4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜனவரி, 2021

உனது ஏக்கம் - தா.சரவணன்

 

 

மாட்டின் புண்ணை

தேடிக் கொத்தும்

காக்கையைப் போன்றது

இந்த பேருந்து நெரிசலில்

அவஸ்தைப்படும்

என் அங்கங்களை

உற்று நோக்கும்

உனது பார்வை

என்ன செய்வது

கோபமிருந்தும்

பொறுத்துக்கொள்ள

வேண்டியிருக்கு

உன் இனம் புரியாத

ஏக்கத்தை

என்ன சொல்லியும்

திட்டிவிட முடியாது

என்னும் பட்சத்தில்