4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 அக்டோபர், 2020

கணந்தோறும் வியப்புகள் - பிரியதர்சினி.து

 

கணந்தோறும் வியப்புகள்

 

மனித வாழ்வில் வியப்புக்குப் பஞ்சமில்லை

ஆர்பரித்து வரும் வியப்புகள் சிலநேரம்

கடல் அலைப்போல் அமைதியாகச் செல்கின்றன

சிலநேரம் ஆழிப்பேரலைபோல்

மனிதவாழ்வைப் புரட்டிப் போடுகின்றன

காலையில் உதிக்கும் சூரியன்

மாலையில் தோன்றும் சந்திரன்

ஆராய முடியாத அதிசயம் அல்லவா!

அதிகாலை சிரித்துக் கொண்டே விரியும் மலர்களோ

மாலையானதும் கவலையுற்றுச் சுருங்கிவிடுகின்றன

முதுமையில் இளமை காணும் மனமும்

அறிய முடியாத ஆச்சிரியம்தான்

நாட்கள் புதிது ஆனால் மனமோ

பழையது

பழையது மாறும் கனம்

வியப்பின் தனம்

ஒளியைப் பரப்பும் பெளர்ணமியும்

இருளில் சூழப்பட்ட அமாவாசையும்

ஆகாயத்தின் அடங்காத ஆச்சிரியம் அல்லவா!

இவ்விரு அணுக்களும் இணையும் வண்ணம்

உயிர் என்னும் வியப்பு

பொங்கும்

எழுதுகோலின் பயன்மையைத் தீட்டுவது

அந்நொடியில் தீட்டப்பட்டதே

இன்று ஊரெங்கும் ஒலிக்கிறது

உலகப் பொதுமறையாய்

ஒவ்வொரு நொடித் தோற்றமும் மறைவும் வியப்பே!

எங்கோ எவ்வகையிலோ நிகழுமோ

இந்த வியப்பின் அலை ஊரெங்கும்

ஒலிக்குமோ!

 

பிரியதர்சினி.து

 இளம் அறிவியல்- நுண்ணுயிரியல்,

இரண்டாம்பருவம்,

சாஸ்த்ரா பல்கலைகழகம்-கும்பகோணம்,

தொலைபேசிஎண்:9360155817.