4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 நவம்பர், 2020

ஏறிய படிகளின் இடர்கள் - பிரியதர்சினிது

 


அழகாக தோன்றும் பிறப்போ!

அழுகையோடு முடியும் இறப்போ!

வாழ்வின் மாறாத கிளைக்கதை

அல்லவா!

இக்கிளைக்கதை இடையில் ஏற்றமும் உண்டு மாற்றமும் உண்டு!

ஏற்றத்தின் பாதை மகிழ்ச்சி

ஆனாலும்

இடையில் இருக்கும் பல

இகழ்ச்சிகளும்

அந்த இகழ்ச்சி கர்வத்தோடு

ஏற்றமும் தரும்

தலைகுனிவோடு இறக்கத்தையும்

தரும் அல்லவா!

இடர்களை உடைத்து முன்னோகி

செல்

புதிய அத்தியாயத்தையே படை

உன்னை வீழ்த்துவதற்கு பலபேர் இருக்கலாம்

உயர்ந்ததுவதற்கு ஒருவன் உண்டு

அவனே என் தன்னம்பிக்கை

என்று சொல்லிபார்

புயலும் தென்றலாக வீசக்கூடும்

பயணத்தின் பாதை எளிதாகிவிட்டால்

சுவாரசியம் உண்டோ!

ஆர்வத்தின் உச்சம் இடர்களின் சூழ்ச்சமம்

முற்களும் முல்லையாகமாறும்

கனம்

உன் வெற்றியின் மனம்

இடர்களை உடைத்து பலசரித்திரம் படை

உன்னை இகழ்ந்த படைகள் பதறட்டும்!

வெற்றி என்னும் மயில்தோகை

தோல்வி என்னும் உன்காயத்தை நீவட்டும்!

எதற்கும் அஞ்சாதே நிமிர்ந்து நில்

தோழா!!

பிரியதர்சினி. து

அறிவியல்இளங்கலை-நுண்ணுயிரியல்

இரண்டாம்ஆண்டு

மஞ்சக்கடி, திருவாரூர்மாவட்டம்