சங்கப் புலவரும் இலக்கியப் பண்பும்
செல்வி. க.மு.பா. பர்ஹானா,
தற்காலிக உதவி விரிவுரையாளர்,
கிழக்குப்பல்கலைக்கழகம்,
இலங்கை.
மின்னஞ்சல் : fathimafarhana1994fff@gmail.com
தொ.இல
: 0770337804
ஆய்வுச்சுருக்கம்
சங்கத்தமிழ் சுருங்கிய சொல்லாலே விரிந்த பொருளை விளக்கும்
வகையில் அமையப் பெற்றது. அக்கால செய்யுட்கள் பிற் காலப்பகுதிகளில் எழுந்த செய்யுட்களில் சிறந்தனவாக காணப்படுவதற்கு அக்கால மொழி நிலையினையும்
புலவர்களையும் அவர்களின் புலமையையும் காரணமாக கூற முடியும்.
ஆய்வு
அறிமுகம்
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து
கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட
செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட
வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக்
கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும்
பெண்களும்இ நாடாளும் மன்னரும் உண்டு.
அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சங்க காலப் புலவர்கள் சான்றோர்
என்றாலும் அவர் பாடிய செய்யுளை சான்றோர் செய்யுள் என்பது தமிழ் வழக்காகும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்"
என்ற உலகில் உள்ள புலவர்கள் மன்னர்களுக்கு உரிய பெருமதிப்பை மக்கள் ஊடாக பெற்றனர். மக்களிடத்தில்
பேரன்பும் அரசரை அறநெறியில் செலுத்தும் முயற்சியில் அஞ்சா நெஞ்சத்தோடும் எவ்விடத்திலும் உண்மையை எடுத்துக்
கூறும் மன வல்லமை உடையவர்.
வாழ்த்து மொழியும் பாராட்டும் உரியவருக்கு அன்றி வழங்காத்தீரமும் உறுதியும் உடைய பெருந்தகையாளர் இதனாலன்றோ
அவர்களின் அன்பை பெறுதல் பெரும்பேர் எனக்கொண்டு அக்காலத்து அரசர்களும் வேண்டுவன புரிந்து
அவர்களை சிறப்பித்தனர் புலவர் பாடும் புகழ் இன்னும் பெரிதாக வேறெதனையும் மதியாத அரசர்
அவர்களின் உணர்ச்சியை தூண்டக்கூடிய முறையில் வாழ்ந்து அவர்களால் பாமாலை சூட்டப் பெற்றனர்.
வறுமையில் கிடந்து வருந்திய போதும் அவர்கள் புகழுக்குரிய
ஒருவனே அன்றே பிறரை பாடாது அவன் கொடுப்பது கூழாயினும் அதனை உணர்ந்து ஏற்று வறுமையை
போக்கி வாழ்ந்து வந்தனர்.
துன்பம் வந்தபோதிலும் துளங்குதல் அறியாத உள்ளம் படைத்த
அப்புலவர்கள் பூசனை புரிந்து தம்மை போற்றிய மன்னருக்கு உயிரையும் அளித்தனர். அரசனின் சீற்றத்திற்கு இரையாகி அழிந்து
கிடந்த உடலை கண்டு அவர்கள் இரங்கினர் நாட்டின் நலன் கருதி பல அரசர்களை சந்து செய்து தமிழ் நாட்டில் ஒற்றுமையை நிலவச்
செய்து தமிழர்தம் பண்பாட்டினை வளர்த்ததோடு பிறர் புகழ் பாடியும் தம்புகழ் சங்ககாலப்
புலவர்களின்புலவர்களின் வாழ்க்கை உள்ளுந்தோறும் உவகையளிக்கும் தன்மையுடையது.
கபிலர்,
பரணர் முதலிய சங்க கால புலவர்கள் தாரகை நடுவில் தன்மதி போன்று விளங்கி
தமிழ் புலவர்கள் வாழ்க்கைக்கு தனிப்பெருமை கொடுத்த வரலாறு புறநானூறு முதலிய தொகை நூல்களில்
காணப்படுகின்றது அவற்றாலன்றி வேறு எவ்வகையிலும் வாழ்க்கையை தெளிவாக அறிந்து கொள்ள முடியாது.
பெறுபேறும் கலந்துரையாடலும்
இன்பத்தமிழ்ப்பாக்களை சங்கப்புலவர்கள்
பாடிய விதம்
அப் புலவர்களின் பெருமையை ஒருவாறு கண்டு தெளியலாம். ஆழ்ந்த கருத்துக்களை இனிய மொழி நடையில்
தெளிவாக பாடுவதற்கு அவர்கள் கல்வி அறிவு மட்டுமன்றி சீரிய ஒழுக்கம் காரணமாயிற்று அழிவுகளால்
மேம்பட்டு விளங்கிய அவர்களின் உள்ளம் ஒளி உடையதாக விளங்கிற்று உள்ளத்தில் ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும் எனும் உண்மையை காட்டுவனவாக சங்கச் செய்யுள்களில் யாவும் விளங்குகின்றன.
அதனால் அன்றோ அவர்கள் சான்றோர் என்று அழைக்கப்பட்டனர். சான்றோர் எனும் சொல் சால்பு எனும் சொல்லை அடியாக கொண்டுள்ளது.
அனைத்து நற்குணங்களும் நிரம்பப் பெறுதல் சால்புடைமை எனப்படும். இத்தகைய நற்குணங்கள் அனைத்தும்
அமையப்பெற்ற சான்றோர் பெரும் தொகையினராக அக்காலத்தில் வாழ்ந்தமையால் சங்ககாலத் தமிழகம்
சிறப்புற்று விளங்கியது எனலாம்.
நாட்டின் நலன் கருதி அவர்கள் எவ்வழி களில் சென்று உழைத்தனர்
என்பதையும் அரசன் முன்னிலையில் அஞ்சாது நின்று வழிகாட்டி நாட்டை நல்வழிப்படுத்திய வகையினையும்
புறநானூறு செய்யுளும் தெளிவாக காட்டுகின்றன.
புகழ்ந்து பாடி இகழ்ந்து பாடினும் பாடிய பொருளை பயந்தே விடும் வெற்றி
உண்மை கவிதைகள் அவர்கள் நாவின் எழுந்தன. அதனால் அவர்கள் உயர்ந்த
புலவர் என்றும் மொழிப்
புலவர் என்றும் சங்க காலத்திலே பாராட்டப்பட்டனர். ஆகவே இத்தகைய
தூய உள்ளம் படைத்த சிலரின் நட்பை அக்கால அரசர்கள் பெரிதும் விரும்பியதோடு அவர்களால்
புகழ்ந்து பாடப்படுதலை பெரும்பெயர் எனக்கருதி அவர்கள் உள்ளம் உவப்பன செய்து அவர்களை
தழுவிக்கொண்டனர்.
ஐந்தாம் நூற்றாண்டுக்கு மேற்பட்ட புலவர்கள் சங்க காலத்திலிருந்து
செய்யுட் செய்திருக்கின்றார்கள் என்பது அக்கால நூல்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. குறுகிய காலப்பகுதியில் பெரும் தொகையினராக
புலவர்கள் தோன்றியது போல வேறு காலப்பகுதியிலும் தமிழ்நாட்டில் தோன்றவில்லை.
பெருந்தொகையினராய் புலவர்கள் தோன்றுவதற்கான காரணங்கள்
புலவனுடைய உள்ளமானது குழந்தையினுடைய உள்ளத்தை ஒருவாறு
ஒத்திருக்கின்றது. இயற்கை காட்சிகளை கண்டு குதூகலங்கொள்ளுதல்இ சொல்லும் அது குறிக்கும் பொருள்
உணர்ச்சி முதலியவற்றையும் அவதானித்தல் கற்பனை உலகில் சஞ்சரித்தல் ஆகியன குழந்தையிடத்திலும்
புலவனிடத்திலும் காணப்படும் சிறப்பியல்புகள். குழந்தைப்பருவம்
ஒருவனை விட்டு நீங்கவே அதற்குரிய சில சிறப்பியல்புகளும் அவனை விட்டு பெரும்பாலும் அகன்று
விடுகின்றன அவ்வாறு அது நீங்களும் கற்பனை உலகில் சஞ்சரித்தல் முதலிய சிறப்பியல்புகள்
அவனை விட்டு நீங்காது வளர்ந்து வருகையில் அவன் சிறந்தவன் ஆவான் என்பதில் சந்தேகமில்லை
குழந்தைப் பருவத்தில் உள்ள ஒரு சமுதாயத்திலும் குழந்தைக்குரிய மேற்கூறிய சிறப்பியல்புகள்
காணப்படுவதனால் ஒரு சமுதாயம் குழந்தை பருவத்தில் இருக்கும் போது அதன் தொகுதியிலுள்ள
மக்களுள் பலர் தம் உணர்ச்சியைப் புலப்படுத்தும் பார்க்கக் கூடிய ஆற்றல் உடையோர் ஆயிரம்.
சமுதாயம் வளரத் தொடங்க அத்தகைய புலமை உடையவர் குறைந்த போதிலும் இலக்கிய
வரலாறு நூல்கள் கூறும் உண்மையாகும் இதனாலேயே ஒரு செய்யுள் இலக்கியம் முதலில் தோன்ற
அதனைத்தொடர்ந்து உரைநடை இலக்கியம் தோன்ற நின்றது. தமிழ் மக்களின்
பண்பாட்டு வளர்ச்சி பற்றி நோக்கும் போது சங்க காலத்தில் சமுதாய கற்பனை உலகில் சஞ்சரித்தல்
முதலிய சிறப்புப் பண்புகளை உடையது விளங்கியதால் அச் சமுதாயத்தில் பல சிறந்த புலவர்கள்
தோன்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகத்தும் புறத்தும் உடன்பாடில்லாத சங்ககால மக்களின்
வாழ்க்கை முறையும் அக்காலத்திற்கு சாதகமாக இருந்தது ஒரு புலவனிடத்தில் காணப்படும் சிறப்பியல்புகள்
தெளிந்த உள்ளமும் விருப்பு வெறுப்புகளை ஏற்படும் இன்ப துன்பங்கள் ஒருவன் மனதை தாக்கிக்
கொண்டிருக்கும் ஆயின் எத்துணை நூலறிவு இருந்தபோதிலும் அவன் உள்ளத்தில் உண்மை அறிவு
உயர்ந்து கவிதையும் குதிக்க மாட்டாதே நிம்மதியில்லை மனதுக்கு நிறைவு தன்மை எங்கிருந்து
வருதல் கூடும் அத்தகைய உள்ளத்தில் சிறந்த கவிதைகள் பெறமாட்டார்கள் மன அமைதியை தரவல்ல
வாழ்க்கை முறையும் உளப்பாங்கு ஒருவனிடத்தில் அமையாவிடில் அவன் உண்மை உரியவனாக சங்ககாலப்
புலவர் உள்ளத்தின் தெளிவும் நிறைவு தன்மையும் கொண்டிருந்தமை அவர் செயல்களிற்கு சான்றாகும்.
