றதிணைகளைப் பிண்ணுக்குத் தள்ளிவிட்டு மருதத்திணைமுதல் இடத்தில் இருக்கின்றது.

மருதநில நாகரிகமும், பொருளாதார வளர்ச்சியும், மருதநிலவளர்ச்சியில்அங்கு ஒரு புது விவசாய முறை உருவாகி விடுகிறது. அவர்கள்ஆற்றோரங்களில் விவசாயம் செய்தனர். காவேரி, வைகை, தென்பெண்ணை,தாமிரபரணி, பாலாறு என்பன முக்கிய ஆறுகளாயின. முக்கியமாகநீர்ப்பாசனமுறையைக்கண்டுபிடித்தனர். மழையை மாத்திரம் நம்பியிராதுஆற்று நீரின்துணைகொண்டு எப்போதும் விவசாயம் செய்ய கற்றுக்கொண்டனர். எப்போதும் விவசாயம் செய்தமையினால் இடம் விட்டுஇடம் பெயரும் தன்மை இவர்களிடம் காணப்படவில்லை. நிலைத்தவாழ்க்கை ஒன்று ஏற்பட்டது. கோட்டை குடியிருப்பு என்பன கட்டிநிலைபதியாகவாழ்ந்தனர். இவ்வண்ணம்மருதநில நாகரீகம் உருவாயிற்று” (சி. மௌனகுரு, பண்டையதமிழர்வரலாறும்இலக்கியமும், .54)

"புதிய விவசாயம் பழைய சமூகம், பழைய இனக்குழுச்சமூகங்களைஅழித்தேஉருவாகின்றது. புதிய விவசாயமயமாக்கலுடன்மருதநிலத்தின்வளர்ச்சியுடன்வேந்தும்உருவாகின்றது. வேந்துருவாக்கத்துடன்வடநாட்டிலிருந்துதமிழகத்திற்கு வந்த பிராமணியமும்இணைத்திருந்தது” (சி. மௌனகுரு, பண்டையதமிழர்வரலாறும்இலக்கியமும், .54)

"வேந்துருவாக்கமும், புதிய சமூகமாகவிவசாய சமூகம் உருவாகியமையும்தமிழைநாகரீகத்தின் வளர்ச்சியில் ஆரம்ப நிலைக்குக் கொண்டு வருகின்றது. விவசாய சமூக உருவாக்கத்துடன்தமிழரிடையே சமூக வேறுபாடுகளும்,சாதி வேறுபாடுகளும் தோன்றி விடுகின்றன. ஆரம்பத்தில் நிலங்களிடையேகாணப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் பின்னர் ஒவ்வொரு நிலத்திலும் தொழில்அடிப்படையில் ஏற்படலாயிற்று" (சி. மௌனகுரு, பண்டையதமிழர்வரலாறும்இலக்கியமும், .54)

"மருதநிலம் வளர்ச்சி பெற்று அரசுகள்தோன்றி செழிப்பு வாய்ந்த வாழ்வினைத் தமிழ் மக்களுள் ஒரு பகுதியினர்வாழ ஆரம்பித்த அக்காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் இந்நிலைஇருக்கவில்லை. இவர்களால் வெற்றி கொள்ளப்பட்ட அல்லது கவனிக்காதுஏனைய நிலங்கள்வளர்ச்சியற்று இருந்தன.” (சி. மௌனகுரு, பண்டையதமிழர்வரலாறும்இலக்கியமும், .54)

இவ்வாறுநாகரிகம், பண்பாடு, பொருளாதாரம், அரசுருவாக்கம் போன்றவற்றால் மற்றநிலங்களைக் காட்டிலும் மருதநிலம் தனித்துவ வளர்ச்சிக் கொண்டிருந்தது.

மருதநிலம் எற்றமிகுவளர்ச்சியிலிருந்தபோதிலும், அந்நிலம்குறித்தப்பாடல்கள் குறைந்த அளவில்தான் கிடைக்கின்றது. ஓர் இடத்தில்அனைத்தும் கிடைக்கிறதென்றால் தேவை கருதி அவ்விடத்தைநாடுவதுஇயல்பு. அப்படிப்பட்ட ஓர் இடமாகத்தான் மருதநிலம் இருந்திருக்கின்றது. சங்கப்பாடல்களை இயற்றியபுலவர்களின் வாழ்வியலை ஆராய்கின்றபொழுது அவர்கள் வறுமையில் இருந்திருப்பதைக்காணமுடிகின்றது. புலவர்கள்வறுமையை நீக்கும் பொருட்டுபாடல்கள் பாடி பரிசில் பெற்று வாழ்க்கையை நடத்தியிருக்கின்றார்கள்.ஆற்றுப்படை நூல்கள் பெரும்பாலும் புலவர்களின்வாழ்வியலைக்கூறுவனவாகும். பொருளாதாரம் அதிகமிருக்கும் நிலத்தையும், அந்நிலத்திலிருக்கும் அரசையும் தான் புலவர்கள் நாடியிருக்க வேண்டும்.அதாவது பரிசில் பெற மருதநிலத்தைத்தான் அதிகம் நாடியிருக்கவேண்டும்.

கலித்தொகையில்மருதத்திணைப்பாடல்கள்

கலித்தொகையில் முப்பத்தைந்து மருதத்திணைப்பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் மருதநிலநாகனாரால் பாடப்பட்டவையாகும். நற்றிணை, அகநானூறு ஆகியவற்றிலுள்ள மருதத்திணைப் பாடல்களில் எண்கள் அமைப்பில் ஒருவித ஒழுங்கமைவுகாணப்படுகின்றது.இத்தகைய ஒழுங்கமைவு குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகையிலுள்ள பாடல்களில் இல்லை.

கலித்தொகைப் பாடலொன்று மனிதனுக்குரிய ஒழுக்கத்துடன் நிலம் ஒப்புமைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அக்கால மக்கள் நிலத்தை உயர்வாகக் கருதியிருக்கின்றனர். ஆகையால்தான் மனிதனின் வாழ்வியல் ஒழுக்கத்திற்கு ஈடாக நிலம் கூறப்பட்டிருக்கின்றது.

"பொதுமொழி பிறர்க்குஇன்றி முழுதுஆளும் செல்வர்க்கு

மதிமொழிஇடல் மாலை வினைவர்போல், வல்லவர்

செதுமொழிசீத்தசெவி செறு ஆக

முதுமொழி நீரா, புலன் நா உழவர்

புதுமொழிகூட்டுண்ணும், புரிசைசூழ், புனல் ஊர" (கலி.68)

என்பது பாடலாகும்.

"இம்மண்ணுலகம்பிறர்க்கும்பொதுவானது என்றுசொல்லுதல் இல்லாதபடி, மண்ணுலகம்முழுதையும் ஆளும்பேரரசர்களுக்குஅறிவாகியசொல்லைச்சொல்லுதலை இயல்பாகஉடையோர் அமைச்சர்கள், அவர்களைப்போல நுண்ணறிவுடையோர்நூல்வல்லபுலவர்கள், பொல்லாச் சொற்கள் இடையீடு படாமல்,புகழ்மிக்கச்சொற்களைக்கேட்டும் தம் காதுகளே தமக்கு நிலமாகவயலாகக்கொண்டு போற்றிச் சான்றோர் கூறிய முதுமொழிகளைத் தம் சொல்லைவளர்க்கும் நீராகக் கொண்டு, அறிவினை உடைய நாவாகியஏராலே உழுதஉண்ணும் புலவர் தம் புதிய கவிதைகளைக் கொண்டு பலருடன் சேர்ந்துசுவைக்கும் மதில் சூழ்ந்தபுனலை உடையவன்' (முனைவர் அ. விசுவநாதன்(உரை), கலித்தொகைமூலமும்உரையும், .290)

என்று பொருள் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதனுடைய வாழ்வியலுக்கு ஒழுக்கமும், நேர்மையும் முக்கியமானதாகும். அவ்வாறே உழவுத்தொழிலுக்குமுக்கியமானது மண்ணாகும். மருதநிலத்தில்காணப்பட்டமண்வளம்உழவுத்தொழிலுக்கு ஏற்றதாக இருந்திருக்கின்றது.

"மனிதன் வேட்டைச்சமூகமாகவும் மேய்ச்சல் சமூகமாகவும் குறிஞ்சி,முல்லை நிலங்களில் வாழ்ந்த காலகட்டத்தில் அந்நிலங்களில் வரகு, திணை முதலியவற்றை விளைவித்தான். அவற்றுடன் உளுந்து, பயறு, அவரை முதலியவற்றையும் விளைவித்தான். ஆனால் விளைச்சலின் பயன் அவனுக்கு வாய்க்கும் கைக்கும் எட்டா தநிலையிலேயே இருந்தது. கடன் வாங்கிபிழைக்க வேண்டிய கட்டாயத்துக்கு அவன் தள்ளப்பட்டிருந்தான்" (வெ. பெருமாள்சாமி, சங்ககாலத் தமிழகத்தின் சமூகநிலை, .86)

