4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூலை, 2021

இந்துப் பண்பாடு தொடர்பான மேலைத்தேசத்தவர்களின் பங்களிப்புக்கள் - செல்வி.பே.சுதர்சினி

 

இந்துப் பண்பாடு தொடர்பான மேலைத்தேசத்தவர்களின் பங்களிப்புக்கள்

செல்வி.பே.சுதர்சினி,

இலங்கை,

அறிமுகம்

இந்தியாவில் தோன்றி இலங்கையிலும் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுத் திகழ்ந்ததுமான இந்துசமயம் தென்கிழக்காசியா முதலான நாடுகளிலும் சிறப்பான வளர்ச்சி நிலையை அடைந்திருந்தது. இதனைப் பல்வேறு வரலாற்று குறிப்புக்கள் எடுத்துரைக்கின்றன. இவ்வாறு தோன்றி வளர்ச்சி பெற்ற இந்துசமயத்தில் இந்துப்பண்பாட்டம்சங்கள் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றன. அவ்வாறான இந்துப்பண்பாடானது இன்றைய காலப்பகுதியில் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் சிறந்த முறையில் பயில் நிலையில் வளர்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்துப்பண்பாடு எனும் போது சமயம், கல்வி, வர்த்தகம், கலை, மற்றும் தத்துவம் என்பவற்றைக் குறிப்பிட முடியும். இவைகளின் மூலமே மேலைநாடுகளில் இந்துப்பண்பாடு பரவலடைந்தமையை அவதானிக்கலாம். இவற்றில் மேலைத்தேசங்களில் இந்துப்பண்பாடானது சிறப்பாக வளர்ச்சியடைவதற்குப் பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் பிரதான காரணங்கள் 2 காணப்படுகின்றன. அவையாவன,

 

1.   இந்துக்களின் மேலைத்தேய நாடுகளிற்கான பயணம் - இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று அங்கு தமது சமயம் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்துதல்.

2.   மேலைத்தேயவர்களின் வருகை மேலைத்தேசத்தவர்கள் இந்து சமயத்தினால்;; அல்லது இந்து சமயத்தினரால் கவரப்பட்டு இந்துப் பண்பாட்டினை உள்வாங்கி அதனை வெளிப்படுத்தினர். 

எனும் காரணங்களைக் குறிப்படலாம். இவற்றில் இந்துக்களின் வெளிநாட்டுப் பயணம் எவ்வாறு இடம்பெற்றன என்பதை நோக்குகின்ற போது குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, மற்றும் பிரித்தானியா முதலான மேலைத்தேய நாடுகளுக்கு இரு நூற்றாண்டுகளாக இந்து அறிஞர்கள் மற்றும் இயக்கங்களின் செல்வாக்கு என்பனவற்றோடு இந்துக்களது குடியேற்றங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் இருந்து இந்துப்பண்பாடானது  பெரும்பாலும் மேலை நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது என அறியலாம். குறிப்பாக சவாமி விவேகானந்தருடைய சிக்காக்கோ சொற்பொழிவுகள்(1893) மிக முக்கியமாகக் கொள்ளப்படுகின்றது. இவற்றுடன் அமெரிக்காவில் நிகழ்ந்த சுவாமி இராமதீர்த்தரின் வேதாந்த சொற்பொழிவு(1902), ஹரே கிருஷ்ணா இயக்கம் (International Society For KrishnaConsciousness),இராமக்கிருஷ்ண இயக்கம் (Ramakrishna Mission) முதலான பல அறிஞர்களினது சொற்பொழிவுகள் மற்றும் அமைப்புக்கள் என்பவற்றின் செயற்பாடுகளால் உலகளாவிய ரீதியில் குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் இந்துப்பண்பாடானது வளர்ச்சி பெற ஏதுவாக அமைந்துள்ளமையை அவதானிக்கலாம்.

இவற்றோடு இந்துக்களின் குடியேற்றங்கள் என்பதை ஆராய்வோமானால் இந்துக்கள் அகதிகளாவும், மற்றும் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் மேலைநாடுகளுக்குச் சென்றனர். இவ்வாறு சென்றவர்கள் தமது இந்துப்பாரம்பரியத்தினையும் அங்கு சென்றதோடு பல இந்து ஆலயங்களை அமைத்து ஒரு நிலைத்த தன்மையினை இன்றுவரை பேணி வருகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.

மேலைத்தேயத்தவர்களின் வருகையினாலும் இந்துப்பண்பாடு பரவுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளமை குறிப்படத்தக்கதாகும். அந்தவகையில் இந்துக்கள் மேலை நாடுகளுக்குச் செல்வதற்கு முன்பே மேலைத்தேசத்தவர்களின் வருகையானது இந்துப்பண்பாடுகளைக் கொண்ட இந்தியாவில் ஏற்பட்டதை ஆதாரங்களினடிப்படையில் அறியலாம். எனவே இவ்வாறான காரணங்களால் இந்துப்பண்பாடானது மேலைநாடுகளில் பரவியதுடன் செல்வாக்குப் பெற்றுக்காணப்படுவதையும் அவதானிக்கலாம். இவ்வாறு மேலைநாடுகளில் இந்துப்பண்பாடு செல்வாக்குப் பெறுவதற்கு பங்களிப்பாளர்களாகச் செயற்பட்டவர்கள் மேலைத்தேசத்தவர்களாவர். அதாவது மேலைத்தேயர்கள் இந்தியாவிற்கு வருகை தந்ததுடன் மட்டுமல்லாமல் இங்கிருந்த இந்துப்பண்பாடுகளை அங்கு கொண்டு சென்று இந்துப்பண்பாடுகளை உலகறியச் செய்தனர். ஆகவே இன்றைய காலப்பகுதியில் இந்துப்பண்பாட்டிற்கு மேலைத்தேயர்கள் எவ்வாறான தமது பங்களிப்புக்களை ஆற்றியுள்ளனர் என்பது தொடர்பில ஆராய்வோம்.

மேலைத்தேயவர்களின் இந்துப்பண்பாடு தொடர்பான பங்களிப்புக்கள்

மேலைத்தேயர்கள் இந்துப்பண்பாட்டம்சங்களில் பிரதிபலிக்கின்ற தத்துவம், இலக்கியம், சமயம், கலை, மற்றும் வழிபாடுகள், நிறுவனங்கள், ஆலயங்கள் எனும் அம்சங்களின் அடிப்படையில் தமது பங்களிப்புக்களை மேற்கொண்டனர். அந்தவகையில் அகழ்வாராய்ச்சி மூலம் இந்தியாவில் தோன்றிய பண்பாடு இந்துப்பண்பாடு எனும் குறிப்பை உலகத்திற்கு வழங்கியவர்கள் மேலைத்தேய அகழ்வாராய்ச்சியாளர்களாவர். உலகின் பல பாகங்களிலும் நாகரிகங்கள் பல தோற்றம் பெற்றுக் காணப்பட்டன. எனினும் அந்நாகரிகங்கள் இயற்கை முதலான சீற்றங்களால் மண்ணில் புதையுண்டன. அவ்வாறு இயற்கையின் சீற்றத்தால் புதையுண்ட நாகரிகங்களை அகழ்வாராய்ச்சி செய்வதன் மூலம் அந்நாகரிகத்தின் பழங்கால மனிதனின் பண்பாட்டுக் கூறுகளான வாழ்க்கை முறை, நம்பிக்கை, சடங்கு, வழிபாடு, பேசிய மொழி, கலையார்வம் முதலானவற்றைத் தெரிந்து கொள்ளமுடியும்.

இவ்வாறு அறிந்து கொண்ட நாகரிகமாக விளங்குவது சிந்துவெளி நாகரிகமாகும். இந் நாகரிகத்தினை உலகுக்குத் தெரியப்படுத்தியதுடன் அங்கு இந்துப்பண்பாடு நிலவியதாகவும் தமிழர் நாகரிகம் எனும் செய்தியை வழங்கியவர்கள் மேலைத்தேயர்கள் என்பது குறிப்படத்தக்கதாகும். கி.பி 1922ஆம் ஆண்டு வரை வேத காலமே பழங்கால நாகரிகமென கூறப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் இந்தியத் தொல்லியலாளர்கள் நடத்திய அகழ்வின் மூலம் மண்ணுக்குள் புதையுண்டிருந்த அழகிய இரு நகரங்களான மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா எனும் நகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விடங்களில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்தி மண்ணுக்குள் புதையுண்டிருந்த இரு நகரங்கள் பற்றி உலகறியச் செய்தவர் தொல்பொருள் ஆய்வியல் அறிஞர் Sir. John Marsall என்பவராவார். இப் புதையுண்ட நகரங்களைப் பற்றிய செய்திகள் பிற்காலங்களில் சிந்துவெளி நாகரிகம் (Indus valleyCivilization), ஹரப்பா பண்பாடு (Harappan Culture) என்ற தலைப்புக்களில் அறியப்படலாயின.

சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் (தமிழர் நாகரிகம்) என்று அங்கு கிடைக்கப்பெற்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு ஜோன் மார்~ல் முதலான அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அந்தவகையில் அங்கு தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களும் வெளிப்பட்ட கட்டட அமைப்புக்களும், பயன்படுத்திய நாணயங்களும் இவர்களுக்குச் சான்றாக அமைந்துள்ளன. இவ் உண்மையை ஜோன் மார்~ல், சேர்.மார்டிமர் வீலர், ஹிராஸ் பாதிரியார், முதலான தொல்லியல் அறிஞர்கள் தங்களது ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். டொக்டர். எச்.ஆர்.ஹால் எனும் வரலாற்று அறிஞரும் பல சான்றுகளைத் தனது இலக்கியங்களின் வாயிலாகக் குறிப்பட்டுள்ளார். அந்தவகையில் சமீப கிழக்கின் தொன்மை வரலாறு((AncientHistory of the Near East) எனும் இந் நூலில் குறிப்பட்டுள்ளார்.

சிந்துவெளி நாரிகம் நிலவிய காலப்பகுதியில்  இருந்த சமயம் மற்றும் வாழ்வியல் சடங்குகள் என்பன ஆரியர்களுக்குரியதல்ல எனவும் அவர்கள் பயன்படுத்திய எழுத்துக்களுக்கும் இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக் குறிப்பிடுகின்றனர். இவற்றில் இந்நாகரிக கால எழுத்துக்கள் பற்றிய ஆய்வுகளையும் மேலைநாட்டு தொல்லியலாளர்கள் ஆராய்ந்துள்ளமை குறிப்படத்தக்கதாகும். அவ்வாறு ஆய்வினை மேற்கொண்டவர்களுள் டொக்டர். பர்பலோ எனும் அறிஞரும் குறிப்படத்தக்கவராவார். அந்தவகையில் சிந்துவெளி எழுத்துக்களை ஐந்நூறுக்கும் அதிகமான தொல்லியலாளர்கள் படித்துப் பார்த்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை முன்வைத்தனர். இவ்வாறு படித்துப் பார்த்துக் கூறியவர்களில் மேலைநாட்டு அறிஞரான  டொக்டர். பர்பலோ என்பவரும் ஒருவர். இவர் கூறிய செய்திகள் தமிழுக்கும் தமிழருக்கும் மிகவும் சாதகமான கருத்துக்களாகவும் அதே நேரம் நடுநிலையும், வரலாற்றுத் தெளிவும் கொண்டவையாகும். சிந்துவெளி எழுத்துக்கள் முழுக்க முழுக்க தமிழ் எழுத்துக்களே என்றும் சிந்துவெளி மொழி என்பது தமிழ்மொழியே எனவும் குறிப்பட்டார். இவருடைய இக் கருத்து ஆரியச் சார்புடையோரை எரிச்சலடையச் செய்தது. எவ்வாறிருந்த போதிலும் தமிழர் பண்பாடுகளை உலகறிவதற்குப் பங்களிப்புச் செய்தவராக காணப்படுகின்றார்.

1920 காலப்பகுதியில் ஆங்கிலேயர்கள் இரும்புப் பாலம் போடப்பட்ட சந்தர்ப்பத்தில் பல மண்மேடுகள் தென்பட்டன. அவற்றினைத் தகர்த்தெறிந்து ஆய்வுகளை மேற்கொண்ட போது அங்கு ஒரு நகரமே புதையுண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட நகரமே மொஹஞ்சதாரோ நகரமாகும். எனினும் இங்கு வாழ்ந்த மக்கள் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. யார் வாழ்ந்தார்கள் என்பது தெரியாததால் இங்கு ஆரியரே வழ்ந்துள்ளனர் எனவும் ஆரிய நாகரிகமே எனும் கருத்தையும் வெளியிட்டனர். இருந்தபோதிலும் இக்கருத்தை எதிர்த்து அங்கு வாழ்ந்தவர்கள் திராவிடரே எனும் கருத்தினை மேலைநாட்டு அறிஞரான பம்பாய் நகரில் கல்லூரிப் பேராசிரியராகக் கடமை புரிந்த கத்தோலிக்கப் பாதிரியாரான ஈராஸ் என்பவர் குறிப்பிட்டார். இவர் சிந்துவெளிக்கும், மொஹஞ்சதாரோக்கும் சென்று அங்கு கிடைக்கப்பெற்ற பானை ஓடுகள், வரிவடிவ எழுத்துக்கள், இதர பொருட்களையும் ஆராய்ந்து அங்கு நிலவிய நாகரிகம் திராவிட நாகரிகம் என்னும் கருத்தினை வெளிப்படுத்தினார். இவற்றுடன் சுமேரிய எழுத்துக்களையும் ஆய்வு செய்து இவ்விரு எழுத்துக்களும் ஒன்று தான் என்பதைத் தெளிவுபடுத்தினார். இவ்வாறு இவர் தீர்க்கமாகவும் தெளிவாகவும் ஆய்வு செய்வதற்கு அவர் கொண்டிருந்த பன்மொழிப் புலமையும் பைபிள் அறிவும் வரலாற்று அறிவும் மிக்கவராகக் காணப்பட்டார். தமிழரின் வரலாற்றுக்கு மாபெரும் திருப்புமுனையைக் கொடுத்தது ஈராஸ் பாதிரியாரின் இவ் ஆய்வேயாகும். இவ்வாறு இந்தியாவில் மேலைநாட்டு அறிஞர்கள் தமது பங்களிப்புக்களை அகழ்வாராய்ச்சி மூலம் ஆற்றியுள்ளனர்.

மேலைநாட்டவர் இந்துப்பண்பாடானது தமது நாடுகளிலும் சிறப்புப்பெறுவதற்குப் பங்களிப்பாற்றியுள்ளனர். அந்தவகையில் மேலைநாடான அமெரிக்காவில் இந்துப்பண்பாடானது பல்வேறு வழிகளில் பேணப்பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம். குறிப்பாக கல்வி, நிறுவனம்,ஆலயம் என்பவைகள் மூலமாக சிறப்புப் பெறுகின்றமையை அறியலாம். அமெரிக்காவின் மன்ரோ எனும் இடத்தில் The Hindu American Foundation மற்றும் State University Long Peach, ஸ்ரீவெங்கடேஸ்வரா கோயில் என்பன இந்தியாவின் பிட்ஸ்ஸ்பேர்க் எனப்படும் பட்டறை மூலம் உருவாக்கப்பட்டு இந்துப்பண்பாடு பேணப்பட்டு வருகின்றது.

அங்கு காணப்படும் ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயத்தில் வெற்றிகரமாக இந்துமதம் தொடர்பான கற்பித்தல்கள் இடம்பெறுகின்றன. குறிப்பாக பிட்ஸ்பர்க் எனும் பகுதியிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து இந்துமதம் தொடர்பாகவும் இந்தியாவின் வரலாறு மற்றும் வளர்ச்சி என்பனவற்றோடு ஸ்ரீ வெங்கடேஸ்வர ஆலயத்தின் வரலாறு, என்பவைகள் கற்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அமெரிக்க பேராசிரியர் டேவிட் ஜே நியூமள் மற்றும் HAF கல்வி ஆலோசகர் முரளி பாலாஜி போன்றோரின் இந்தியா மற்றும் இந்துமதம் தொடர்பான போதனைகளும் அணுகுமுறைகளும், விரிவுரைகள் என்பன அதிவேகமாக  மேம்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்து தத்துவஞானியும் எலிசபத் டவுன் கல்லூரியின் பேராசிரியருமான ஜெப்ரி. டி. லாங் இந்துமதத்திற்கும் பக்திக்கும் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளார். அந்தவகையில் இந்துமதம் மற்றும் பகவத்கீதையின் தாக்கம் தொடர்பாகவும் விவாதித்தார். கோயில்களை இணைக்கும் முயற்சிகளை மேற்கொள்வதன் மூலமும் சுற்றியுள்ள சமுதாயங்களாடு இணைத்து கல்வியலாளர்களுடன் வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்வதிலும் இந்து நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றமையை அறியலாம்.

அமெரிக்க இந்து அறக்கட்டளை இந்தியாவில் வேரூன்றிய யோகா தொடர்பான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன. இவ் அறக்கட்டளை யோகா ஜேர்னல் எனும் பத்திரிகையில் யோகா தொடர்பான பிரச்சாரத்தை அறிமுகம் செய்தது. இப் பத்திரிகை உபநிடதங்கள் அல்லது கீதையின் எண்ணற்ற விளக்கங்களைப் பண்டைய இந்தியா அல்லது யோகி எனும் தலைப்பில் யோகா தொடர்பான பிரச்சாரத்தை மேற்கொண்டது. எனினும் இப் பிரச்சாரத்தில் தோல்வி கண்டது. இருந்தபோதிலும் இந்துதத்துவம் என்பதை தவிர்த்து HAF (அமெரிக்கன் இந்து அறக்கட்டளை) தனது முதலாவது பத்திரிகையான யோகா பியண்ட் எனும் பத்திரிகையில் யோகா ஆசனத்தை இந்து சிந்தனை முறையில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் இந்துப்பண்பாடு தொடர்பாக பங்களிப்புக்களை மேலைநாட்டவர் ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் இந்தோனேசியா பாரிஸ்டா இந்தோனேசியா இந்துமதம் சங்கம் (PHDI) எனும் பெயரில் இந்துமத அமைப்பொன்று இன்றுவரை செயலாற்றி வருகின்றமையை அறியமுடிகின்றது. இவ் அமைப்பானது இந்து மத மறுமலர்ச்சிக்கு உதவும் பெரிய சீர்திருத்த இயக்கமாகக் காணப்படுகின்றது. இவ் இயக்கம் அல்லது அமைப்பை ஜடா பேகஸ் மந்திரா என்பவாரல் 1959ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இவ்வமைப்பின் தலைமையகம் இந்தோனேசியாவின் ஜகார்த்தா எனும் இடத்தில் காணப்படுகின்றது. இவ் இயக்கத்திற்கு அதிகாரபூர்வமான வலைத்தளமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மதம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டு வருகின்றமையை அறியலாம்.

சைவ சித்தாந்த கோயில் எனும் அமைப்பு சைவ சமயத்தைக்  காப்பாற்றுவதுடன் சைவ சமயத்தைப் பின்பற்றுவதற்கு ஊக்குவிப்பதுமான கோவில் பணியை ஆற்றும்  ஒரு அமைப்பாக இயங்கி வருகின்றது. இவ் அமைப்பானது குருதேவா எனும் பட்டம் பெற்ற பட்டதாரியான சத்குரு சிவாய சுப்ரமணியஸ்வாமி எனும் ஆன்மீக ஆசிரியரின் ஆன்மீக ரீதியான செயற்பாட்டிற்குப் பெரிதும் உதவுவதாகக் காணப்படுகின்றது. இவ்வமைப்பானது உலகிலுள்ள பல நாடுகளிலும் அங்கம் வகிக்கின்றது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, மொரி~pயஸ், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து கோவில்களிலும் அங்கம் வகிக்கும் அமைப்பாகக் காணப்படுகின்றது. சாதிகுரு போதிநாத்த வேளன்ஸ்வாமி என்பவரின் தலைமையில் உலகளாவிய சமுதாயத்தில் இந்துமதத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன் பிராந்திய அடிப்படையில் உறுப்பினர்கள் இக் கோவிலில் அங்கம் வகித்துப் பயின்று வருகின்றனர்.

