செவ்வியல் பாக்களில் சூழலியல் தாக்கம்
இராச. இராமன்
முனைவர் பட்ட ஆய்வாளர்
பச்சையப்பன் கல்லூரி,சென்னை.
பேச.9444898149.
Email ID: ramanr1987@gmail.com.
முன்னுரை
இயற்கை நமக்கு கொடுத்த கொடை.இயற்கை,உலகம் தோன்றிய நாள்முதல் இன்று வரை அனைத்து உயிரினங்களுக்கு முக்கியப்பங்கு வகுகின்றது.வாழ்வியல் கருவூலமாகத் திகழ்கின்றது.இதில் ஒருசெல் உயிரி முதல் ஆறறிவு மனிதன் வரை அடங்கும்.இவற்றுள் நிலம்-நீர்-காற்றும் அடங்கும்.சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கை சூழலினைச் சிதைக்காமல் வாழ்ந்தனர்.இயற்கை அவர்களுக்கு அமுதச் சுரபியாகவே இருந்தது.இதற்கான சான்றுகள் செவ்வியல் பாக்களில் காண முடிகின்றது.இயற்கை வாழ்வியலில் மேன்மையோடு வாழ்ந்த நம் பழந்தமிழர்கள் நிலம் நீர் காற்று முதல் உயிரினங்கள் வரையில் தத்தம் சூழலியலுக்கு ஏற்ப வாழ்ந்தனர்;.நாம் வாழ்கின்ற பூமி நமக்கில்லை. வருங்கால சந்ததினருக்கு என்ற கொள்கையினை உணர்ந்து வாழ்ந்தனர். இக்காலத்தில் வாழும் மக்கள் சூழலியலுக்கு மாறாக பல எதிர்வினைகளோடு வாழ்கின்றனர்.தன்சுயநல தேவைக்களுக்கு ஏற்ப மாறத் தொடங்கினர். அவ்வாறு தோற்றிவித்த சூழல் மாற்றங்களால் ;பற்பல மாறுபட்ட நிகழ்வுகள் நிகழ்கின்றது. நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலையில் சங்ககாலத்திய மக்களின் வாழ்வியல் சூழலை எடுத்துரைத்து வழிநின்று விளக்குகின்றது இக்கட்டுரை.
சூழல்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள தாவரம் மற்றும் விலங்குகள் அனைத்தையும் உள்ளடக்கியதே 'சூழல்" ஆகும்.சூழல் 'சுற்றுப்புறம்" என்பது அகராதியின் விளக்கம். சூழ்கை> சுற்றுப்புறம் மணங்குன்று கூட்டம் சூழ்ச்சி வழிவகை அவதாரம் என்று தமிழ் அகராதி விளக்குகின்றது. இதனை ENVIRONMENT என்று ஆங்கிலத்தில் கூறுவர்.சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கை சூழலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தனர். அவர்கள் நிலம் நீர் காற்று ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.
சூழலியல்
சூழலியல்“Ecology”என்பது உயிர் வாழ்க்கையில் பரவலாகும். உயிரினங்களுக்கும் இயற்கைச் சூழலுக்கும் இடையிலான தொடர்பு பற்றி அறிவியல் அடிப்படையில் ஆராயும் துறையாகும்.இச்சொல் கிரேக்க மொழியில் இருந்து (Oikos) தோன்றியவை.வீடு அல்லது நிலையம் என்பது இதன் பொருளாகும்.சூழலியல் என்ற கருத்தினை முதன்முதலில் ஜெர்மனி உயிரியலாளர் 'ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்" (Errst Haecket) என்பவர் 1869-ல் பயன்படுத்தினார். இவரைத் தொடர்ந்து தாவரவியல் மற்றும் விலங்கியல் அறிஞர்கள் பயன்படுத்தினர்.இதனைப் போன்று ‘இக்காலஜி’ (Eclology) என்பது கிரேக்க மொழியில் 'இக்கோ" என்ற மொழியினையும் 'லாஜி" என்பது ஆய்வினைக் குறிக்கின்றது.இதனை, தாவரங்கள் மற்றும் விலங்குகள் உயிர் வாழ்வதற்கும் வாழ்க்கைக்கு தேவையான வாழ்வியல்கள், சுற்றுப்புறச்சூழல் வாழ்க்கை முறைகளுக்கும் இடையே உள்;ள தொடர்புகள் குறித்து ஆராயும் உயிரியலின் பிரிவு என்றும் குறிப்பிடுவர்.
சுற்றுச்சூழல்
ஒரு குறிப்பிட்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்களை சுற்றி சார்ந்து நிலவும் சூழலே சுற்றுச்சூழல் எனப்படும். சுற்றுசூழல் சார்ந்த அறிவியலே 'சூழலியல்" (Ecology) என்பர். சூழலியலோடும் நிலத்தோடும் தொடர்புடைய மரம் செடி கொடி விலங்கு பறவை முதலியவை வாழ்வதற்கு எவ்வாறு உதவுகின்றன என்பதை அறிவதே சுற்றுச்சூழலியல் ஆகும். இதனால் உருவானதே இத்துறையாகும்.சங்க இலக்கியத்தில் சுற்றுச்சூழலினை 'சூழ்" என்பது சூழ்ந்திருத்தல்> படர்தல்> ஆராய்தல்,ஆலோசித்தல் என்ற பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளனர். இதனை அகநானூற்றில் காணமுடிகின்றது.சூழல் என்பதினை பரிபாடலில் 'புடைவரு சூழல்" (பரி.19) என்ற பாடலின் மூலமும் அறியமுடிகின்றது.
சூழல் மண்டலம்
சூழல் என்பதற்கு நம்மைச்சுற்றியுள்ளவை என்று பொருள்படும்.உணவு,உறைவிடம் போன்றவைகளின் தேவைகளை நிறைவுச் செய்ய ஒர்உயிரினம் மற்றொரு உயிரினத்துடன் சார்ந்து வாழ்கின்றன.அவ்வாறு வாழும் உயிரினத்தினை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.1.உயிர் காரணி, 2.உயிரற்றக்காரணி என்பனவாகும்.உயிர்காரணியில் மனிதன், விலங்குகள் அடங்கும்.உயிரற்ற காரணியில் வளிமண்டலம்,நீர்மண்டலம் அடங்கும். மேலும் ‘சூழல் மண்டலம்’ என்ற சொல் 1935-ஆம் ஆண்டு ‘A.J.டான்ஸ்லீ’ என்ற அறிஞர் முதன்முதலில் பயன்படுத்தினார்.இதற்கு முன்னர் ‘மோபிஸ்’என்ற அறிஞர் 1877-ஆம் ஆண்டு விலங்குகள் தாவரங்கள் ஒரேதொகுப்பாக வாழ்கின்றன என்பதினை உயிரிக்கூட்டுச் செயல் என்றே குறிப்பிட்டார்.பிறகு ‘போர்ஸ்’1889-ஆம் ஆண்டு நுண்ணுயிரிக் கூட்டுச் செயல் என்றும், ‘பிரிடெரிச்சன்’1930-ஆம் ஆண்டு முழுமைக்கூட்டுச்செயல் என்ற சொற்களின் மூலம் சூழல்மண்டலம் பற்றிய கருத்தினை வெளியிட்டார்.
தொல்காப்பியத்தில் சூழலியல்
உலகில் தோன்றிய அனைத்து உயிர்கள் வாழ்வதற்கு அடிப்படையாகத் திகழ்வது சூழல் ஆகும். இத்தகைய சூழலினை பண்டைய தமிழர்களின் வாழ்வியல் எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடியாகத் திகழ்வது தொல்காப்பியம் ஆகும்.தொல்காப்பியர் சூழலினை ஐம்பெரும்பூதங்களினைக் கொண்டு நிலம் நெருப்பு நீர் காற்று ஆகாயம் என்று வரிசைப் படுத்தியுள்ளார். இதனை,
நிலம்தீ நீர்வளி விசும்போடைந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் - (தொல்.நூ.635)
என்றும்> இளம்பூரணர் தம் உரையில் கூறுகையில்,'நிலம் நிலத்திற்குக் காரணமாகிய நீரும்>நீருக்குக் காரணமாகிய ஆகாயமும் பெரிதும் என்றும்,இயற்கை என்பதனால் செய்துகோடல் பொறாமை அறிந்து கொள்க.நிலம் என்பதினால் பொருள் தோற்றுவதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதமும் கொள்க"(தொல்.இளம்.ப.419)என்று கூறுவர்.மேலும்,இதோடு மட்டுமல்லாது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையினைத் தொல்காப்பியர் நிலத்தினைக் கொண்டும் பிரித்து வரிசைப் படுத்தியுள்ளார்.அவற்றிக்கு உரிய பொழுதுகளையும் வரையறுத்தும் கூறியுள்ளார். அதனை,
முல்லை,குறிஞ்சி.மருதம்>நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே (தொல்.நூ.5)
என்றும்>ஐவகை நிலங்களான குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் மற்றும் பாலை என்றும் வகைப்படுத்தியமைக் காணமுடிகின்றது.இப்பகுப்பு முறையினை இன்றைய அறிவியலார்களால் கண்டுபிடித்தக் கோட்பாட்டினை பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழன் கண்டுணர்ந்த நிகழ்வினை இன்றும் காணும் பொழுது அறிவியல் விஞ்ஞானிகளுக்கு சவாலாகவும் வியப்பினையும் ஏற்படுத்துகின்றது.
வள்ளுவத்தில் சூழலியல்
நிலம் நீர் காற்று முதலிய இயற்கை மாசுபாடு அடைவதால் சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைந்து வருகின்றது.காடுகளை அழித்தல்,இயற்கை வளங்களைச் சுரண்டல், தொழிற்சாலைக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்படைகின்றது.இதனால் சுற்றுச்சூழலினைக் காத்திட உலகளவில் பல்வேறு விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றனர்.ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வினை மக்களுக்கு தம் குறள் மூலம் பதிவுச் செய்துள்ளதை அறியமுடிகின்றது. இதனை,
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும் (குறள்.298)
புறத்தூய்மைப் பற்றியும்,தூய்மையினையும் எவ்வாறு பேணிக்காத்தல் வேண்டும் என்பதினைப் பற்றியும் எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.மேலும்,நீரில்லாமல் வாழமுடியாது என்றும், பிறஉயிர்களுக்கு நீரின் முக்கியத்துவத்தினையும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை தடுப்பதற்கு மரங்களை வளர்த்து இயற்கையினை பாதுகாத்தல் வேண்டும் என்பதினை பற்றியும் வள்ளுவர் வலியுறுத்துகிறார்.இதனை,
நீர்இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கு
வான்இன்று அமையாது ஒழுக்கு (குறள்.20)
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு (குறள்.452)
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் (குறள்.637)
என்றும்,நாம் வாழும் சுற்றுச்சூழலினை பாதுகாக்க அனைவரும் ழுழுமனதோடு இணைந்து செயல்படுவேண்டும் என்பதினையும் பிற்கால நிகழ்வினையும் இயற்கை பாதுகாப்பினையும்; தத்தம் குறளின் மூலம் வலியுறுத்துகிறார் வள்ளுவர்.
சங்க இலக்கியத்தில் சூழலியல்
சங்கமக்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்தனர்.இவர்கள் தம் வாழ்க்கையில் இயற்கையினை ஒரு குறியீடாகவும் கொண்டனர்.இயற்கையான உணவு முறைகள்>வாழ்வியல் முறைகள் என்று பலநிலைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தனர். இம்மக்கள் சுற்றுச் சூழலுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எவ்வித பாதிப்பினை ஏற்படுத்தாதவாறு வாழ்க்கை முறையினை மேற்கொண்டனர்.மாசற்ற குடிநீரை குடித்தல். உணவினைச் சமைத்து உண்ணுதல்.உடல் தூய்மை.உணவுக்கலங்களில் தூய்மைப் பேணுதல். சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருத்தல். மரங்கள் செடிகள் வளர்த்தல். போன்ற பற்பல நிலைகளில் வாழ்ந்தனர். விலங்குகள் வளர்த்தல்.மனையறம் மாசுபாடற்றல். நோயுற்றக்காலத்தில் சூழலினைப் பேணுதல். இறைச்சிக்காக விலங்குகளைத் தூய்மையாக வளர்த்தல் போன்ற பல நிலைகளில் இம்மக்கள் வாழ்ந்தனர்.