அட்சயப்பாத்திரம்
மனிதன் மனிதனாய்
மனிதத்துவம் மகத்துவம் எய்திட
மனிதன் மனிதனுக் குரைத்த
மாபெரும் அறிவுக்
கருவூலம் !
அறம் பொருள்
இன்பம்
அரும்பெரு வாழ்வின்
சாரம் !
கடுகு
சிறுத்தாலும்
குறையாது காரம் !
அடிகள்
சிறுத்தாலும்
குறையாது பொருட்
சாரம் !
மாந்தர்
மனக்கேதம் தீர
மடியின்மை
சொல்வன்மை
வாய்மை
வினைத்தூய்மை
பழைமை பெருமையென
எழுமைகள் தந்த
எழுச்சி நூல் !
அன்பு அருள்
அடக்கம்
அறிவு பொறை நாண்
ஒழுக்கம் பண்பு ஊக்கமென
ஊன்று கோலாய்
உடைமைகள் பத்தும்
முத்தாயீந்த
உலகப் பொதுமறை -
நம்
திருக்குறள்
தமிழ்மறை !
முதலில் அகரம்
முடிவில் னகரம்
திருக்குறளோ
தமிழமுதம் !
தமிழமுதத்
திருக்குறள் பருக
பிடிக்காது மதம் !!
- அதனால்
வாழ்வு நிறையும்
சமாதானம் !!
ஆயிரத்து
முந்நூற்று முப்பது
அருங்குறளும்
அகத்திலொளி சுரக்கும்
அட்சயப்
பாத்திரம்!
இரா. விஜயலெட்சுமி,
பட்டதாரி தமிழாசிரியை,
அரசு மேல்நிலைப்பள்ளி
தி.சுக்காம்பட்டி 621
310
மணப்பறை கல்வி மாவட்டம்.
திருச்சி மாவட்டம்.
63829 93075
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக