4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

மேலைநாட்டவரான A.A.மக்டொனால்ட்டின் இந்துக்கற்கைகள் தொடர்பான பங்களிப்புக்கள் - செல்வி.பேரின்பநாயகம் சுதர்சினி

 

மேலைநாட்டவரான A.A.மக்டொனால்ட்டின் இந்துக்கற்கைகள் தொடர்பான பங்களிப்புக்கள்

செல்வி.பேரின்பநாயகம் சுதர்சினி

இலங்கை.

sutharshiniperinpam@gmail.com

அறிமுகம்

இந்துசமய வரலாற்றில் இந்துப்பண்பாடு தோற்றம் பெற்ற காலம் முதல் வளர்ச்சி நிலையினை அடைந்து வருகின்றமையை எம்மால் அவதானிக்கமுடிகின்றது. இந்தியா, இலங்கை முதலான நாடுகளில் இந்துப்பண்பாடு வளர்ச்சி பெற்றது. எவ்வாறாயினும் இந்துப்பண்பாடானது மேலைநாடுகளிலும் பரவி வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலைநாடுகளில் இந்துப்பண்பாடானது பல காரணங்களுக்காக அந்நாடுகளில் வளர்ச்சி பெற்றன. அவ்வகையில் உள்நாட்டுப் போர் நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து சென்றமை, வெளிநாட்டவரின் வருகை, கப்பல் வணிகம், கல்வி, திருமணம் முதலான காரணங்களால் இந்துப்பண்பாடானது மேலைநாடுகளில் நிலைத்த தன்மையைப் பெற்றது.

மேலைநாட்டவர் மத்தியில் இந்துப்பண்பாடானது பல்வேறு வகையில் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக இந்துப்பண்பாட்டின் அம்சங்களான சமயம், தத்துவம், கலை, மொழி, வழிபாடு, கல்வி, அரசியல், வணிகம், அறிவியல் என்பனவற்றால் ஈர்க்கப்பட்டனர். இவைகளின் மேல் ஏற்பட்ட ஆர்வம் பின்நாட்களில் மேலைநாட்டவர் இந்துப்பண்பாடு தொடர்பான தமது ஈடுபாடுகளையும் பங்களிப்புக்களையும் ஆற்றினர். இதற்காக மேலைநாட்டவர் இந்தியாவின் மொழியான சமஸ்கிருத மொழியினைக் கற்கத்தொடங்கினர். இவ்வாறு மொழியைக் கற்றது மட்டுமல்லாமல் இந்துப்பண்பாட்டு அம்சங்களைப் பிரதிபலிக்கு இலக்கியங்களை வெளியிட்டமை, மொழி பெயர்த்தமை மற்றும் ஆராய்ச்சி என்பனவற்றை மேற்கொண்டனர்.

இந்துப்பண்பாடு தொடர்பான தமது பங்களிப்புக்களை மேலைநாட்டு பலர் ஆற்றியுள்ளமைக் காணலாம். அவ்வாறு பங்களிப்புச் செய்தவர்களாக மக்கஸ்முல்லர், வூட்ரோ ஜோன் வில்லியம்ஸ், எ.எ.மக்டொனால்ட் முதலானவர்கள் இந்துப்பண்பாடு தொடர்பில் பலதரப்பட்ட பங்களிப்புக்களை ஆற்றியுள்ளமையை அறியமுடிகின்றது. இவ்வாறு இந்துப்பண்பாடு தொடர்பில் தனது பங்களிப்புக்களை ஆற்றியவர்களில் எ.எ.மக்டொனால்ட் எனும் மேலைநாட்டவரும் சிறப்பிற்குரியவராகக் கொள்ளப்படுகின்றார். ஆகவே இக்கட்டுரையில் மக்டொனால்ட்டின் இந்துப்பண்பாடு தொடர்பான பங்களிப்புக்கள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக ஆராய்வோம்.

சமஸ்கிருத மொழியின் முக்கிய அறிஞராக A.A.மக்டொனால்ட் அறியப்படுகின்றார். இவர் இந்திய இராணுவத்தில் தொழில் புரிந்த சார்லஸ் அலெக்ஸாண்டர் மெக்டொனால்டின் என்பரின் மகனான முசோபர் பூர் என்பவர்க்கு மகனாக 1854 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி பிறந்தார். 1876 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்டட கார்பஸ் கிறிஸ்டி கல்லூரியிலும் கேர்டிகன் எனும் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இவர் classical கண்காட்சி மற்றும் மூன்று புலமைப் பரிசோதகைள் குறிப்பாக மூன்று மொழிகளான ஜேர்மன், சீனமொழி மற்றும் சமஸ்கிருதத்திற்கான போடென் புலமையையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. Classical எனும் கௌரவப் பட்டம் 1880 ஆம் ஆண்டு பெற்றார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜேர்மியின் டெய்லிலியன் ஆசிரியராக நியமிக்கப்பட்டதுடன் 1883 இல் லீப்ஸிக் எனும் பல்கலைக்கழகத்தில் PHD பட்டமும் முடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதனைத் தொடர்ந்து 1888 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் சமஸ்கிருத துணைப் பேராசிரியராகவும் 1899 ஆம் ஆண்டில் போடன் பேராசிரியராகவும் பணியாற்றினார். இந்துக்கற்கைகளுக்கும் தம் அளப்பரிய பங்களிப்புக்களை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு இவர் ஆற்றுவதற்கு முக்கிய காரணம் சமஸ்கிருதப் புலமையேயாகும். மக்டொனால் பல்வேறு வகையான பங்களிப்புக்களை ஆற்றியுள்ளார். குறிப்பாக இலக்கியங்கள் வெளியிடல், சமஸ்கிருத நூல்களை மொழி பெயர்த்தமை முதலான பங்களிப்புக்களை ஆற்றியுள்ளமையை அவதானிக்கலாம்.

மக்டொனால் தனது பல்வேறுபட்ட பணிகளை இந்துக்கற்கைகளுக்காகவும், இந்தியவியலுக்காகவும் தன்னுடைய பங்களிப்புக்களை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பங்களிப்புக்களாக சமஸ்கிருத மொழியிலமைந்த இந்துசமயம் தொடர்பான இலக்கியங்களை மொழிபெயர்த்தல் மற்றும் உரை எழுதுதல் எனப் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளார். குறிப்பாக இவரால் படைக்கப்பட்ட படைப்புக்கள் அனைத்தும் இந்துசமயம் தொடர்பாகக் கற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் ஏனையவை தொடர்பாகவும் கற்க விருப்பம் கொள்ளும் அனைவர்க்கும் உரியவையாகக் காணப்படுகின்றது. அவ்வகையில் இவரால் படைக்கப்பட்ட படைப்புக்கள் சில மேல்வருமாறு அமைகின்றன.

Ø    சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாறு

Ø    வேதியியல் கணிதம்

Ø    பிரகத் - தேவ்தா

Ø    பெயர்கள் மற்றும் பாடங்களுக்கான வேத அட்டவணை தொகுதி-1

Ø    வேத புராண வவலாறு

Ø    நடைமுறை சமஸ்கிருத அகராதி- ஆங்கிலம்

Ø    மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணம்

Ø    மாணவர்களுக்கு வேத இலக்கணம்

இவ்வாறு தனது இந்துக்கற்கைகள் தொடர்பான படைப்புக்களை ஆற்றியுள்ளார்.

இவரால் இயற்றப்பட்ட இந்நூல்களை அவதானிக்கின்ற போது அவரது இந்துக்கற்கைகளுக்கான பங்களிப்பு எத்தகையது என்பதை அறியமுடிகின்றது. குறிப்பாக இவரால் படைக்கப்பட்ட நூல்கள் கூறுகின்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அதனை அறியலாம். அவ்வகையில் இவரால் படைக்கப்பட்ட நூல்களில் ஒன்றாக விளங்கும் வேதியியல் புராணம் எனும் நூலை அவதானிக்கின்ற போது இது வேத புராணங்களின் வரலாற்றை எடுத்துக் கூறுவதாக அமைகிறது. அத்துடன் மதங்களின் வரலாற்றையும் இந்நூல் ஆராய்ச்சி செய்வதாக அமைகிறது.