"இரும்புகண்டுபிடிப்பட்டுபயன்பாட்டுக்கு வந்த பிறகு உற்பத்திக்கருவிகளிலும்உற்பத்தி முறையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஆறுகளும், ஓடைகளும்மறித்துஏரிகளும்பாசனக்குளங்களும்அமைக்கப்பட்டன. புதர் மண்டிக்கிடந்தகாடுகள் வயல்களாக, விளைநிலங்களாகத்திருத்தப்பட்டன. வரகும், திணையும் விளைந்த வன்னிலங்களில் நெல்லும், கரும்பும், இஞ்சியும், வாழையும் விளையும் மென்னிலங்கள் ஆக்கப்பட்டன." (வெ. பெருமாள்சாமி, சங்ககாலத்தமிழகத்தின்சமூகநிலை, .87)

இதனால் மருதநிலம் உழவுத்தொழிலில் மேன்மையுற்றது.

மருதநிலவயல்களில்பூக்களைப் பறித்து விற்பனை செய்துள்ளனர். பூவிற்றலை ஒரு தொழிலாகஅந்நிலவாழ் மக்கள் செய்தனர். இதனை,

"வீங்குநீர்அவிழ்நிலம்புகர்பவர்வயற்கொண்ட

ஞாங்கர் மலர் சூழ்ந்து, ஊர் புகுந்த வரி வண்டு"(கலி.66)

என்ற பாடல் கூறுகின்றது.

முடிவுரை

மருதம் என்பது நிலத்தைக் குறித்தும், ஊடல் என்பது திணைசார் ஒழுக்கத்தைக் குறித்தும் நிற்கிறது. பயிரிடல்களையெடுத்தல், நீர்ப்பாய்ச்சுதல், அறுவடைசெய்தல் என வேளாண்மை சிறப்பாகச் செய்யப்பட்ட நிலமாக மருதம் திகழ்கின்றது. மருத நிலத்தில் வாழக்கூடியவர்கள் நெல்லைக்கொடுத்து, நெய்தல் நிலத்தவரிடமிருந்து மீனைப் பெற்றிருக்கிறார்கள். இவ்விடத்தில் நெல்லும், மீனும் சமமாகக் கருதப்பட்டிருக்கின்றது. ஐந்து நிலத்திலும் உற்பத்திமுறை சமமாக இருந்திருக்க வேண்டும். இல்லையாயின் பண்டமாற்று முறை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. மருதநிலம்மற்ற நானில மக்களுக்கும் கொடுக்குமளவு அதிக உற்பத்தியைச் செய்திருக்கிறது. இதனால் நானிலத்தவர்களும் மருதநிலத்தைச் சார்ந்துவாழ்ந்திருக்கின்றனர். பாடல் எண்ணிக்கையைத் தவிர்த்து வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் மற்ற திணைகளைப் பிண்ணுக்குத் தள்ளிவிட்டு மருதத்திணை முதல்இடத்தில் இருக்கின்றது. அக்கால மக்கள் நிலத்தை உயர்வாகக்கருதியிருக்கின்றனர். ஆகையால்தான் மனிதனின் வாழ்வியல் ஒழுக்கத்திற்கு ஈடாக நிலம் கூறப்பட்டிருக்கின்றது.

துணைநூற்பட்டியல்

1.     பாலுசாமிநா. (மு..) வாழ்வியற்களஞ்சியம், தொகுதி -10, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சை, .. 2005.

2.     தேவநேயப்பாவாணர்ஞா., பழந்தமிழாராய்ச்சி, சைவசித்தாந்தநூற்பதிப்புக்கழகம், சென்னை, ..1992.

3.     மௌனகுருசி., பண்டையதமிழர்வரலாறும்இலக்கியமும், அலைகள்வெளியீட்டகம், சென்னை. ..2005.

4.     விசுவநாதன்அ., (உரை), கலித்தொகைமூலமும்உரையும்,நியூசென்சுரிபுக்ஹவுஸ், சென்னை. .. 2004.

5.     பெருமாள்சாமிவெ., சங்ககாலதமிழகத்தின்சமூகநிலை, பாரதிபுத்தகாலயம், சென்னை, .. 2011.

6.     வாசுகிசொக்கலிங்கம், மருதத்திணை, ஸ்ரீசுப்பிரமணியபுத்தகசாலை, சென்னை, .. 2003.