ஆனால் காலநிலை மாற்றதினாலும்; மக்கள்தொகைப் பெருக்கத்தினாலும்; சுற்றுப்புறச்சூழலும் பழக்க வழக்கங்களும் இன்று மாறுபட்ட கோணங்களில் உள்ளது. உலக மக்களின் வாழ்கையும், எதிர்கால சந்ததினரின் வாழ்க்கையும், கேள்விக் குறியாகவே உள்ளது.ஆனால், சாதரணமாக குடிக்கும் குடிநீரைக்கூட காய்ச்சி தம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு தூய்மையாக கொடுத்தனர் என்ற தகவலும் சங்க இலக்கியத்தில் காணமுடிகின்றது. இதனை,
‘முன்றில் இருந்த முதுவாய்ச்சாடி
யாம் கஃடு உண்டென வறிது மாசின்று’(புறம்.319)
என்றும்>சங்கமக்கள் உணவிற்காக காய்கறிகளை பச்சையாகவும், வேகவைத்தும் உண்டனர் என்பதினையும் காணமுடிகின்றது.ஒருசில மக்கள் வறுமையின் காரணமாகவும் குப்பையில் உள்ள கீரையும் சமைத்து உண்டனர் என்றும் தம் வாழ்வில் தூய்மையாக இருந்தனர் என்றும் அறியமுடிகின்றது.இதனை,
‘குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
.......... ......... ........ …… ……. ……
மாசொடு குறைந்த உடுக்கையள்’(புறம்.159)
என்ற இப்பாடலில் வழியின்கண் அறியமுடிகின்றது.மேலும்,புறநானூறு 399-ஆம் பாடலிலும் காய் கனி கிழங்கு என்ற அனைத்தும் நன்றாக வேகவைத்து உண்டனர் என்ற செய்தியும் அறியமுடிகின்றது. சில நேரங்களில் இறைச்சியினை உண்ணும் பொழுதும்,அதனை பாதுகாப்போடு பக்குவப்படுத்தி வைத்திருந்தனர் என்ற செய்தியும் சங்க இலக்கியத்தின் வழியாக காணமுடிகின்றது.இதனை,
‘கலிகெழு மறவர் காழ்கோத்து ஒழிந்ததை
ஞெலிகோற் சிறுதீ மாட்டி’(அகம்.169)
என்றும்>மேலும் தனிமனிதன் தூய்மையாக இருந்ததிற்கான செய்திகளும் காணமுடிகின்றது. அவற்றுள்> ஒவ்வொருவரும் குளித்து தனது உடலைத் தூய்மையாக பராமரித்து கொள்ளும் அவசியம் பண்டைத் தமிழர்களிடம் இருந்தன என்ற குறிப்புகளும் சங்க இலக்கியத்தில் காணமுடிகின்றது.அவற்றில் ஒன்றான வேள்விச்செய்யும் பார்ப்பனர்கள் எப்பொழுதும் குளித்து தூய்மையாக இருந்ததிற்கான செய்திகள் காணமுடிகின்றது.இதனை ஐங்குறுநூற்றில்,
தென்னிலை மருத்ததுப் பெருந்துறை
நின்னொடு ஆடினள் தண்புனல் அதுவே (ஐங்.753)
என்ற இப்பாடலின் மூலம் தூய்மையாக இருந்துள்ளனர் என்பதினையும் ஆடைகளையும் தூய்மையாக உடுத்தியுள்ளனர் என்பதையும் அறியலாம்.மேலும்,மக்கள் அனைவரும் ஒன்று கூடும் இடத்தினையும் தூய்மையாக வைத்துள்ளனர் என்ற செய்தியினையும் அகநானூற்றில் அறியமுடிகின்றது.அதற்கான குறிப்புகளும் கிடைக்கின்றன.இதனை,
களம் நன்கு இழைந்து கண்ணி சூட்டி (அகம். 22)
என்றும் பல இடங்களில் சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாக வாழ்ந்தனர் என்றும் அவர்களின் வாழ்க்கை சூழல் அமைப்பு இயற்கையோடும் ஒன்றிணைந்து வாழ்ந்தனர் என்பதினை அறியமுடிகின்றது.மேலும்> நிலம் நீர் வளி விசும்பு ஐந்தும்சேர்ந்த இயற்கையினை பழந்தமிழர் இயற்கை சூழலை சார்ந்து வாழ்ந்தனர்.சுற்றுச்சூழலை சார்ந்து வாழ்ந்து வந்ததையும் மக்கள் பாதுகாப்புடன் முன்னேற்றத்துடன் வாழ்ந்து வந்தனர் என்பதையும் சங்கப்பாக்களில் வழி அறியமுடிகிறது.சான்றாக. இயற்கை உரங்களான எரு மற்றும் செடிகொடிகளின் உதிர்ந்த சருகுகள் நிலப்பரப்பில் தாதுக்களாக பயன்படுத்தியதை காணமுடிகின்றது.இதனை,
‘முல்லை தாய கல்லதர்ச் சிறுநெறி
அர்யாது இருந்த அங்குடிச் சீறுர்த்
தாதெரு மறுகின் ஆபுறந் தீண்டும்’ (நற்.343)
‘….. தாது எரு மன்றத்துக்
தூங்கும் குரவையுள்’
கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகிற் போதோடு பொதுளிய’ (புறம்.215)
‘தாதெரு மறுகின் மாசுண விருந்து’ (புறம்.311)
‘தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து’ (பதிற்.13)
எருக்களினைக் கொண்டு மண் மாசுபடாதவாறு வேளாண்மை செய்ததை அறிய முடிகின்றது. மேலும்> வளமான மண்வளம் இருந்ததை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதனை,
‘தாதுஎரு மறுகின் மூதூர்’ (அகம்.165)
‘தாது எருத் தநைந்து முற்றம்’ (மலை.531)
‘தாதொரு மறுகிற் பாசறை பொழிய’ (புறம்.33)
என்பதின் மூலம் மூதூர், முற்றம், பாசறை என்ற வளமான மண் இடங்களை குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.எருதுகளின் எருவினைக் கொண்டு வேளாண்மை செய்ததைப் போன்று ஆடுகளையும் நிலங்களில் பட்டி அடைத்தும் அதன்மூலம் எருவினையும் இலைகளையும் கொண்டு மண்வளத்தினை அதிகரித்தனர்.மேலும். மரங்களை வளர்த்தும் அதனை எரித்தும் சாம்பலைக்கொண்டு வயல்களில் தெளிப்பதினால் பூச்சிகளில் இருந்து பாதுகாத்ததை பழந்தமிழர் பதிவுகள் (குறுந்.198)> (குறுந்.291) எடுத்துரைக்கின்றது.
‘கழனிமா அத்து’ (குறுந்.8)
‘கழனி மருதின்’ (குறுந். 70)
நிலத்தடி நீரை சேமிக்கும் மரங்கள் வயல்களில் அருகில் பயிரிடுகின்றனர்.இவை பயிர்கள் வளர்வதற்கு உறுதுணையாக இருக்கின்றது.இதனால் சூழல் மாசுபடாமல் இருந்தன. வயல்களில் அருகே மரங்கள் பயிரிடுவதால் இயற்கை வேளாண்மை பாதுகாக்கப்பட்ட சூழல் மாசு அடையாமல் இருந்தசூழல்கள் செவ்வியல் பாக்களின் வழியாக அறியமுடிகின்றது. இம்மக்கள் ஊட்டச்சத்துமிக்க உணவினை உண்டதால் நோயின்றி வாழ்ந்தனர். இயற்கை உரங்களுக்கு கால்நடைகளின் கழிவு மற்றும் மரம்> செடி கொடிகளின் கழிவு பயன்பட்டமையால் உற்பத்தித்திறன் அதிகரித்ததுடன் அஃறிணை உயிர்களின் உணவு சங்கிலி சிதைக்கப்படாமல் இருந்தது.குறிஞ்சி நிலமக்கள் தமக்கு தேவையான உணவினை இயற்கையில் கிடைத்ததைக் கொண்டும், காடுகளை அழித்து விவசாயம் செய்தும் அதன்மூலம் வரும் உணவினை உண்டுவாழ்ந்தனர்.முல்லை நில மக்கள் கால்நடை வளர்ப்பு எளிய விவசாயம் ஆகியவற்றின் மூலம் தங்களது உணவுத் தேவைகளை நிறைவுச் செய்தனர்.
(1).காடுகளின் அழிவுச்சூழல்
பொதுவாக இக்காலத்தில் முதன்மையாக நடக்கும் முக்கிய நிகழ்வாகும். மக்கள் தொகை பெருக்கம் இதற்கு காரணம்;. காடுகளை அழிப்பதால் வளங்கள் அழிகின்றது. விலங்கு போன்ற பல்லுயிர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகின்றன.இதன் காரணமாக இன்று பல்வேறு நிலைகளில் அதன் பாதிப்பினை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.சங்க இலக்கியங்களில் காடுகள் அழித்த, அழிக்கப்பட்ட செய்திகள் பரவலாகக் காணப்படுகின்றன. இதனை, கடும்வெயில்,காட்டுத்தீ, காட்டாற்று வெள்ளம்,காட்டு விலங்குகள் அழிவாலும் ஏற்பட்ட பாதிப்பினை சங்கப்பாக்களில் அறியமுடிகின்றது.காட்டுத்தீயானது கடுமையான வெப்பம், மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வு.மனிதர்களின் அலட்சியம் போன்றவற்றால் நிகழ்கிறது. அவற்றில் கலித்தொகையில் காட்டுத்தீ ஏற்பட்ட நிகழ்வினையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பினையும் எடுத்துரைக்கிறது.இதனை,
‘கனைகதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்புத்தீ
முலை பரந்து தலைக் கொண்டு முழங்கிய முழங்கு அழல்
மயங்கு அதர் மறுகலின் மலை தலைக் கொண்டென
விசும்பு உற நிவந்து அழலும் விலங்கு அரு வெஞ்சுரம்’(கலித்.150)
இப்பாடலின் வழி ‘ஞாயிறு சுடுவதால் மலை எங்கும் பரவிய காட்டுத்தீ விசும்புற ஓங்கி வெப்பத்தை வீசுவதால் விலங்குகள் அங்குமிங்குமாய் அலைந்து திரிகின்ற கொடிய கரம்’ என காட்டுத்தீயின் கொடுமையைப் பறைசாற்றுகிறது கலித்தொகை.மேலும், அகநானூறு மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் ஏற்பட்ட நெருப்பு காற்று சுழன்று அடித்துப் பரவச் செய்வதையும், காட்டுத்தீயின் நிலையினை எடுத்துரைக்கிறது.இதனை,
‘ஒலிகழை பிசைந்த ஞெலி சொரி ஒண்பொறி
படு ஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை
முளிபுல் மீமிசை வளி கழன்று அறாஅக்
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்’ (அகம்.39)
மேலும்,காட்டுவெள்ளத்தின் கொடிய நிலையினையும் திருமுகாற்றுப்படை பாடல்வரி.296316 வழியாகவும், பரிபாடல 12;.பாடல் வழியாகவும் காட்டாற்றின் வெள்ளத்தின் கொடிய விளைவுகளை எடுத்துரைக்கின்றது.
வறட்சியானது குறித்த பருவத்தில் மழை பெய்யாது போனால் எற்படும் வறட்சி, காடுகள் மற்றும் காட்டுயிரிகளின் அழிவுக்கு முக்கியமான காரணமாக அமைகிறது. சங்க இலக்கியங்களில் பாலைத்திணைப் பாடல்கள் இத்தகைய கடும் வறட்சி குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் புறநானூறு.174,குறுந்தொகை.67, நற்றிணை.105, கலித்தொகை.10 பாடல்கள் மிக விரிவாகப் பேசுகின்றன.
(2).விலங்குகள் அழிவுச்சூழல்
பழந்தமிழகத்தில் காட்டுயிரிகளின் மீதான மனிதனின் ஆளுமை பலவாறாக வெளிப்படுத்தியதை சங்க இலக்கியங்கள் பதிவுச்செய்துள்ளதை அறியமுடிகிறது.அதோடு அதனை வேட்டையாடி அழித்தும் தம் தேவைகளை நிறைவுசெய்து கொண்டதையும் காணமுடிகின்றது.காட்டு விலங்குகள் காட்டுத்தீ, கடும் வறட்சி, விலங்குகளின் பகை போன்றவற்றின் காரணமாக இயற்கையாக அழிவதையும்,உணவுத்தேவைக்காகவும், வர்த்தக ரீதியாகவும் செயற்கையாக விலங்குகளை அழித்தும் சூழல் மாற்றம் ஏற்படுகின்றது.
இயற்கையான சூழலில் விலங்குகள் அழிவினை எடுத்துக்கூறுகையில்
‘களி திகழ் கடாஅத்த கருங்களிறு அகத்தவா
முளி கழை உயர்மலை முற்றிய முழங்கு அழல்’ (கலித்.25)
மதம் கொண்ட யானை உள்ளிருக்க,மூங்கில்கள் பற்றி எரிந்து நெருப்பும் புகையும் சூழ்ந்த மலை குறித்த செய்தியை கூறுகிறது.மேலும்>கடுமையான மழைபொழிவின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மலையில் வாழும் மான் முதலிய விலங்கின் கூட்டமெல்லாம் கலங்கின என்னும் செய்தி காட்டாற்று வெள்ளத்தால் மலைவாழ் விலங்குகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் எடுத்துரைக்கிறது பரிபாடல்.இதனை,
‘நிலம் மறைவர் போல் மலிர் புனல் தலைத் தலைஇ
முலை இனம் கலங்க, மலைய மயில் அகவ
முலை மாசு கழியக் கதழும் அருவி இழியும்’ (பரி.3-6)
மேலும்,காட்டுயிர்கள் இடி,மின்னல் போன்ற இயற்கை சீற்றத்தினால் பாதிப்புகள் அடைகின்றன. இதனை, குறுந்தொகை பாடல்.158, 307இல் கடும் வறட்சியால் நீர்வேட்கை கொண்டு அலறும் யானைகளையும்>செந்நாய்களையும் சங்கப்பாடல்களின் வழியாக காட்சிப்படுத்தியதை அறியமுடிகின்றது. மேலும் செயற்கையான சூழலில் அழிவும் விலங்கினங்கள் மனிதன் தன் சுயநல தேவைக்காக பிறவிலங்கினங்களை அழிக்கப்படுவதையும், அதன் வாழ்விடங்களை அழிக்கப்படுவதையும் காணமுடிகின்றது.உணவுத் தேவைக்காகவும் மதிப்பு கூட்டு பொருட்களுக்காவும் கள் விலைக்காகவும் போரில் பயன்படுத்தப்படுவதற்காகவும் பழந்தமிழகத்து காட்டுயிரிகள் அழிவை எதிர்கொண்டதற்கு சான்றுகளும் காணக்கிடக்கின்றன. இதில் கடமானை வேட்டையாடுவதை,
‘கல்லென கானத்து கடமா ஆட்டி’ (குறுந்.179)
மனிதனால் தோண்டப்பட்ட குழியில் அகப்பட்ட யானை குறித்தும்
‘நீடு குழி அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்’ (புறம்.17)
மேலும், யானையின் கொம்பினை உணவிற்காக விற்ற செய்தியினை (குறுந்.100), பதிற்.(30) போன்ற பாடல்களின் மூலம் அறியமுடிகின்றது.மேலும்,புலித்தோலுக்காக கொள்ளுதல், மான்கொம்புகள் மற்றும் தோலுக்காக கொள்ளுதல் போன்ற தகவல்கள் சங்கப் பாடல்களின் காணமுடிகின்றது.
(3).பறவையினங்கள் அழிவுச்சூழல்
‘மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழமுடியும்,பறவைகள் இல்லாமல் மனிதர்கள் வாழமுடியாது’என்ற சாலீம் அலியின் கோட்பாட்டை இன்று நாம் நெருங்கி கொண்டிருக்கிறோம்.இன்றைய காலங்கட்டத்தில் மனிதர்களின் ஆதிகத்தினால் பறவையினங்கள் அழிந்துகொண்டு செல்கின்றன. பெரும்பாலான பறவையினங்கள் அழிந்துவிட்டன. அதன் சுடுவடுகள் இல்லாமல் இருக்கின்றன.இதற்கு காரணமாக அமைவது மனிதகுலமே ஆகும்.இதனைப்போன்று சங்ககாலத்தில் மக்கள் தம்தேவைக்காகவும் பறவையினங்களை அழித்தனர்.காட்டுயிரி விலங்குகளைப் போலவே பறவைகளும் கடும் வெப்பத்தையும் காட்டுத்தீயையும் எதிர்கொள்ளும் ஆற்றலின்றி அழிதல் உண்டு.இதனை,
‘ஊன் பதித்தன்ன வெருவரு செஞ்செவி
எருவைச் சேவல் கரிபு சிறை தீய
வேனில் நீழய வேய் உயர் நனந்தலை’ (அகம்.51)
ஆண் பருந்தின் சிறகுகள் கரிந்து தீய்ந்து போகுமாறு வேனிலின் கொடுமை மிகுந்திருந்தது என அகநானூறு கூறுகிறது.மேலும், கலித்தொகையில் பாலையின்கொடுமை நிலையை பறவைகளுக்கு ஏற்படுவதை கூறுகிறது.இதனை,
‘புள்ளும் பழங்காப் புலம்பு கொள் ஆரிடை’ (கலித்.4)
மேலும்,
‘மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇ
கோழி வயப்பெடை இரிய’ (திருமுருகு.310-311)
என்ற பாடலில் மயிலும் காட்டுக் கோழியும் காட்டாற்று வெள்ளம் கண்டு அஞ்சி ஓடிய செய்தியைத் திருமுருகாற்றுப்படையில் காணமுடிகிறது.கடும் வறட்சியும் காட்டாற்று வெள்ளளும் காட்டுயிரிகளின் வாழ்விடங்களைச் சிதைப்பவை. வாழிடச் சிதைவு இவ்வுயிரிகளின் வாழ்வையே அழிப்பதாகும்.மேலும்,மயிலின் முட்டைகள் கருங்குரங்கின் குட்டிகள் உருட்டி விளையாடும்> இதனால் அதன் குஞ்சுகள் வெளிவரும் முன்பே அதன் அழிவை எதிர்கொள்ளுகின்றன என்பதை அறியமுடிகின்றது.