வேத புராண வரலாற்று நூலானது நவீன இந்தியர்களின் பெரும்பான்மையான மதக்கருத்துக்களின் ஆதாரங்களைக் கொண்டிருக்கும் நம்பிக்கையின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப காலத்தைக் காட்டுவதாகவும் இந்நூல் அமைவதாக அறிஞர் பலர் குறிப்பிடுகின்றர். இவற்றோடு இந்நூலானது ஏழு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு சமஸ்கிருதம் மற்றும் பொதுக்குறியீட்டுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு வேத புராணத்திற்கு ஒரு மதிப்பு மிக்க நூலாகவும் கொள்ளப்படுகின்றது. 1897 ஆம் ஆண்டில் ஜேர்மன் கிளாசிக்கல் மொழியிலும் இந்நூல் மறுபதிப்பும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவரால் படைக்கப்பட்ட இன்னுமொரு நூல் ப்ராத் தேவதா எனும் இலக்கியமாகும். இந்நூல் இரண்டு தொகுதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன் ப்ராத் தேவதா என்பதன் அர்த்தமாக பல தெய்வங்களின் குறியீடாகவும் கொள்ளப்படுகின்றது. இது ஏறக்குறைய 1200 சுலோகங்களைக் கொண்டதாக அமைத்துள்ளதுடன் ரிக் வேதம் போன்று 8 அத்தியாயங்களையும் கொண்டு படைக்கப்பட்டுள்ளமை சிறப்பாகும்.

இதன் முக்கிய பொருளாகக் கொள்ளப்படுவது ஒவ்வொரு வசனத்திற்கும் தெய்வத்தைக் குறிப்பிடுவதாகும். அத்தோடு இப்படைப்பானது புராணக்கதைகள் மற்றும் புராணங்களின் ஆரம்பகாலக் கதைகளின் தொகுப்பாக அமைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பாகும். எனினும் ரிக் வேதத்தின் நியதிச் சொற்களின் பகுதியாக இல்லை என்பதுடன் பல துணைப்பாடல்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

A.A.மக்டொனால்டின் இந்துக்கற்கைகள் தொடர்பான பங்களிப்பில் அமைந்த மற்றுமொரு சிறப்பானதொரு படைப்பாக அமைவது மாணவர்களுக்கு சமஸ்கிருத இலக்கணம் எனும் நூலாகும். இது 1927 ஆம் ஆண்டில் காகிதப் புத்தமாகவும் விளங்கியது. இப்படைப்பு பாரம்பரிய பண்டைய இந்தியாவின் மொழியான சமஸ்கிருத இலக்கிய மொழி பற்றிய முழுமையான விடயங்களை உள்ளடக்கியதாக படைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மக்டொனால்டின் எழுத்துக்கள், வீழ்ச்சி, ஒத்திசைவு, தனித்துவமான வார்த்தைகள், தொடரியல் என்பவற்றைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இதன் மூலமாக மாணவர்கள் இலகுவாக சமஸ்கிருத மொழி தொடர்பான கற்கைகளை முன்னெடுக்கமுடியும் எனவும் கூறப்படுகின்றது.

இந்நூல் போன்று சமஸ்கிருத மொழி தொடர்பான இலக்கியமாகக் கொள்ளப்படுவது நடைமுறை சமஸ்கிருத அகராதி எனும் இலக்கியமாகும். இவ்விலக்கியமானது சமஸ்கிருத அகராதி கற்கும் மாணவர்களுக்கான அதிகாரபூர்வமான ஆதார நூலாகக் கொள்ளப்படுகின்றது. இந்நூல் ஒலிபெயர்ப்பு, உச்சரிப்பு மற்றும் சொற்பிறப்பியல் பகுப்பாய்வு முதலான அம்சங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

இவ் அகராதியின் உண்மையான முதற்பதிப்பை 1929 ஆம் ஆண்டு oxford university இன் மெஸ்ஸர்ஸ் லொங்மன்ஸ் எனப்படும் பசுமைக் கூட்டுறவு எனும் அமைப்பினால் வெளியிடப்பட்டது. இவர்களின் அனுமதியுடன் மீண்டும் புதிப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலுக்கான உரை ஒரு தரவுத்தளமாக மாற்றியமைக்கப்பட்ட போது நடைமுறை சமஸ்கிருத அகராதியை உள்ளடக்கிய Addendact Corrigenda எனும் தரவு பயன்படுத்தப்பட்டது.