சங்ககால செய்யுள்களில் சொற்பொருட் போக்கிற்கு பிற்கால செயல்களின் பொருட்கள் பலவகையில் வேற்றுமை உண்டு. சங்க காலத்திலிருந்து புலனெறி வழக்கு
பொருள் மரபு முதலியவற்றில் சில பிற்காலத்தில் வழக்கொழிந்து போய்விட்டன. பழைய முறைகள் கைவிடப்பட்ட புதிய முறைகள் பிற்காலத்தில் தோன்றலாயின மக்களின்
நடையுடை பாவனைகள் காலத்துக்கு காலம் வேறுபடுவது போலவே செய்யுள் வழக்கு முதலியனவும்
வேறுபடும் இயல்பாகும் ஒரு காலத்தில் இருந்த வழக்கு வேறு ஒரு காலத்தில் ஏற்படுகின்றது
என்பதையும் புதிய தரும் வளர்ப்பு தோன்றுவதற்கான காரணங்கள் எவை என்பதையும் நாம் அறிந்த
ஒன்றே. தமிழ் இலக்கிய வரலாற்றில் செவ்வனே அறிந்துகொள்ள இயலாது
சங்க காலம் ஏறக்குறைய 300 ஆண்டுகளை கொண்ட ஒரு காலப் பகுதி என்பதை
குறிப்பிடத்தக்கது. அக்காலப் பகுதியிலேயே செய்யுள் மரபு சிறிது
சிறிதாக மாற்றமுற்று சென்றிருப்பதை அக்கால செய்யுள்களில் காணலாம். அக்காலப்பகுதியில் மக்கள் வாழ்க்கை மிக விரைவாக முன்னேறியது என நூல்களால் அறிய
முடியும் வாழ்க்கையில் உண்டான மாற்றங்களுக்கு இணங்க செய்யுள் மரபு மாற்றமடைந்துள்ளது.
சங்ககால செய்யுளில் காணப்படும் தனிப் பண்புகள்
ஒரு பொருளை எவ்வாறு அமைதல் வேண்டும் எனும் மரபு அக்காலப்
புலவர்கள் செய்யுள்களை இயற்றினார் மக்களுடைய இயக்கங்களும் அனுபவங்களும் செயல்களுக்கு
பொருளாக அமைதல் வேண்டும் என்பது அக்கால மரபாகும் காதல் வீரம் முதலிய பன் மலை சித்தரித்துக்
காட்டும் வகை இயக்கத்தைப் அதை அவர்கள் இயற்கையின் பல்வகை கோலங்களையும் சித்தரித்து
காட்டுகின்றனர் எனினும் இயற்கை வருணனை சங்கச் செய்யுள்களில் முதல் இடம் பெறவில்லை மக்களுடைய
பொருத்தம் தான் முதலிடம் பெற்று விளங்குகின்றது அதனை கூறுமிடத்து அதற்கிணங்க இயற்கை
காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றனர்.
இயற்கையோடு நெருங்கிய தொடர்புடையது அக்கால மக்களின்
வாழ்க்கை பூக்களாலும் தம்மை அலங்கரித்துக் கொள்வதில் பெருமை உடையவர் அக்கால அரசர் சிலர்
மயிலுக்குப் போர்வையும் முல்லைக்குத் தேரும் இந்த செய்திகள் இயற்கை காட்சிகளை அக்கால
மக்களுக்கு இருந்த ஈடுபாட்டினை நன்கு எடுத்துக் காட்டுகின்றனர். இயற்கையை மட்டுமே சித்தரித்துக் காட்டும்
கலைகள் அதற்கு இடமளிக்கவில்லை தத்துவங்களைக் கூறும் செய்யுள்களில் ஆங்காங்கு இயற்கை
காட்சிகளும் நிகழ்ச்சிகளும் சிறப்பாக அமைக்கப் பட்டிருப்பதை காணலாம். முதல் கரு உரிப்பொருள்கள் இடமாக அமைந்து இருக்கின்றன இவற்றில் உரிப்பொருளை
உள்ளது. இதனை அடுத்து மாதம் சிறந்ததாக கருதப்பட்டன. உரிய இருவகை பொருள்களோடு வரிசையில் அமையுமாயின் கட்சியில் விளக்கம் உற்று திகழும்
எனக் கொள்ளப்பட்டது அவ்வாறு முதற்பொருள் கருப்பொருள் சிறப்பாக அமைந்து செயலில் இயற்கை