சைவ சித்தாந்த கோயில் அமைப்பால் அமெரிக்காவின் கயாயின் இந்து மடாலயத்தில் உள்ள ஐரிவன் கோயில் உருவாக்கம் செய்யப்பட்டது. 1949ம் ஆண்டு அமெரிக்காவில் சத்குரு சிவாய சுப்பிரமணியசுவாமி என்பவரின் தலைமையில் உருவாக்கப்பட்டது. இக் கோவிலின் பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்தும் ஆங்கிலத்தில் கடவுளின் சிலை வெளிப்படுத்திய சத்தியம்எனவும் கூறப்படுகின்றது. 1957 டிசம்பர் 30 இல் கலிபோர்னியா மாகாணத்தில் அமெரிக்காவின் சட்டங்களின் கீழ் சைவ சித்தாந்தம் கோயில் இணைக்கப்பட்டது. அத்துடன் அமெரிக்க உள்நாட்டு வருவாய் வர விலக்கு நிலையை 1962 பெப்ரவரி 12ம் திகதி அன்று இதனை ஒரு கோயிலாக அங்கீகரித்தது. அமெரிக்காவின் பழமையான இந்துக்களிடையே உள்ள நிறுவனங்களின் தலைமையகம் 1970ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதி ஹவாயில் உள்ள காயாயின் இந்து மடாலயம் என்று அறியப்பட்டு அவ் ஆதீனத்தின் சர்வதேச தலைமையகம் நிறுவப்பட்டது. இம் மடாலயத்தில் 2 கோயில்கள் காணப்படுகின்றன. இக் கோயில் அமைப்பின் தலைமையகம்  அமெரிக்காவின் ஹவாய் எனும் இடத்தில் காணப்படுகின்றது. உத்தியோகபூர்வ மொழியாக ஆங்கிலம் காணப்படுவதுடன் இக் கோவிலின் தற்போதைய தலைவராக சத்குரு போதிநாத வெலிஸ்வாமி என்பவர் தலைமை வகிக்கின்றார். ஊழியர்கள், 22 தொண்டர்கள் என்போர் உள்ளனர். இவ் அமைப்பிற்கென்று உத்தியோகபூர்வ இணையத்தளமும் காணப்படுகின்றமை குறிப்படத்தக்கதாகும்.

ஐரிவன் கோயில் பற்றி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் மைக்கேல் ஹயால் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். இது இந்தியாவைப் போன்றது. ஆனால் ஹவாய் தீவு காவாய் என்றழைக்கப்படுகின்றது. இங்கு சைவ சித்தாந்தர் கோவில் உறுப்பினர்கள் இந்து கோவிலை ஒரு வெள்ளை கருணை கோவிலாக கட்டி எழுப்புகின்றனர். அது அவர்களின் குருவின் தரிசனத்தை பூர்த்தி செய்து 1000 ஆண்டுகள் நீடிக்கும் நோக்கம் கொண்டது. இந்த பக்திச் செயலுக்காக ஒவ்வொரு கற்களிலும் 3.2 மில்லியன் அறங்கள் இந்தியாவில் கைகளால் பூமியிலிருந்து இழுக்கப்பட்டு சுத்தமாகவும் விரிவான தொகுப்பாகவும் சுத்தி மற்றும் இரும்பு ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன.என குறிப்பிட்டுள்ளார்.

1973 இல் இக் கோவில் ஆதீனத்தின் 2ம் கோவிலாகப் பராமரிக்கப்பட்டு கடவுள் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கதாகும். இக் கோயில் நோக்கங்கள் பலவற்றையும் கொண்டுள்ளது. அந்தவகையில் சைவ சித்தாந்த பள்ளி இக் கோவிலின் தனித்துவமான கிளையாகக் கொள்ளப்படுகின்றது. அங்கு வேதம், சைவ ஆகமங்களும், திருமூலரால் எழுதப்பட்ட தமிழ் நூல்களான பழங்கால திருமண்டியிலும் உள்ளன. கோவிலில் இறையியல், மற்றும் ஆன்மீகக் கோட்பாடுகள், சமரசமற்ற அத்துமீறல்கள் ஆகியவற்றின் தொகுப்புக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதுஆழnளைவiஉ வாநளைஅஎன குறிப்பிடப்படுகின்றது. அது இரட்டை அல்லது பன்மைவாதம் சமமாக சரியான முன்னோக்குகளை அங்கீகரிக்கின்றது. இதனை சத்குரு சிவாய சுப்ரமணியஸ்வாமி பின்வருமாறு விளக்குவதைக் காணலாம். "கடவுள் நமக்குள்ளும் நம்மை வெளியேயும் படைத்தவர், அவரே படைப்பாளரும் மிகப் பெரியவரும் ஆவார்." என விளக்குவதை அவதானிக்கலாம்.

சிவனின் முக்கிய குறிக்கோள் கடவுளின் அடையாளத்தை உணர்த்துவதாகும். இது என்விக்குல்கா சமாதி எனப்படும். அதாவது சுய உணர்தல், என்பவற்றை இந்த வாழ்க்கையில் அடையலாம். மோட்ஷத்தை வழங்குவது, பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சிகளில் இருந்து நிரந்தர விடுதலை என்பவை இரண்டாம் நிலையாகும். இந் நிலை சபில்காமா சமாதி எனப்படும். சச்சிதானந்தாவின் உணர்தல், புத்திசாலித்தனம் உள்ள தனித்துவமான அனுபவம், உண்மை, அறிவு மற்றும் பேரின்பம் என்பன அறியப்படுகின்றன. நம் ஆன்மாவுக்குள் ஆழமாக கடவுளோடு ஒத்திருக்கின்றோம். ஏனெனில் பரிணாம ஆத்மாவின் அம்சங்களாக இல்லை. ஆனால் ஆத்மாவின் மையம் மாறாது அல்லது உருவாகாது. அவ்வாறு உள்ளவர்களில் நித்தியமாக பரிபூர்ணமாகவும் கடவுளான சிவன் இருக்கிறார். என்பதை சுவாமிகள் குறிப்பிடுவதைக் காணலாம். 

மொரிஷியஸ் நாட்டில் காணப்படும் சைவ சித்தாந்த கோவில் பல இந்துமதப் பணிகளை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அங்குள்ள ஆலயத்தின் ஆன்மீக பூங்காவில் கணேஷ ஹோமம் நடைபெறுகின்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இக் கோயிலின் முக்கிய நோக்கம் தென்னிந்திய மற்றும் இலங்கையின் தமிழ் கலாசாரம், மரபுகள், மற்றும் வேத நூல்களில் உள்ளடங்கியுள்ள சைவ இந்துமதத்தைப் பாதுகாப்பதாகும். பாதுகாப்பதுடன் ஊக்குவிப்பதுமாகும். இது நந்தினாதா சம்பிரதாயத்தின் கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். பண்டைய மதம் மற்றும் கலாசார முறைகளைப் பின்பற்றும் அனைத்து இனப் பின்னனியினரிடமும் இருந்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இவ்வாறான உறுப்பினர்கள் உலகளாவிய ரீதியில் 85 வீதம் காணப்படுகின்றனர். குறிப்பாக இவர்கள் மொரிஷியஸ், மலேசியா. சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். இம் மேற்கு நாடுகளில் உள்ள உறுப்பினர்கள் ஆன்மீக வழிபாடு, வழிபாடு, சாதனா மற்றும் யோகாவை வழிநடத்துதல் என்பனவற்றின் மூலம் இந்துமதத்தை வளர்ப்பதுடன் அதன் வளர்ச்சிக்குப் பங்களிப்பாற்றுகின்றனர்.

ஹவாயில் அமைந்துள்ள ஐரிவன் கோயிலில் இருந்து இந்து மதம் தொடர்பான பத்திரிகை ஒன்று வெளியிடப்பட்டு வருகின்றது. இப் பத்திரிகையை இந்தியாவிலும்  மற்றும் உலகளாவிய ரீதியிலும் வாசிக்கப்பட்டு வருகின்றமையை அறியலாம். இப் பத்திரிகை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இந்து மதத்தைப் பற்றி இந்துக்களுக்கும் இந்து அல்லாதவர்களுக்கும் கல்வி, புத்தகங்கள், இணையத்தள பொருட்கள் வெளியீடு, மற்றும் விநியோகம், பாடங்கள், இலக்கியம்,  என்பவற்றை மேற்கொள்கின்றது. இவற்றுடன் உலகளாவிய இந்துக்களின் அறக்கட்டளை அமைப்புக்களை நிறுவுதல், இந்துப் பாரம்பரியத்தை நிலைநாட்டுதல் முதலான பணிகளையும் இவ் அமைப்பு ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவற்றிற்கெல்லாம் முக்கிய பங்காற்றியவர் சத்குரு சிவாய சுப்பிரமணியஸ்வாமிகள் ஆவார்.

இது போன்றதொரு இயக்கமாக விளங்குவது ஹரே கிருஷ்ணா இயக்கம் எனும் இயக்கமாகும். கிருஷ்ணா என்று வணங்கும் வைணவ சமயத்தவர்களின் உணர்வுகளுக்காக அமைக்கப்பட்ட சர்வதேச சமூகம் மற்றும் வைணவ இந்து சமய அமைப்பாகும். இவ் அமைப்பானது 1966ம் ஆண்டு நியூயோர்க் நகரத்தில் எ.சி. பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுதா மற்றும் அவரது சீடர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டதாகும். இது முக்கிய நம்பிக்கைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்து வேத நூல்கள் குறிப்பாக பகவத்கீதை மற்றும் பாகவத புராணங்கள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தியாவிலும் மற்றும் மேலை நாடுகளிலும் இந்துப் பண்பாடு தொடர்பில் தனது சேவைகளை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கிலாந்தில் இந்துக்களுக்கான நிறுவனங்கள் மற்றும் சமூக நிகழ்வுகள் விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் பிராந்திய அமைப்புக்கள் பல உள்ளன. 300க்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள், இந்து சமய அமைப்புக்கள் என்பன காணப்படுகின்றன. 161 இந்து கவுன்சில் பிரிட்டன், 171 பிரித்தானிய இந்து மன்றம் உள்ளிட்ட பல்வேறு இந்துக்கோயில்களின் கிட்டத்தட்ட 400 கலாசார மற்றும் மத அமைப்புக்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஸ்ரீ சுவாமிநாராயணன் மந்தீர் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள மிகப்பெரிய இந்து ஆலயமாகும். இங்கு வாழும் இந்துக்களிடையே கணிசமான மொழியியல் மற்றும் தத்துவார்த்த வேறுபாடுகள் உள்ளதாக டெர்பி பல்கலைக்கழகம் குறிப்பிடுகிறது. எனினும் அவை இந்து அடிப்படைவாதத்தின் அடிப்படை நம்பிக்கைகள், சடங்குகள், பண்டிகைகள் எனப் பகிர்ந்து கொள்வதாகக் கூறப்படுகின்றது.

இந்துக்கோவில்களில் தேசிய கவுன்சில் மற்றும் பிரித்தானிய இந்துக் கவுன்சில் ஆகியன இந்துக்களின் தேசிய குழுக்களாக உள்ளன. இவை இங்கிலாந்தில் சமூக நிகழ்வுகள் மற்றும் சமூக விவகாரங்கள் என்பவற்றை ஒழுங்குபடுத்துகின்றன. இவற்றுடன் பிரித்தானியாவில் கிருஷ்ணா நனவுகளுக்கான சர்வதேச சமூகம் (ISKCON) சின்மயா மிஷன், ராமகிருஷ்ணமிஷன் மற்றும் சாய் நிறுவனத்தில் சுவாமி நாராயன் ஆகிய பெரியளவிலான இந்துசமய நிறுவனங்கள் காணப்படுகின்றன. பகவத்கீதை, ராமாயண ஸ்ரீமதி பகவத், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் என்பவற்றைக் கற்றுக் கொடுக்கின்றன.

ஸ்வாமிநாராயண் கோவில் 2014 செப்டம்பர் 21ம் திகதி இந்து சுயாதீவ சாக்ச் சங்கம் எனும் அமைப்பு இங்கிலாந்து ஊடாடும் நிகழ்ச்சியை நடத்தியது. இது 1925இல் ஆர்.எஸ்.எஸ் என்னும் அமைப்பால் தொடங்கப்பட்டதாகும். இந் நிகழ்வில் இங்கிலாந்தின் அனைத்;து முக்கிய இந்து அமைப்புக்கள், 150 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். இதன் கிளைகள் 40,000 க்கும் அதிகமான உள்ளுர் கிளைகள் 10 வருடங்களாக இயங்கி வருகின்றன. உலகளாவிய மனிதாபிமான மதிப்புக்களை உள்ளடக்கிய இந்துத் தத்துவத்தின் கருத்து அமைப்பின் ஆரம்பத்திலிருந்து தலைமைத்துவமான தரிசனத்தோடு வலுவாக இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்துப்பண்பாடு தொடர்பான பாடங்களும் மேலைத்தேயவர்களால் மேலை நாடுகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக Oxford University இல் இந்துசமயக் கற்கைகள் இடம்பெறுவதுடன் அங்கு இந்துசமய பீடம் தனியான பீடமாகக் காணப்படுகின்றமையும் மேலைநாட்டவர்களின் பங்களிப்புக்களையே காட்டி நிற்கின்றமையை அறியலாம். இங்கு வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் பற்றியும் அவற்றினை ஆதரிக்கும் நம்பிக்கைகள், பழக்கங்கள் பற்றிய பரந்த புரிதலை உடைய பாடத்திட்டங்களை வழங்குகின்றன. சமஸ்கிருத மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. பட்டப்படிப்பு 3 வருடம் பயிலப்படுவதுடன் இங்குள்ள பாடத்திட்டத்தில் மாணவர்களிடையே முழுமையான திறனை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதை அவதானிக்கலாம். இவற்றுடன் போதனைகளின் பெரும்பகுதி பாரம்பரிய நூல்களின் வாசிப்பு மற்றும் விளக்கம் அளிப்பதன் மூல் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கேற்றாற் போல் மாணவர்களும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளதாகக் கூறப்படுகின்றது.

வேதங்களும் உபநிடதங்களும் உண்மையிலேயே பரந்தளவில் இருக்கின்றன. இவ்வாறான பரந்தளவில் காணப்படும் அறிவைக் கொண்டு முக்கிய கருப்பொருட்களின் ஆய்வுகளில் பாடங்கள் இடம்பெறுகின்றன. பாடநெறி விவரங்கள் பாடத்திட்டத்தில் இந்து சடங்கு நூல்களின் விரிவான ஆய்வு, வேத சம்ஹிதாஸ (வேதங்கள்) மற்றும் உபநிடதங்களின் மத போதனைகளுக்காகவும் இப் பாடநெறிகள் அறிமுகம் செய்யப்பட்டன. 7 அமர்வுகளில் பாடங்கள் இடம்பெறுகின்றன. அந்தவகையில் முதலாவது அமர்வில் வேத சம்ஹிதாக்கள் மற்றும் வேத மதங்கள் பற்றி கற்பிக்கப்படுகின்றன. வேதாவின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு என்பன பற்றி கற்பிக்கப்படுகின்றன.

இரண்டாவது அமர்வில் வேதியியல் பாடல்கள் மற்றும் வேத சடங்;கு என்பன கற்பிக்கப்படுகின்றன. ரிக் வேத சம்ஹிதாவின் சில பாடல்கள் கூறப்படுகின்றன. மூன்றாவது அமர்வில் உபநிடதங்கள் பற்றி கற்பிக்கப்படுகின்றன. உபநிடதங்களில் ஈசா உபநிடதம் படிக்கப்படுகின்றன. நான்காவது அமர்வில் பிருகதாரண்ய உபநிடதம் அவற்றின் கட்டமைப்பு பற்றி ஆராயப்படுகின்றன. இவற்றுடன் 5வது அமர்வில் சாந்தோக்கிய உபநிடதமும் ஆறாவது அமர்வில் கட உபநிடதம் பற்றியும் அதன் கட்டமைப்பு தொடர்பாகவும் ஏழாவது அமர்வில் சுவேதாஸ்வர உபநிடதம் தொடர்பாகவும் அதன் கட்டமைப்பு என்பன பற்றியும் இந்துத் தத்துவத்திற்கு முழுமையும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்துப்பண்பாடு தொடர்பில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

வடஅமெரிக்காவின் இந்து கோயில் சங்கம் எனும் பெயரில் இந்துப்பண்பாட்டைப் பிரதிபலிக்கும் சங்கம் ஒன்று காணப்படுகின்றது. இது கணேஷ் கோவில் எனப் பிரபல்யமாக அறியப்படுகின்றது. நியூயோர்க் நகரில் குயின்ஸ் எனுமிடத்தில் காணப்படும் இந்துக் கோவில்களில் பாரம்பரிய முதன்மைக் கோயிலாகத் திகழ்கின்றது. புனித இறைவன் கணபதி என்பதால் நியூயோர்க் நகரத்தில் பல இந்துக் கோயில்கள் காணப்படுகின்றன. இக் கோயிலில் கோயில் கட்டிடக்கலை மற்றும் சடங்குகள் தென்னிந்திய பாரம்பரியத்தைப் பின்பற்றும் ஆலயமாகக் காணப்படுகின்றது.

இந்து கோயில் சங்கம் 1970, ஜனவரி 26 இல் தொடங்கப்பட்டது. ஆகம சாஸ்திரத்துடன் தொடர்புடையதாக கட்டட அமைப்புக்கள் கட்டப்பட்டுள்ளன. இதனை ஆலயக்கட்டிடத்துடன் தொடர்புடைய நூல்கள் குறிப்பிடுகின்றன. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள கட்டடம் 1977ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. அதே ஆண்;டு ஜுலை 4ம் திகதி கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தியாவில் இருந்து ஸ்ரீமதிமல ஸ்வாமிகள் இக் கோயிலுக்கென 26 யந்திரங்களை தயாரித்து 5 ஆண்டுகளுக்கு பூஜைகள் நிறைவேற்றப்பட்டன.

இங்கு குழந்தைகளுக்கு ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் கணிதம், விஞ்ஞானம் முதலான மொழிகள் கற்பிக்கும் பாடசாலை காணப்படுகின்றது. இவற்றுடன் யோகா மற்றும் தியான வகுப்புக்கள் வழங்கப்படுகின்றன. வேதாந்தா நூலகம், மூத்த குடிமகன் மையம் மற்றும் குடியிருப்புக்கள் என்பன அமைக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கதாகும்.

அமெரிக்காவில் சர்வதேச இந்து வேத பல்கலைக்கழகம் காணப்படுகின்றது. புளோரிடாவின் ஆர்லோண்டாவில் அமைந்துள்ள இலாப நோக்கமற்ற கல்வி நிறுவனமாகும். இப் பல்கலைக்கழகம் 1993ஆம் ஆண்டு அக்டோபர் 24ம் திகதி நிறுவப்பட்டது. 2000ம் ஆண்டு இரண்டு கட்டிடங்களுடன் 9.7 ஏக்கர் (39000 மீ 2) வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு கற்பிக்கும் முழு நேர ஆசிரியர்களுக்கான குடியிருப்பு வசதிகள் 2002இல் நிர்மாணிக்கப்பட்டது. இப் பல்கலைக்கழகம் 8000 மாணவர்களைக் கொண்டு காணப்படுகின்றது. இங்குள்ள மாணவர்களுக்கான வளாகங்களும் இணையத்தள வசதிகளும் காணப்படுகின்றன.  இப் பல்கலைக்கழகம் சமஸ்கிருதம், இந்து தத்துவம், யோகா, ஆயர்வேத, ஜியோதிஷ் மருத்துவ வேதியல் ஆகியவற்றில் படிப்புக்களை இப் பல்கலைக்கழகம் வழங்குவதை அவதானிக்கலாம்.

அமெரிக்கவியலாளரும் சுவாமி விவேகானந்தரின் சீடராக ஜோசபின் மெக்லியோட் காணப்படுகின்றார். ராமக்கிருஷ்ண விவேகானந்த இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். விவேகானந்தரால் இவருக்கு டான்டின், ஜோ ஜோ புனைப்பெயர்கள் வழங்கப்பட்டன. ஜோசபின் சகோதரி நிவேதிதா மற்றும் சகோதரி கிறிஸ்டின் முதலானவர்களைப் போலல்லாமல் சந்நியாசியாக வாழ்ந்தவர். மேற்கில் விவேகானந்தரின் வேதாந்தத்தினைப் பரப்புவதில் கருவியாக நின்று செயற்பட்டார். சுவாமிகளின் பிரபலமான சீடர்களில் ஒருவரான நிவேதிதா அம்மையாருக்குப் பல உதவிகளையும் ஆற்றினார். குறிப்பாக இந்திய தேசிய இயக்கத்தின் வளர்ச்சிக்காக நிதி தொடர்பான பங்களிப்புக்களை ஆற்றியதுடன் வங்காளத்திலும் இந்தியாவிலும் இந்து மதம் தொடர்பான தன்னுடைய பங்களிப்புக்களை ஆற்றியுள்ளமையை அறியலாம்.

