6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கொரோனாவின் யுத்தம் - தா.சரவணன்

 

கொரோனாவின் யுத்தம்

 

பற்றி  எரியும்

காடுபோல

மனித உடல்

எரிகிறது

மனசாட்சியில்லாத

கொரோனா

மாய யுத்தம் செய்கிறது

 

 அதிநம்பிக்கை உடைகிறது

ஆண்டவனும் அருள் கொடுக்காமல்

அடைபட்டு கிடக்கின்றார்

 

இனம் மதம் நாடு சாதி

என்று நாம் கொண்டிருந்த

பெருமை நம்மை காப்பாற்றவில்லை

 

விஞ்ஞானத்தால்

மருத்துவத்தால்

பொருளாதாரத்தால்  வளர்ச்சி

அடைந்துவிட்டதாக

பீத்திக்கொண்டிருந்தோம்

அவை எல்லாவற்றையும்

முடக்கி போட்டுவிட்டது

அற்ப கிருமி

 

இப்போது தான்

இயற்கை சூழல்

மாசற்று மகிழ்ச்சியாய்

வீசுகிறது

வாகன சத்தமில்லாத

பறவைகளின் பரவசத்தின்

குரல் கேட்கிறது

 

நல்ல வீடு

பணம் பதவி

இப்படி எதுவும்

பெரியதில்லை

உங்கள் உடம்பில்

எதிர்ப்பு சக்தி

இருந்தால்

அதுவே பெரியது

 

இன்னும்

வியாபார நிறுவனங்கள்

நோயை ஒழிக்க

மருந்து கண்டுபிடிக்காமல்

மனிதன் அழிந்துகொண்டிருக்கும்

இந்த வேளையிலும்

அழகுசாதனப் பொருட்கள்

தயார் செய்து

விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கிறது

 

நாம் நம் கலாச்சாரத்தை

மீறி போனதால்

அதை இயற்கை

மீட்டுருவாக்கம்

செய்கிறது

 

உலகமே ஊரடங்கில்

இருக்கிறது

அடங்காத மனிதனை

கொரோனா

மண்ணுக்குள் அடக்குகிறது

 

பற்ற வைத்த தீ போல

பரபரப்பாய் பரவுகிறது

உலகில்

மனித உயிர்கள் எல்லாம்

ஒவ்வொன்றாய்  குறைகிறது

 

கொரோனா

இன்னும் தொலையவில்லை

தனித்திருந்தால் தப்பில்லை

தள்ளி நடந்தால் தற்காப்பு

அது தரணிக்கே பாதுகாப்பு

 

வல்லசு நாடுகளே

தடுமாறுகின்றது

நாமெல்லாம் எம்மாத்திரம் 

தனித்திருப்போம்

விலகியிருப்போம்

விழித்திருப்போம்

கொரோனவை

விரட்டி அடிப்போம்

 

தா.சரவணன்

கல்யாணமந்தை 

திருவண்ணாமலை(மாவட்டம்)635703

தொடர்பு எண்:9786577516

கருத்துகள் இல்லை: