6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 பிப்ரவரி, 2021

வற்றிய வயிறு - தா. சரவணன்

 

வற்றிய வயிறு

என் தாத்தா

ஆற்றுநீர் பாசனத்தில்

பட்டி மாடு கட்டி

பயிர் செய்து

பத்து பேருக்கு

படியளந்தவர்

 

என் அப்பா

ஏற்ற நீர்

பாசனத்தில்

இரு காளைகளில் உழுது

விளைந்ததை

உணவு தேவைக்கு போக

மற்றவற்றை

விற்று தீர்த்தவர்

 

நானோ வங்கியில்

கடன் வாங்கி

உழு வண்டியில்

உழுது விதை விதைத்து

நம்பிய மழை

கைவிட்டதால்

பட்ட கடனுக்கு

பாதி நிலத்தை

விற்று தீர்த்தவன் 

 

இந்நாள் வரை

பசியறியாத

என் குழந்தைகள்

இன்று அம்மாவின்

முகம் பார்த்து

சோறு கேட்க

 

மனைவியோ

செய்வதறியாமல்

இரக்கத்தோடு

என் முகம் பார்க்க

 

நான்

யார் முகத்தை

பார்க்க முடியும்

நம்பிய

வானத்தையும்

வறண்டு போன

நிலத்தையும்

பார்த்து கண்ணீர்

விடுவதை தவிர                                                                             

         தா. சரவணன்

        தொடர்பு எண்: 9786577516

        கல்யாணமந்தை

        திருவண்ணாமலை (மாவட்டம்)635703

1 கருத்து:

Unknown சொன்னது…

வற்றிய வயிறு கவிதை அருமை