நடைமுறை சமஸ்கிருத அகராதி தேவநாகரி மற்றும் ரோமன் எழுத்துக்கள் என்பவற்றைக் கொண்டதாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்நூலின் அடங்கிய தரவுகள் சமீபத்தில் குறிப்பாக 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் புதுப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இவ்வகராதியின் தரவுகள் மாற்றம் பெறுவதற்கு ஆதரவு வழங்கிய நிறுவனமாக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் கொலம்பியா தராம் இந்துஜா மையம் குறிப்பிடப்படுகின்றது.

மக்டொனால்டின் அடுத்த படைப்பாக சிறப்புப் பெறுவது சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாறு எனும் நூலாகும். இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை சமஸ்கிருத இலக்கியத்தின் தேவைப்பாடு அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாறு இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல எனக் குறிப்பிடப்படுகின்றது. இதனால் இவ்விலக்கியம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டமை சிறப்பிற்குரியதாகும். இவ்விலக்கியம் சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாறு தொடர்பில் விளக்குவது மட்டுமல்லாமல் இந்திய சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைகையும் சிந்தனையையும் வெளிப்படுத்துவதாக இது அமைகிறது. இதன் விளைவாக வெளிநாட்டவர் மத்தியில் இந்தியா மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா தனது வரலாறு தொடர்பான குறிப்புக்கள் மற்றும ஆதாரங்கள் என்பவற்றைக் கொண்டிருக்கவில்;லை. இதனால் இந்தியா நாகரிகம் தொடர்பான கற்கைகள் கற்பது மட்டும் புரிந்து கொள்ளுதல் என்பவற்றைச் செய்யமுடியாது எனக் குறிப்பிடுகின்றனர். இவற்றை ஆழமாக ஆராய்வதன் மூலமாகவே அறியலாம் என மக்டொனால்டின் மேல்வரும் கருத்துக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. அவ்வகையில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியான ஆய்வு மற்றும் போதனை எனக்கு ஒரு ஆழமான ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்விடயம் பற்றிய தகவல்களைத் தெளிவுபடுத்தும் தனிச்சிறப்பு வாய்ந்த வாய்ப்பாக இது எனக்குத் தோன்றியது எனக் குறிப்பிட்டுள்ளதை அறியலாம். பேராசிரியர் மக்ஸ்முல்லரின் பண்டைய சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாறு வேதகாலத்தின் எல்லைக்குள் மட்டுமே நின்றுவிட்டது. அதனால் அவை நீண்ட காலமாக அச்சிடப்படவில்லை. அத்துடன் ஆங்கில மொழிக்கு மாத்திரமே அணுகக் கூடிய வகையில் சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாறு படைக்கப்பட்டிருந்தது. இந்நூல்கள் பேராசிரியர் Weber Academy Lecturers ofInternational Luracher என்பவரின் மொழிபெயர்ப்பாக இதுவரை காலமும் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சமஸ்கிருத இலக்கியத்தின் ஆராய்ச்சி முடிவுகளை 25 ஆண்டுகளில் வழங்கினர் எனலாம். எனினும் 1852 ஆம் ஆண்டில் மாற்றப்படாத உண்மையான உரையின் அறிக்கைகள் பெரும்பாலும் மாற்றப்பட்டு வழங்கியது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 1878 ஆம் ஆண்டில் சமஸ்கிருத இலக்கியத்தின் மீதான பார்வை ஏற்பட்டது. இதனடிப்படையில் எழுந்த நூலாக 1878 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் எம்.எம்.மியர் வில்லியம்ஸ் என்பவரால் எழுதப்பட்ட இந்திய விஸ்டம் ;(India of Visdum) எனும் இலக்கியத்தைக் குறிப்பிடமுடியும். இவ்விலக்கியம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிந்த போதிலும் சமஸ்கிருத இலக்கியத்துறைகள் தொடர்பான விடயங்களைக் கொண்டிருக்கவில்லைஎன்று குறிப்பிடுவதை அவதானிக்கலாம்.