‘குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே’ (புறம்.214)
மேலும்,புறாக்கள் வலைவிரித்து வேட்டையாடப்படுவதை நற்றிணை பாடல் 189 மற்றும் கணந்துள் என்னும் பறவை வேட்டையாடுவதை நற்றிணை பாடல்.212 குறிப்பிடுகின்றது. மேலும், சிறுவர்களால் பறவைகள் வேட்டையாடினச் செய்தியும் பழந்தமிழர்கள் பதிவுச் செய்துள்ளனர்.இதனை>அகநானூற்றுப் பாடல் 290 அறியமுடிகிறது.மேலும்,புறநானூற்றில் பாடல் எண்.324 இல் பறவைகளின் ஊனைத் தின்று புலால் நாற்றம் வீசும் வாயினை உடைய வேட்டுவரைக் குறிப்பிடுகிறது.பறவைகளை அவற்றின் இறைச்சிக்காக வேட்டையாடி உண்ணும் வேட்டுவர்களால் பறவைகள் தொடர்ந்து அழிவையும் இன்னல்களையும் வாழ்விட இழப்பையும் எதிர் கொண்டிருக்கலாம் என அறியலாம்.
சூழல் மாசுபாட்டினால் ஏற்படும் விளைவு
சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் பல்வேறு விளைவுகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றோம். அவற்றினை,1.தரமற்ற காற்றுமாசுபாட்டினால் அனைத்து உயிரினங் களுக்கும் உயிரிழக்க நேரிடுகின்றன.2.மூச்சுதிணறல்,இதய நோய்,தொண்டை எரிச்சல், நெஞ்சுவலி, மூச்சடைப்பு, தோல் நோய்>கண் பாதிப்பு போன்ற நோய்களினால் பாதிப்படைகின்றன. 3.மாசுபடுதலினால் நாளொன்றுக்கு 14>000 இறப்புகள் ஏற்படுகின்றன. 4.காற்று மாசுபடுவதால் வயதானோர் மூச்சுதிணறல் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. 5.தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் வேதிப்பொருட்கள் மூலமும் புற்றுநோய் போன்றவை உருவாகின்றன.6.நரம்பு தசையில் அடைப்பு ஏற்படுகின்றன.7.மண்மாசுபடுதல்> விளைச்சல் குறைதல் உணவுகளில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. 8.விலங்குகள் இரசாயணப்படிந்த பயிர்கள்>புட்கள்,உண்பதால் இவை சங்கிலித்தொடர் போன்று ஒரு உயிரியில் இருந்து மற்றொரு உயிரிக்கு தொடர்ந்து பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. 9.ஒருவருடத்திற்கு சுமார்-15 மில்லியன் ஏக்கர் வேளாண்மை விளைநிலங்கள் பாதிப்படைகின்றன.10.தாவரங்களில் வளர்ச்சிதை மாற்றம் ஏற்படுத்துகின்றன.11.மக்கள் தொகைப்பெருக்கம் மிகமுக்கியப் பிரச்சினையாகும்.
முடிவுரை
இக்காலக்கட்டத்தில் வாழும் மக்கள் தம் அன்றாட நாட்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உட்படுகின்றனர்.இவை பருவகால மாற்றங்கள்,இயற்கை சீற்றங்கள்> வெப்பநிலை தாக்கங்கள், கொடிய நோய்கள் என பல்வேறு நிலைகளில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இவை அனைத்திற்கும் சூழலில் மாறுபாட்டினால் நிகழும் மாற்றங்கள் ஆகும். இம்மாற்றம் முன்னர் சங்கமக்கள் சூழலியல் பாதிப்பு ஏற்படாதவாறு வாழ்தனர். அதற்கான சான்றுகள் சங்கப்பாடல்களில் காணமுடிகின்றது.மக்கள் அனைவரும் சுற்றுப்புறத்தினையும் சூழலினையும் தூய்மையாகவும் பேணிக்காத்தனர்.ஆனால் இன்றையக் காலக்கட்டத்தில் இம்மாறுதல்கள் தலைகீழாக இருப்பதை அறியலாம்.இம்மாற்றத்தினை கொண்டுவருவதற்கு பழந்தமிழர்கள் கையாண்டுள்ள முறையினை பின்பற்றினால் இனிவரும் சந்ததினருக்கு நல்லதொரு சூழல் அமைப்பினை உருவாக்கிட முடியும்.
-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக