4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

இயற்கை - சு.ராஜா

 

இயற்கை

உருண் டோடும் நதி  எனை இழுத்து...

வளைந்தாடும் நாணல், இரு கரம் பிடித்து...

பனித்துளிப் போர்வையில் பசும்புல் உறங்க...

இளம் துளிர் ஒன்று புது வரவாக...

மூங்கில் மரமோ இசையமைப்பாகி..

கூவும் குயிலோ புன்சிரிப்போடு...

இசை அரங்கேற்றம் வனத்தில் மிளிர...

இது மாலை வேளையின், மந்திரம் மோகனம்.

 

முத்தான மூங்கிலில், சத்தான நாதனம்,

பத்தாமல் போனதோ...

மனம் எட்டாத தூரத்தில், திகட்டாத நேரத்தில்,

எழில் பாட்டாக பிறந்ததோ...

இது கவி மகனின் வருணனையோ?

வனமகளின் செயல்திறனோ???

 

சில்லென காற்றால், மகிழும் உடம்பும்...

உதிர்ந்த பூவின், உதிரா வண்ணமும்...

சரிந்த மலை அருவியில், சரியா அழகும்...

சேர்ந்து இழுக்குமே, நான் சோர்ந்த நொடியினிலே...

இது இயற்கையின் கருணையோ?

நான் கண்ட கண்களின் வருணனையோ???

 

யாரும் காணா நேரம் தனில்...

பூத்த பசும் துளிர் ஒன்று...

பார்த்த என் கண்ணை...

சிமிட்டா சிறை வைத்து...

சிந்தனைச் சிறகுகளை...

சிறகடித்துப் பறக்கச் செய்த...

சிவந்தஇளந் துளிரை...

கவி பாட, வார்த்தை இன்றி...

சிக்கித் தவிக்கிறேன்.

சு.ராஜா, திருச்சி-5