தொடர்ந்து மக்டொனால் குறிப்பிடுகையில் சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாற்றுக்கு ஒரு நாட்டில் இரண்டு விதமான கோரிக்கைகள் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். அவற்றில் ஒன்று மாணவர்கள் தெளிவான மற்றும் நம்பகமான முறையில் ஆராய்ச்சி முடிவுகளை முன்வைக்க விரும்புகின்றனர். இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது ஆங்கில வாசகர் மத்தியில் கவர்ச்சிகரமான படிவத்தை வழங்குவதற்கான புத்தகத்தை இந்தியாவுடன் நெருங்கிய உறவுகளுக்கு வழங்க வேண்டும். எனும் கோரிக்கைகளைக் கொண்டதாக இந்தியா நாடானது காணப்படுகின்றது என்கிறார் மக்டொனால். இதனடிப்படையில் அக் கோரிக்;கைகளை நிறைவேற்றும் வகையிலேயே தனது ஆய்வுகளை மேற்கொண்டு சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாறு எனும் இலக்கியத்தைப் படைத்தார்.

                இன்றைய ஆராய்ச்சிகளின் நோக்கமானது சட்டம், அறிவியல் மற்றும் கலை இலக்கியம் என்பன பற்றிய முழு விபரப் பதிவுகளைத் தவிர்த்துப் பொது வாசகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதாகும். இதனடிப்படையில் இந்நூலின் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்ட சுருக்கமான விளக்கங்கள் மாணவர் அனைவரையும் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் போன்றோருக்குப் போதுமானதாக அமையும் எனவும் குறிப்பிடுகிறார். இந்நூலில் காணப்படும் குறிப்புக்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்டுக் காணப்படுவதால் அனைத்துத் தகவல்களையும் விரிவாக மாணவர்கள் கற்க முடியும் என்பதுடன் அத்தகவல்கள் அனைத்தும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் இலகுவாகக் கற்க முடியும் எனக் குறிப்பிடுகிறார்.

மக்டொனால் மேலும் குறிப்பிடுகையில் சமஸ்கிருத இலக்கியத்தின் வரலாற்றை எழுதும் போது பண்டைய இந்தியாவில் வாழ்ந்த அனுபவமும் சிந்தனையும் தனக்கு ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். இவ்விலக்கியமானது ஐரோப்பிய இலக்கிய வழக்கில் அவசியமாகத் தோன்றியிருக்கலாம். அத்தோடு சமஸ்கிருத இலக்கியம் மேற்கிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சுயாதீனமான நாகரிகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் பெரும்பாலானவற்றை விட மிக விளக்கம் தேவைப்பட்டது எனவும் தனது கருத்தை முன்வைக்கிறார் மக்டொனால்.

நிறைவுரை

மேற்கூறப்பட்ட கருத்துக்களை நோக்குகின்ற போது மக்டொனால் இந்தியக் கற்கைகள் தொடர்பாக தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளமையை அறியமுடிகின்றது. இந்துக் கற்கை நெறிகள் தொடர்பாகத் தனது ஆய்வுப் படைப்புக்களைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவரால் மேற்கொள்ளப்பட்ட இந்தியவியல் தொடர்பான ஆய்வுகள் மற்றும் படைப்புக்கள் பிற்கால மேலைநாட்டு அறிஞர்களும் இந்தியவியல் தொடர்பான ஆராய்ச்சிகளையும் படைப்புக்களையும் மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளமையை அறியமுடிகின்றது.

உசாத்துணைகள்

01.  https://en.m.wikipedia.org/wiki/Arthur-Anthony-Macdonell.

02.  https://www.amazon.in/Books-A-Macdonells?ie=UTF8&page=1&rh=n%3A976389031%2cp-27%BAA.A% Macdonell

03.  https://www.amazon.com/vedic-Grammar-Students-MacDonell/dp/8120810538.

04.  https://catalogue.nla.gov.an/Record/208791.