4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

வேள்பாரி! - பா.மகேஸ்வரி

 

வேள்பாரி!

மாரியைப்போல அன்பைப்

பொழிந்து சென்றாய் பாரி!

பறம்பு எல்லோருக்கும் தாய்

அந்தப் பறம்பிற்கே தாய் பாரி!

கருணையில் கர்ணனையே

விஞ்சியவன் நீ!

மூவேந்தர்களையும் உன்

வீரத்தினால் வீழ்த்தியவன் நீ!

இயற்கையின் ஆதிஅந்தங்களை

உன் அறிவினால் அளந்தவன் நீ!

பலகுடிகளைக் கட்டிக்காத்த

சிறுகுடி மன்னன் நீ!

கபிலர் என்னும் பெரும்புலவரின்

பெருமைக்குரியவன் நீ !

இயற்கையை விற்று வாழாமல்

இயற்கையோடு வாழ்ந்தவன் நீ !

உதவி என்று உன்னை நாடி

வந்தோர்க்கு உன் உயிரையே

தந்தவன் நீ!

வேளிர்குடி வீரன் நீ!

பறம்பைக்காத்த சூரன் நீ!

அறத்தைப் போற்றிய அன்னை நீ!

பலகுடிகளைப் பறம்பு என்னும்

ஒற்றைக்குடிக்குள் கொணர்ந்தவன் நீ!

பல்லுயிர் ஓம்புதல் என்னும்

பண்பைப் பறம்பில் விதைத்தவன் நீ!

உதவிக்கேட்டு வந்தவன் எதிரியாயினும்

கேள்வி கேட்டு நில்லாமல் வேண்டியதை

வழங்கிய வள்ளல் பெருந்தகை நீ!

வாடாதமுகம் கொண்ட உன்னைப்

பாடாத கவிஞன் இல்லை!

முல்லைக்குத் தேர்க் கொடுத்து,

சொன்ன சொல்லுக்காக

உயிரையே ஈந்தவன் நீ!

இயற்கையின் புனிதத்தை உலகிற்கே

உணர்த்திச் சென்ற புனிதன் நீ!

தமிழ்க்குடி உள்ளவரை

வேள்குடி வேந்தனை

ஒருநாளும் மறவாது ….

 

பா.மகேஸ்வரி

இளங்கலை தமிழ்இலக்கியம்

மணக்கால் அய்யம்பேட்டை

திருவாரூர் - மாவட்டம்