4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

புறத்திண்ணை - அ.சதிஸ்குமார்

 

 


புறத்திண்ணை

 

அவனுக்கும் தெரிந்து இருக்க வேண்டும்

என் படுக்கையின் இடமாற்றங்கள்

சமையல் அறையின் சத்தங்கள்

அவனைக் கட்டிப் போட்டு விட்டன

ஓயாத சத்தங்களின்ஒன்று, இரண்டு

சத்தமில்லாமல் வந்துவிடும்

என் புறத்திண்ணை

நகர்த்தலுக்குப்பின்

சமையலறையின்  சத்தங்கள்

ஒடுங்கிப் போயின

டாமியின் பசி என்னையும்

அவர்களுக்கு

ஞாபகப்படுத்துகிறது

அதற்காக அதனோடு

நான்

பொதுவுடைமை காட்டலாகாது.

பிஞ்சுகளின்

புறத்திண்ணை வாசத்திற்கும்

ராணுவக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது

அவனுக்கும் தெரிந்திருக்க வேண்டும்

அதனால் தான்...

ஈக்களும் நாற்றங்களும் என்னோடு தனிமை பேசுகிறது.

 

அ.சதிஸ்குமார்

(ஆதிஅவந்தி)

உதவிப் பேராசிரியர்

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சி

9842074684

thensathishkumar@gmail.com