4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஜூன், 2021

குயவன் - கு.கோகிலா

 

குயவன்

 

குயவனின் சில எண்ணம்

களிமண்ணில் பலவண்ணம்

குயவனின் வாழ்க்கை ஓட்டம்

சுழலுது வாழ்வியல் வட்டம்

குயவனின் கைவிரலில்

குலத்தின் பண்பாடு

குயவனின் வருமை வடித்தது

குடிமகனின் வயிறு குளிர்ந்தது

குயவனின் கைவண்ணமே

குலம் கடந்து பேசுமே

கார்த்திகை மாதம் என்றாலே

குயவர்கைவண்ணம்தான்

பொங்கலோ பொங்கல் பொங்குது

குயவனின் வாழ்வியலில் தங்குது

அகிலத்தை அலங்கரித்தான்

குயவனின் கற்பனை காட்சியில்

கவிமண் எழுதினான்

குயவன் சுட்டுபதிப்பித்தான்

மனிதனின் சிரம்வைத்து

குயவன் கரம்வடித்தது

கருவரைத்தோன்றி கல்லறைபோகும்போது

             குயவன் ஈமத்துதாழி(ய்) வடித்தான்.

கு.கோகிலா