4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மார்ச், 2021

சுதந்திரதேசமா? சுயநலதேசமா? - பா.மகேஸ்வரி

 


 

இந்நாட்டின்பிரச்சனைகளைப்பற்றி

பேசுவதில்காட்டும்ஆர்வம்

செய்வதில்இல்லையாருக்கும்?

 

தனக்குஇல்லையென்றாலும்,

பிறருக்குஈந்தமானுடம்தான்

இன்றுபிறர்வயிற்றில்

அடித்துவாழ்கிறது.

 

இந்தியாவில்எரிமலைகளேஇல்லையாம், இருந்தும்பெறுமைபடமுடியவில்லையே?

இன்னும்எரியாஅடுப்புகள்

இங்குஎத்தனையோ?

 

மானுடமேஉந்தன்இதயம்

ஏன்?  இப்படிசவப்பெட்டியானது?

 

தன்வயிறுநிறைந்தால்போதும்என்றுநினைப்பவன்யோசிப்பதே

இல்லையே?

இங்குபட்டினிகிடக்கும்

வறுகளைப்பற்றி?

 

அன்றுபடிக்காதபாமரனிடம்

இருந்தஇரக்ககுணம், இன்று

ஏனோ? படித்தவனிடம்இல்லாமல்

போனது?

 

வாக்குறுதிகள்எல்லாம்

வாக்குகளுக்குமட்டும்

என்றானது.

 

தனக்குதுன்பம்வந்தால்

எல்லோரும்ஓடிவரவேண்டும்

என்றுநினைப்பவன்தான்,

பிறர்துன்பம்கண்டு

ஓடிஒளிகிறான்.

 

மானுடமேஉன்னுள்இருக்கும்

சுயநலப்பேய்களுக்குஉணவிட்டு

விடாதே, பிறகுநீயே

அதற்குஉணவாகிவிடுவாய் .

 

வள்ளுவனே, வருந்துகிறேன்

நீசெதுக்கியகுறட்பாக்களில்

ஒன்றுகூடஇம்மானுடத்தை

சீர்படுத்தவில்லையேஎன்று.

 

முண்டாசுகவிஞனே !

நீபட்டினிகிடந்துபகுத்தறிவோடு

எழுதியகவிதைகள்எல்லாம்

பாரதத்தைதட்டிஎழுப்பத்தானே?

இப்படிஉணர்வற்றுஉறங்குவதற்காகவா

 

என்றுஇம்மானுடம்தன்னலம்

தாண்டி,பொதுநலம்போற்றுமோ

அன்றுதான்சுயநலதேசம் ,

சுதந்திரதேசமாகும்

 

 

 

பா.மகேஸ்வரி

இளங்கலைதமிழ்இலக்கியம்

மணக்கால்அய்யம்பேட்டை

திருவாரூர்மாவட்டம்.