4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

அவள் வருகிறாள்… - இரெத்தினபிரகா. கா

 

அவள் வருகிறாள்

 

தலைக்காவிரியில் பிறந்தவள் தன்னம்பிக்கை உடையவள்

எண்ணற்ற அணைகளையும் அருவிகளையும்

எட்டுநூறு தூரம் கடந்து - எங்களுக்கு

எழுச்சியூட்ட எக்காளமிட்டு வருபவள்.

 

எட்டுக்கட்டி ஆடிப்பட்டம் நட்டு வைத்த நாத்துக்களும்

எட்டிஎட்டிப் பார்க்கின்றனஅவள்

தொட்டுவந்த கரைகளையும்

விட்டுப்போன நுரைகளையும்

 

கரையோர மரங்கள்ஆர்ப்பரிக்கஅவளைக்

கண்ட கணத்தில் மெய்சிலிர்க்க

மாரியாய் இரைத்த செருகுகளையும் செம்மலர்களையும்

வாரி அள்ளிக் கொண்டு வருகிறாள்.

 

தாகம் தணிக்கும் தண்ணீராய் மட்டுமின்றித்

தாயகம் போற்றும் பெண்ணீராய்

நம்தாய்த் தமிழ்நாட்டின் தாபம்

தணிக்கத் தவழ்ந்து வருகிறாள்.

 

ஓடிவரும் உன்னைப் பாடி வரவேற்க

பலவகை பழங்களும் இடித்த பச்சரிசியும்,

சந்தனம் மதிமயக்க மல்லிகை மனமயக்கச்

சுகமாய் உனக்குச் சுவையாய் அளிக்க

 

காதலனைக் காணக் கரைப்புரண்டு ஓடுகிறாயோ??

உன்னைக் கண்ட உள்ளங்களுக்கும்

உற்சாகம் நுரைநுரையாய்ப் பொங்குதம்மா சமுத்திரகுமாரன்

கரம் நீட்டிக் காத்திருக்கிறான் காதலியைக் காண

 

வா எங்கள் அன்னையே,

வாழவைப்பாய் இம்மண்ணையே!!

'நன்செய்புன்செயின்நம்பிக்கை

என்றும் நீயே அவள்காவிரி

இரெத்தினபிரகா. கா

மூன்றாம்ஆண்டு உயிரிவேதியியல்

மணக்கால் அய்யம்பேட்டை

திருவாரூர் மாவட்டம்.