4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 மே, 2021

தேர்தல் திருவிழா - து.பிரியதர்சினி

 

தேர்தல் திருவிழா

சாதி, மதம், இனம்கடந்ததிருவிழா

சாமானியர்களும் சாதிக்கத் துடிக்கும் திருவிழா

திருவிழாவாம் திருவிழா

சமுத்திரம் கடந்தவனும் பறைசாற்றும் திருவிழா

நேசமிகு தொண்டனும்கைக் கொட்டும் திருவிழா

வாசகங்கள் வாக்குகளாய் உருவெடுக்கும் திருவிழா

கட்சிக் கொடிகளின் சாயம்படரும் திருவிழா

விமர்சனங்கள் விவாதமாய் அனல்பறக்கும் திருவிழா

திருவிழாவாம் திருவிழா இது ஜனநாயகத் திருவிழா

ஒற்றுமையின் ஒலிக்குரல் ஒளியூட்டும் திருவிழா

 

து.பிரியதர்சினி