சார்லோட் செவியர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் ஆவார். திருமதி செவியர் எனவும் அழைக்கப்பட்டார். சுவாமி விவேகானந்தரின் நேரடிச் சீடர்களில் ஒருவராவார். இவரது கணவர் பெயர் ஜேம்ஸ் ஹென்றி செவியர் என்பதாகும். இமயமலையில் இராமக்கிருஷ்ண பரமஹம்~ரின் உத்தரவின் பெயரில் மாயாவதி எனும் அத்வைத ஆச்சிரமத்தை நிறுவினார். இவரது பங்களிப்புக்களாக பிரபுதபாரத பத்திரிகையின் தொகுப்பாங்களுக்கு உதவினார். அத்துடன் சுவாமி விவேகானந்தரின் முழுமையான படைப்புக்களைத் தொகுத்து வழங்கியதுடன் சுவாமிகளின் நினைவு ஆலயத்திற்கு நிதி வழங்கியும் வைத்தார். 

இந்தியாவின் இந்துப்பண்பாட்டில் கலை முக்கியத்துவம் பெற்றுக் காணப்படுகின்றது. இவற்றில் இந்தியாவின் பாரம்பரிய நடனமாகக் கொள்ளப்படுவது பரதநாட்டியமாகும். இந் நாட்டியமானது மேலைநாடுகளிலும் மேலைத்தேயர்களால் போற்றப்பட்டு வருகின்றன. அந்தவகையில் மேலைநாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் இந்நடனம் பயிலப்பட்டு வருகின்றது. குறிப்பாக இங்கிலாந்தின் கற்கைபீடம் ஒன்று தெற்காசிய நடனம் பயிலப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்தது. அதன்படி ISTD  எனும் நிறுவனம் 1999 இல் நிறுவப்பட்டது. இங்கு பரதநாட்டியம் மற்றும் கதக் என்பன ஆய்வு செய்யப்பட்டன. இந்நிறுவனத்தின் அனுசரனையுடன் ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது.

ஆசியச் சமூகம் என அழைக்கப்படும் கழகமானது மேலைநாட்டவரான வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் நிறுவப்பட்ட இந்து அமைப்பாகும். இது இந்தியாவின் தலைநகரான கொல்கொத்தாவில் நிறுவப்பட்டதுடன் வில்லியம் கோட்டையில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக விளங்கிய இராபர்ட் சாம்பர்சு தலைமையில் கூட்டம் நடத்தி கிழக்கிந்திய பண்பாட்டுக் கூறுகளை ஆராய்ந்தறியும் நோக்குடன் இக் கழகத்தை நிறுவினார். 1784 இல் நிறுவப்பட்டது. 1832 இல் இதன் பெயர் வங்காளத்தின் ஆசியச் சங்கம்(Asiatic Society of Bengal) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் 1936 இல் வங்காளத்தின் அரச ஆசியச் சங்கம்என்றும் பின்னர் இறுதியாக 1951இல் ஆசியச் சமூகம்எனப் பெயர் மாற்றப்பட்டு தற்போதும் அப்பெயருடன் நிலைத்து நிற்பதை அவதானிக்கலாம்.

மேற்கு அவுஸ்திரேலியாவில் WAA இன் தமிழ்ச் சங்கம் 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் வெள்ளி விழாவை 2004ம் ஆண்டு கொண்டாடியது. WAA தமிழ்ச் சங்கம் பொதுவாக TAWA என அழைக்கப்படுகின்றது. இங்கு தமிழ்மொழி மற்றும் கலாசாரத்தில் தீவிரமாக ஊக்குவிப்பதில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. கலை மற்றும் உணவு முதலானவற்றையும் ஒருங்கிணைக்கும் வெற்றி பெற்ற அமைப்பாகக் காணப்படுகின்றது. 

இந்துப்பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அருங்காட்சியகமும் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கனடிய அருங்காட்சியகம் (The Canadian Museum of Indian Civilization) வட அமெரிக்காவில் 1998 இல் அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகமாகும். இவ் அருங்காட்சியகம் இந்துத் தத்துவத்தின் மாறும் அம்சங்களைப் பிரதிபலிப்பதுடன் பரிணாமம், உலக கலாசாரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் செயற்படுகின்றது. கண்காட்சிகள், திரைப்பட விளக்கக் காட்சிகள், என்பவைகள் மூலம் காட்சிப்படுத்தப்படுகின்றன.

மேலை அறிஞர் பலர் இந்துப்பண்பாடு தொடர்பில் தத்தமது பங்களிப்புக்களை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அவர்களில் ஒருவராக ஜோன் வூட்ரொப் கொள்ளப்படுகின்றார். பிரித்தானியாவைச் சேர்ந்த இவர் 1865ம் ஆண்டு பிறந்தார். இந்திய பாரம்பரிய மொழியான சமஸ்கிருதத்தையும் இந்துத் தத்துவத்தைதயும் முறையாகக் கற்றார். இந்துத் தத்துவத்தில் அதிக ஆர்வம் காட்டியதுடன் 20 சமஸ்கிருத மூல நூல்களைத் தொகுத்தார். இந்தியத் தத்துவம் மற்றும் யோகா, தந்திரா முதலான தலைப்புக்களில் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலைத்தேயத்தில் தந்திரத்தின் நவீன முன்னோடியாக இருந்தார். இந்திய தத்துவங்களான குண்டலினி, மந்திரம், தந்த்ரா, யந்திர, காளி முதலானவை பற்றிய தனது ஆய்வுகளை மேற்கொண்டார்.

வில்லியன் ஜேம்ஸ டுரன்ட் என்பவரும் மேலைத்தேய தத்துவவியல் அறிஞர்களுள் ஒருவராவார். இவருடைய தத்துவம் தொடர்பான The Story of Philosopy எனும் நூல் சிறப்பிற்குரியதாகும்.இதனை 1926 இல் எழுதியுள்ளார். இந்நூலைத் தனது மனைவியான ஏரியல் டுரனட்டுடன் இணைந்து எழுதினார். இது தத்துவத்தைப் பிரபல்யப்படுத்துவதற்கு உதவியதாகக் கூறப்படுகின்றது. இந்தியா தந்த சகிப்புத்தன்மை, ஆத்ம அமைதியான உள்ளடக்கம் முதலான விடயங்களை உள்ளடக்கியதாக அமைகின்றது.

இந்துப்பண்பாடு தொடர்பிலான பங்களிப்பை ஆற்றிய மேலைத்தேயர்களுள் மிர்ரா அல்பாஸா என்பவரும் ஒருவராவார். இவர் 1878 பெப்ரவரி 21ம் திகதி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தார். அனைவராலும் அம்மா என அழைக்கப்பட்டவர். ஆன்மீக குரு மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் இந்துமதச் செயற்பாடுகளுக்குத் துணைநின்றார். ஸ்ரீ அரவிந்தோ ஆசிரமத்தை நிறுவி ஆரோவில்லை சோதனை நகரமாகவும் உலகளாவிய நகரமாகவும் நிறுவினார். யோகா தொடர்பான எழுத்தாளர்களையும் குருக்களையும் தனது செல்வாக்கு மற்றும் தூண்டுதல்கள் மூலம் உருவாக்கினார். உலகெங்கிலும் பயணம் செய்து இறுதியாக இந்தியாவின் பாண்டிச்சேரிக்கு வந்து ஸ்ரீ அரவிந்தோ மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் குடியேறினார். அங்கு ஆச்சிரமம் ஒன்றை நிறுவியதுடன் ஸ்ரீ அரிந்தோவுடன் இணைந்து யோகாவை நிறுவி அதன் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.