வர்ணனை காணலாம். புறத்திணை செய்யுளிலும் இயற்கை வருணனைகள் இருப்பினும் அச்சூழலில் முதலிடம்
பெறுவது மக்களுடைய புற ஒழுக்கம் ஆகிய
போர் முதலியவையே சங்க கால புலவர்களுக்கு இயற்கையோடு இருந்த ஈடுபாட்டினை
அவர்கள் துணிந்து கூறிய உவமைகளாலும் பிறவற்றாலும் அறிந்துகொள்ளலாம் வேறுபட்ட இரு பொருள்களுக்கு
இடையே உள்ள ஒற்றுமையை கண்டு அதனை உள்ள ஒருவகை அளிக்கும் வகையில் எடுத்து காட்டும் காட்சி
உள்ளத் தெளிவு உணர்வுடைய புல் அவரிடத்தில் பிறரிடத்தில் காணப்படமாட்டாது உவமைகளை கையாளும்
வகையில் இருந்து ஒரு புலவன் உடைய கற்பனா சக்தியையும் பிற ஆற்றல்களையும் ஒருவாறு அறிந்து
கொள்ளலாம் சங்கப்புலவர்கள் இயற்கை காட்சிகளையும் முயற்சிகளையும் எந்த அளவிற்கு கூர்ந்து
அவதானித்தார்கள் என்பதை அவர்கள் அமைத்த உவமைகள் வாயிலாக நாம் அறியலாம்.
வேறுபட்ட பொருள்கள் ஒன்றுக்கொன்று இணையாக வருதலை காணும்
போது ஒரு உணர்ச்சி தோன்றி நின்றது அவனுடைய கருத்தையும் உணர்ச்சியை வெளிப்படுத்தும்
வகையில் நோக்கும் போது தங்களுடைய ஆற்றலை கண்டு இன்பம் அடைய முடிகின்றது.
சங்கச் செய்யுள்களில் சாதாரண விடயங்கள் மட்டுமன்றி உள்ளுறை உவமம் காணப்படும்
சாதாரண உவமைகள் வருமிடத்து உவமையும் பொருளும் வெளிப்பட்டு ஆற்றலைக் காணலாம் உருவமும்
வருமிடத்து உண்மை வெளிப்பட்டு நிற்க பொருளுக்கு வரும் வெளிப்படையாக கூற விரும்பாத ஒன்றை
குறிப்பாக அப்புறப்படுத்தப்பட்டு உள்ளுறை உவமம் கையாளப்படுகின்றது. தோழி முதலியோர் கூற்றாக வரும் செய்யுள்களில் உள்ளுறை உவமம் பெரும்பாலும் வருதல்
உண்டு தோழி தலைவனுடைய ஒழுக்காற்று வெளிப்படையாக கடிந்து கூற விரும்பாத விடத்து அவனுடைய
நாட்டில் காணப்படும் இயற்கை காட்சிகளை புனைந்து கூறும் வாயிலாக தன் கருத்தை வெளிப்படுத்தல்
உண்டு இத்தகைய உள்ளுறை உவமங்கள் குறிப்பாக பொருளை உணர்த்தும் இறைச்சி முதலியனவும் சங்கப்
புலவர்களால் சிறப்பாக கையாளப்பட்டன.
சங்ககால அகத்திணையில் வழக்கினை புலனெறி வழக்கு என்று
கூறுதல் உண்டு அது நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் ஆதாரமாகக் கொண்டு எழுந்தது என்று
தொல்காப்பியர் கூறுகின்றனர். அகத்திணை பொருளை கூறும்போது அதற்கு வேண்டிய காலம் இடம் சூழல் முதலியவற்றை வைத்துக்
கொண்டு அதனை ஒரு செய்யுளில் கூறுதல் இலக்கணம் கூறும் பொழுது புலவன் தன் கூற்றாகக் கூறுதல்
தலைவன் தலைவி தோழி முதலான அருள் ஒருவர் கூற ஒருவர் கேட்பதாக கூறுதலே மரபாகும் புறத்திணை
பொருளைக் கூறும் போது புறங்கூறுதல் உண்டு. ஒரு பொருளை ஒரு செயலை
அனைத்து கூறுதலே சமகாலத்தில் பெருவழக்காக இருந்தது. தொடர்ச்சியாக
வரும் பல செயல்களை ஒரு பொருளை கூறுதல் பிற்கால வழக்காகும்.
சங்க இலக்கியத்தின் தனிச் சிறப்பிற்கு காரணமாக இருந்தவற்றுள்
அக்கால மொழி நிலையும் ஒன்றாகும் ஆரியம் முதலிய பிற மொழிகளில் உள்ள சொற்களில் பெரும்பாலான
பல எழுத்துக்களால் ஆனவை தமிழ் மொழியில் உள்ள சொற்கள் சில எழுத்துக்களால் ஆனவை சொல்லும்
சங்ககாலத்தில் எழுந்த சொற்கள் மூன்று நான்கு எழுத்துக்களை ஈக வாதனை சொற்கள் பல ஒன்றோடொன்று
தொடர்ந்து செல்லும் போது உருபு முதலியன விரியாது தொக்கு நிற்பதே சங்ககாலத்தில் பெருவழக்காக
இருந்தது
இவ்வாறு சில எழுத்துக்களாலான சொற்கள் ஒன்றோடொன்று தொடர்ந்து
வரும்போது உருபுகள் விரியாது வரும்போது சொட் சரிவு ஏற்படுகின்றது.
"செறுத்த செய்யுட்
செய் செந் நாலின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன்
இதில் குரல் முரச மூன்றுட
னாளுந்
தமிழ் கெழு கூடற் றண்கோல் வேந்து"
என்னும்
இவ்வடிகளில் வேற்றுமை உருபும் பிற விடயங்களும் தொக்கி நிற்பதைக் காணமுடியும்.
முடிவுரை
பிற்கால பகுதிகளில் புலவர்கள் பல சொற்றொடர்களாக விரித்துரைத்த
பொருள்களை எல்லாம் அக்காலப் புலவர்கள் தொகைகளை அமைத்தும் அடைகளை உணர்த்தியும் பெயர்ச்
சொற் களுக்கு விகுதி கூட்டி வினையாகிய இன்னோரன்ன பல முறைகளால்
சுருங்கிய மொழியில் விரிந்த பொருளை அமைத்து செய்யுள்
செய்தனர். சொட் சுருக்கமும் பொருட் செறிவுடைய
சொற்றொடர்களும் வினைத்தொகை முதலிய தொகைகளும் பிறவும் சங்ககால வழக்கில் மிகுதியாக பயின்று
வந்தமையாலேயே சங்கத்தமிழ் சுருங்கிய சொல்லாலே விரிந்த பொருளை விளக்கும் வகையில் அமையப்
பெற்றது. அக்கால செய்யுட்கள் பிற் காலப்பகுதிகளில் எழுந்த செய்யுட்களில் சிறந்தனவாக காணப்படுவதற்கு அக்கால மொழி நிலையினையும்
புலவர்களையும் அவர்களின் புலமையையும் காரணமாக கூற முடியும்.
உசாத்துணைகள்
1.செல்வநாயகம்.வி, "தமிழ் இலக்கிய வரலாறு", 1951, குமரன் புத்தக இல்லம்,
கொழும்பு 12.
2.மௌனகுரு.சி, "பண்டைத் தமிழர் வரலாறும் இலக்கியமும்", 2006, அலைகள்
வெளியீட்டகம்.
3.சிறீகந்தராசா.சு, "சங்ககாலமும் சங்க இலக்கியங்களும்" 2001, மணிமேகலைப்
பிரசுரம்.
4.https://ta.m.wikipedia.org/wiki/சங்க_இல க்கியம்
5.https://ta.vikaspedia.in/education
7.https://www.tamilsurangam.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக