4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

கனவு நாயகன் !! - இரா. விஜயலெட்சுமி,

 



கனவு நாயகன் கலாம்

கருத்துடன் சொல்வோம் சலாம் !

உழைப்பால் வாழ்வில் உயரலாம் !

முயன்றால் முடித்துக் காட்டலாம் !  

தடைக்கல்லாம் தளர்ச்சியைத் தள்ளி

இலட்சியக் கனவு விரியும் கண்களும்   

செயல் வீரமுமிருந்தால்

வெற்றிப் படிக்கட்டை எட்டிப் பிடிக்கலாம் !                                    

விழுந்தாலும் விதையாய் விழுந்தால்

வீரியமிகு விருட்சமாகலாம் !    

உரமென உள்ளமிருந்தால்           

அக்னிச் சிறகை விரித்து            

விரைந்து விண்ணில் பறக்கலாம் !

விண்ணுக்கும் மண்ணுக்கும்     

விநோதப் பாதை சமைக்கலாம் !! 

தன்னம்பிக்கை குறிக்கோள் திறமையே

தகுதியாய் வலம் வரலாம் !                

தரணி போற்றும்  தலைவனாகலாம் !   

சாதனைச் சரித்திரம் படைக்கலாம் !                       

காலம் தந்த கலாமே !

உமக்கு எக்காலமும் வைப்போம் சலாமே!!

 

கவியாக்கம்                                இரா. விஜயலெட்சுமி, 

ஓவிய ஆக்கம்                                   கு. யுவராஜ்