இந்துப்பண்பாட்டில் வேதங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. இவ்வாறு முக்கியம் பெறும் வேதத்தினை மேலைநாட்டவர்கள் ஆய்வு செய்ததன் மூலம் இந்துப்பண்பாடு தொடர்பில் பாரிய பங்களிப்பை வழங்கயுள்ளமையைக் காணலாம். அந்தவகையில் வேதத்தை ஆய்வு செய்தவர்களில் மேலை நாட்டுத் தத்துவவாதியான மக்ஸ்முல்லரும் ஒருவராவார்.  வேதகாலரிஷி என சுவாமி விவேகானந்தரால் சுட்டப்பட்ட மக்ஸ் முல்லர் நமது அகவாழ்வு நிறைவானதாகவும், உரிய மன இயல்புடையதாகவும் இருக்க வேண்டுமாயின் இந்திய தத்துவ நூல்களை படிக்க வேண்டியது இன்றியமையாததாகும்என்றார். இவரது படைப்புக்களில் 20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட நூலாக My Autobiography: AFragment - (1901)  எனும் நூல் குறிப்பிடப்படுகின்றது. இவருடைய சிறந்த படைப்புக்களில்  The Sacred Books of the East  என்னும் நூல் பல்லின ஒருமைப்பாட்டோடு இந்துமத மூலங்களைப்பற்றி தெளிவான வரையறை எமக்கு எடுத்துரைப்பதைக் காணமுடிகின்றது.

கீழைத்தேய ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக்கழகம் மக்ஸ் முல்லரின் இந்நூலை வெளியீடு செய்தது. The SacredBooksofthe East எனும் நூற்றொகுதி ஐம்பது நூல்களை உள்ளடக்கியது. இவை 1879 ஆம் ஆண்டிற்கும் 1910 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிவந்தன. வெவ்N;வறுபட்ட சமயங்களை ஒப்பிட்டு ஆராய்வதில் சிறந்த பல மொழி வல்லுனரான மக்ஸ் முல்லர் இவற்றை பதிப்பித்தமை மாத்திரமன்றி மூன்று நூல்களை எழுதியுமுள்ளார். இவருடன் Kashinath Trimbak Telang, Geroge Thibaut, Maurice Bloomfield, Herman Oldenberg, Julius Eggeling, George Buhler, Julius Jolly ஆகியோரும் இந்நூலின் எழுத்தாசிரியர்களாகவுள்ளனர். இந் நூலில் இந்துதத்துவங்கள், இந்து சட்டங்கள், மற்றும் இறையியல் மந்திரங்கள் என்பன தொடர்பாக ஆய்வு செய்துள்ளமையை அவதானிக்கலாம்.

ஆகவே மேற்குறிப்பிட்ட விடயங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது மேலைநாடுகளில் பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்துப்பண்பாடானது பரவியமையைக் காணமுடிகின்றது. அவ்வாறு பரவிய இந்துப்பண்பாட்டின் சிறப்புக்களை அலசி ஆராய்ந்த மேலைநாட்டவர்கள் அதில் ஆர்வம் ஏற்பட்டு இந்துப்பண்பாட்டின் அனைத்து அம்சங்களையும் ஆராயத் தொடங்கினர். குறிப்பாக சடங்கு, கலை, தத்துவம், சமயம், முதலான அம்சங்களடங்கிய இந்துப்பண்பாட்டை ஆராய்ந்தனர். ஆராய்ந்தது மட்டுமல்லாமல் அவை தொடர்பானவற்றை தத்தமது நாடுகளில் பரவச்செய்ததுடன் இந்துப்பண்பாட்டம்சங்களை மேலைநாட்டவரும் அறியும் வகையில் பல பங்களிப்புக்களை ஆற்றினர். குறிப்பாக பங்களிப்புக்கள் என்று பார்க்கின்ற போது அகழ்வாராய்ச்சிகள், இலக்கியங்கள் எழுதுதல், இலக்கிய மீளாய்வு, மொழிபெயர்ப்புக்கள், கல்வி, இயக்கங்கள் எனப் பலவாறு தமது பங்களிப்புக்களை ஆற்றியுள்ளமையை அறியலாம். இன்றுவரை பேணப்பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம்.

குறிப்பாக மேலைதேயத்தில் இந்துப்பண்பாடு தொடர்பான கற்கைகள் இடம்பெறுவதை அவதானிக்கலாம். முன்னமே குறிப்பிட்டது போன்று இந்துசமயத்திற்கென்று தனியான பீடம் பிரித்தானி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்றமையை அவதானிக்கலாம். இன்றைய காலப்பகுதியை விடுத்து அதற்கு முற்பட்ட காலம் தொடக்கம் இந்துப்பண்பாடு தொடர்பில் தமது பங்களிப்புக்களை மேலை நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும்;, இலங்கையிலும் தமது பங்களிப்புக்களை ஆற்றியுள்ளனர். இலங்கையில் வெளிநாட்டவரான விட்டாக்கர் என்பவர் மட்டக்களப்பு மண்டூர் முருகன் கோயில் தொடர்பாகவும் அக் கோயில் அண்டியுள்ள சமூகம் தொடர்பாகவும் ஆய்வு செய்துள்ளமையை அவதானிக்கமுடிகின்றது.

தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தில் இன்றுவரை இராமாயணம் செல்வாக்குடன் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக அமைவது அந் நாட்டவரின் ஆரம்ப காலச் செயற்பாடுகளே ஆகும். பகவத் கீதையை மேலைநாட்டு அறிஞர் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தமையை அறியலாம். இதே போன்று பல அறிஞர்களும் தமது ஆய்வுகளை மேற்கொண்டு இன்றுவரை நிலைத்து நிற்பதற்கு வழிவகுத்துள்ளமையை அவதானிக்கலாம்.

நிறைவுரை

        இவ்வாறு மேலைநாடுகளில் இந்துப்பண்பாடு நிலைத்து நிற்பதற்குப் பல அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் செய்த பங்களிப்புக்களே காரணம். இவ்வாறு இவர்கள் செய்த பங்களிப்புக்களால் இன்றுவரை மேலைநாட்டவர் மத்தியில் இந்துப்பண்பாடு நிலைத்து நிற்கின்றது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்றே கூறலாம்.   

உசாத்துணைகள்

01.  www.gaurijiog.com/directory/Indian-Dance/Bharatanatyam-Dance/North-America

02.  https://www.google.com/search?ei=zkppW7SgD8Wm9QPy6aLAAQ&q=hinfu+approach+to+modern+contribution+in+western&oq=hindu+approach+to+modern+contribution+in+western&gs_I=mobile-gws-wiz-serp.1.0.30i.

03.  https://www.ox.ac.uk/admissions/undergrauate/courses/orient-studies/sankit?wss1=1

04.  https://en.m.wikipedia.org./wiki/hindu_nationalism

05.  https://en.m.wikipedia.org/wiki/hindusim_in_the_west

06.  https://westernu.campualabs.ca/engage/orgaization/hindustudentsassociation