4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

‘கடவுச்சீட்டு’ப் புதினத்தில் புலப்பாடு பெறும்புலம் பெயர் மக்களின் பன்முகப் பிரச்சினைகள் - க. ஆனந்தராஜன்

 

கடவுச்சீட்டுப் புதினத்தில் புலப்பாடு பெறும்புலம் பெயர் மக்களின் பன்முகப் பிரச்சினைகள்

. ஆனந்தராஜன்,

முனைவர்பட்டஆய்வாளர்,

தமிழ்உயராய்வுமையம்,

அமெரிக்கன்கல்லூரி, மதுரை-02.

Madhunisha432015@gmail.com

9080364320

ஆய்வுச்சுருக்கம்

ஆதிகாலச் சமூகத்தில் ஆநிரைமேய்த்தல், வேட்டையாடல், இயற்கைப்பேரிடர் போன்றவற்றினால் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தனியாகவோ இனக்குழுக்களாகவோப் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அதனைத்தொடர்ந்து, சங்ககாலம், காப்பியகாலம், பக்திகாலம் மற்றும் தற்காலம் எனப் புலம்பெயர்தல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்ற வேளையில், காலச் சுழற்சியில் தற்போது புலம்பெயர்தலின் பின்னனியான வறுமை, இனக்கலவரம் மற்றும் அரசியல் நெருக்கடிகள் போன்றவற்றினால் உயிருக்காக மட்டுமே புலம் பெயருமளவிற்கு உக்கிரமடையத் தொடங்கியது எனலாம். இதனால் தற்காலத்தியப் புலம்பெயர்தலிற்குப் பிறகானப்பு கலிடத்தில் மக்களிடையே ஆகப் பெரிய வலிகளையும் வாழ்வில் என்றுமே நினைத்துக் கூடப்பார்த்திராத வகையில் பன்முக இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன. இவற்றைப் புலம்பெயர்ந்த புகலிடப் படைப்பாளிகள் தம்புனைவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, புலம் பெயர்ந்த தமிழ்ப்பு தினப்படைப்பாளரான வி.ஜீவகுமாரனின்; ‘கடவுச்சீட்டுப் புதினமானது புகலிடத்தமிழர்கள் பன்முகப் பிரச்சினைகளையும் ஆழமாக விவரணைப்படுத்துகிறது.

முக்கிய வார்த்தைகள்

            புலம்பெயர்வு, புகலிடம், பன்முகஇழப்புகள், கடவுச்சீட்டு

முன்னுரை

            தொடக்ககாலத்திய மனிதர்கள் அவ்வப்போது நிகழும் இயற்கைப் பேரிடர்களிலிருந்து உயிர் வாழவேண்டித் தனியாகவோ அல்லது இனக்குழுவாகவோத் தம்மிடத்தை விட்டு மேட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர். இவ்விடத்தில் தான் மனிதர்களிடையே முதன்முதலாக இடப்பெயர்வு நடைபெற ஆரம்பித்தது எனலாம். இத்தகைய இடப்பெயர்வானது மனித இனத்திற்கு மட்டுமானதல்ல இயற்கையில் பறவைகளும் விலங்குகளும் பூச்சிகளும் தங்களின் இருப்பை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டி ஆங்காங்கேப் புலம்பெயர்ந்து சென்றுள்ளன. அந்த வகையில் உலகில் தவிர்க்க முடியாத நிகழ்வாகவுள்ள புலம்பெயர்வானது, தற்காலத்தில் வலிகள் நிறைந்ததாகவும் பன்முக இழப்புகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இவ்வாறான புகலிடவாழ்வியலில் நேரிடும் அவலங்களை எடுத்துரைப்பனவாகப் புலம்பெயர்ந்த தமிழ்ப் புதினப் படைப்பாளர்களின் புனைவுகள் அமைந்துள்ளன. அந்தவகையில், புகலிடவாழ்வியல் பற்றி தமது புனைவுகளில் விவரிக்கும் வி.ஜீவகுமாரனின்; ‘கடவுச்சீட்டுப் புதினத்தில் காட்சிப்படுகின்ற, இலங்கையிலிருந்து உயிர்வாழ வேண்டித்தமது தாய் மண்ணைக் கடந்து, சொந்த பந்தங்களைத் துறந்து, உடைமைகளை இழந்து டென்மார்க் நாட்டிற்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், புகலிடத்தில் சந்திக்கின்ற வாழ்வியற் பிரச்சினைகளையும் அவர் தம் பன்முக இழப்புகளையும் இனங்காட்டுவதாக இவ்வாய்வு அமையப் பெறுகின்றது.

புலம்பெயர்வு சொல்விளக்கம்

புலம் என்ற சொல்லானது நடைமுறையில் இடம், திசை, நிலம், நாடு, அறிவு, புலமை, நூல், காட்சி, தேயம் முதலிய பொருள்களைத் தருகிறது. க்ரியா தமிழ் அகராதிபுலம் என்ற பதத்திற்குதிசைப்புலம், மொழிப்புலம், மின்காந்தப் புலம்"1எனப் பொருள் தருகிறது. சங்ககாலத்தில் பரிசில் வேண்டிப் பொருநர்கள் பல்வேறு இடங்களுக்குப் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்பதைவேறுபுல முன்னிய விரகறிபொருந"2 (பா.வரி-.3) என்கிற பொருநராற்றுப் படைப்பாடல் வரியின் மூலமாக அறிய முடிகிறது. இங்ஙனம் புலம் என்ற பதமானது இடத்தையேக் குறிக்கின்றது.

            தொன்மைச் சமூகமானது அரசியல் மற்றும் சமூகநெருக்கடிகளுக்கு ஆளாகும்போது புலம் பெயரநேரிடுகிறது. இவ்வாறான நெருக்கடியில் சிக்கிய யூத சமூகமானது ஹிட்லரின் போர்; நெருக்கடியால் வேறு வழியின்றி நாடுநாடாகப் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். புலம் பெயர் தலைக் குறிக்கும்டயஸ்போரா(Diaspora) என்னும் பெயர்ச்சொல்லானது, சிதறுதல் அல்லது பரவுதல் என்னும் பொருளைத் தரும்டயஸ்பியர்(Diaspeir) என்கிற கிரேக்கச் சொல்லை அடியாகக் கொண்டு உருவானதாகும். இதே அர்த்தத்தில் இடம்பெயர் தலைக் குறிக்கும்மைக்ரேசன்(Migration) எனும் சொல்லும் டயஸ்போரா என்னும் சொல்லும், ஒரே பொருளையேக் கொண்டுள்ளன. 1991-இல் வெளிவந்தடையஸ்பரா(Diaspora) என்ற இதழின் ஆசிரியர்காச்சிக்டோலோலியான்(Khaching Tololyan) என்பார் புலம்பெயர் மக்களைநாடுகடந்து முன் மாதிரியாக அமையும் ஒரு சமூகம்3  என வரையறுத்துக் கூறுகிறார்.

புலம்பெயர் வகைகளும் அதன் காரணங்களும்      

            உலக வரலாற்றில் காலங்காலமாகப் பல்வேறானக் காரணிகளால் உயிரினங்களிடையே புலம்பெயர்வு நடந்த வண்ணமேயுள்ளன. அதாவது, இயற்கையில்மனிதர்களின் புலம்பெயர்தல் உலக அளவில் விரும்பியும், விரும்பாமலும் புதிய இடத்தை நோக்கிச் செல்லும் ஒரு சமூக நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுவரக்கூடியது4 என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது. இவ்வாறானத் தொடர்புலம் பெயர்வினை அதற்குரிய காரணம் மற்றும் சூழலுக்கேற்ப இடப்பெயர்வு, புலம்பெயர்வு, புகலிடப் பெயர்ச்சி எனச் சிறுவகைமைப் பாட்டிற்குள் உட்படுத்தலாம். இவற்றுள், காலங்காலமாகத் தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்த கல்வி, தொழில், மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகளை நாடிச் சொந்த நாட்டிற்குள்ளேயேக் குடியேறுவதை இடம்பெயர்வுஎன்று கூறப்படுகின்றது. இவர்கள், திருவிழாச் சடங்குகள், திருமணம் போன்ற நிகழ்வுகளின் போது தனது சொந்த ஊருக்குச் சென்று வருபவர்களாகவும் பருவக் காலவேளைகளின் போது மட்டுமே இடம் பெயர்பவர்களாகவும் இருப்பர்.

            சுற்றுலா, பொருளாதாரம், தொழில், கல்வி போன்றவற்றின் காரணமாகவேற்று நாடுகளுக்குச் சென்று, தங்களின் தேவைகள் நிவர்த்தி அடைந்ததும் நினைத்த மாத்திரத்தில் தாயகம் திரும்புவதைப் புலம்பெயர்வுஎன்று கூறப்படுகிறது.

            அதீதவறுமை, பஞ்சம், போர்நெருக்கடிகள், அரசியல் மற்றும் பொருளாதாரப் புறக்கணிப்புகள், இனக்கலவரங்கள் போன்றவற்றினால் வேறுவழியின்றி தங்களின் சொந்த நாட்டைவிட்டுத் தமது உயிரை மட்டுமே உடைமையாகக் கருதிதப்பிப் பிழைப்பதற்காக அகதிகளாகி வேறுநாடுகளில் குடியேறி, அங்கேயே குடியுரிமைப் பெற்று வசிப்பவர்களையும் அகதிகளாக அலைந்து திரிபவர்களையும் புகலிடவாசிகள்என்று அழைக்கின்றனர். இவர்களால் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வரஇயலாது.

புலம்பெயர் இலக்கியம்

            அயல்நாடுகளில் புலம் பெயர்ந்த மக்களால் படைக்கப்படும் தமது தாயக நினைவுகளையும் போர்ச்சூழல் அனுபவங்களையும் இழப்புகளையும்; விவரிக்கும் கவிதை, சிறுகதை, புதினம் மற்றும் கட்டுரைப் படைப்புளனைத்துமேபுலம்பெயர் இலக்கியம்என்றழைக்கப்படுகிறது. அவற்றுள்ளே, சற்று வேறுபட்டுப்பு கலிடத்தேடலிலுள்ள இடர்பாடுகள் மற்றும் புகலிடப் பிரச்சினைகளான மொழிச்சிக்கல், பண்பாட்டு உராய்வுகள், கலாச்சார வேறுபாடு, பொருளாதாரப்பிரச்சினைகள், நிறவேறுபாடு மற்றும் மதநம்பிக்கைகள் மீதான எதிர்ப்பு போன்றவற்றினால் நேரிடும் இன்னல்களைப் புலம் பெயர்ப்படைப்பாளிகள் தமது புனைவுகளின் வாயிலாக,  புகலிட இலக்கியங்களாக இவ்வுலகிற்கு எடுத்துரைக்கின்றனர்.

தமிழிலக்கியத்தில் புலம் பெயர்வு

            ஓரிடத்திலிருந்து வேற்றிடங்களுக்குச் செல்லும் இடப்பெயர்வானது சங்ககாலத்தில் ஓதல், பகையே, தூது இவைபிரிவே5 என கல்வி, வணிகம், போர், தூது, ஆட்சிப்பரப்பை பெருகுதல் போன்றவற்றிற்காகச் சங்ககாலமக்கள் வேற்றிடங்களுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். மேலும், சங்ககாலத்தில்யவர்களும் தமிழர்களும் வாணிகம் தொடர்பாக மாறிமாறிப் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அதன் விளைவாகப் பல மொழிபேசும் பிற நாட்டு வணிகர்களும் தமிழர்களும் இணைந்து வணிகம் நடத்தக்கூடிய இடமாகக் காவிரிபூம்பட்டினம் திகழ்ந்துள்ளது. இதனை, மொழி பல பெருகிய பழிதீர்தே எத்துப் புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்6 (பா.வரி.216-17) என்ற பட்டினப் பாலைப்பாடல் வரியின் வாயிலாக அறியமுடிகிறது. இதுமட்டுமன்றி புலவர்கள் தங்களின் வறுமையைப் போக்கிக் கொள்ளப் பல்வேறு நாட்டுமன்னர்களிடத்துப் பரிசில் வேண்டியும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் என்பதைச் சங்க இலக்கிய ஆற்றுப்படை நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த ஆற்றுப்படை இலக்கியங்களேப் புலம்பெயர் இலக்கியத்திற்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இதனைத் தொடர்ந்து புலம்பெயர்தலானது காப்பிய காலகட்டத்தில் கோவலன், கண்ணகி, மணிமேகலை போன்றோர்களின் வினைப் பயனால் ஏற்பட்ட புலம்பெயர்வு, பக்தி இலக்கிய காலகட்டத்தில் சமயப் பரப்பாளர்களின் புலம்பெயர்வு மற்றும் தற்காலத்தில் ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வெனத் தொடர்ந்து காலங்காலமாக மக்களிடையே புலம்பெயர்வு நடைபெற்ற வண்ணமேயுள்ளதென அறியமுடிகிறது.

புலம்பெயர்ப் புதினப் படைப்பாளிகள்

            புலம்பெயர் தலைமையமிட்டு படைக்கப்படும் நாவல்களைப் புலம்பெயர்ந்தோர் தம் படைப்புகள், புலம்பெயரா தோர்படைப்புகள் என இரண்டாகப் பகுக்கலாம். புலம்பெயர்ந்தோரின் வாழ்வியல் நசிவுகளைத் தமது புதினங்களில் புலப்படுத்தும் புலம்பெயராதத் தமிழ்ப்படைப்பாளிகள் பலருள்ளனர். அவர்களுள்ப. சிங்காரம், அகிலன், சா.கந்தசாமி, கி.ராஜநாராயணன், ஹெப்சிபாஜேசுதாசன், நாஞ்சில் நாடன் எனச் சிலரை அடையாளங்காட்டலாம். புலம் பெயர்ந்த தமிழ்ப்புதினப் படைப்பாளிகளாக தேவ காந்தன், ...ஜெயபாலன், ஷோபாசக்தி, ..கிரிதரன், சயந்தன், விமல்குழந்தைவேல், குரு.அரவிந்தன், ஆர்.சண்முகம், இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், .தியாகலிங்கம், செ.யோகநாதன், பார்த்திபன், கே.எஸ்.பாலச்சந்தர், மெலிஞ்சிமுத்தன் மற்றும் வி.ஜீவகுமாரன் போன்றோர்கள் புதினப்படைப்பில் முக்கியமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.

 கடவுச் சீட்டுப் புதினத்தில் காட்சிப்படும் புலம் பெயர் மக்களின் பன்முகப் பிரச்சினைகள்

            கடவுச்சீட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும், வெளிநாடுகளில் குடியிருக்கும் ஒவ்வொரு தனிமனிதனின் அடையாளமாகும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. ஆனால், அதேகடவுச் சீட்டுபுலம் பெயர்மக்களுக்குத் தேவையற்றதாகிவிடுவதால் புகலிட நாட்டிற்குள் நுழையும் முன் தங்களின் அடையாளமானக் கடவுச் சீட்டு சிதைக்கப்படுகிறது. “இனிபோய் பாஸ்போர்ட்டை கிழியுங்கோ"7 என்று பயண முகவர் விமானத்திலிருந்து இறங்கும் முன் கூற, புதினத்தின் மையமாந்தர்களான தமிழ், சுபாதம்பதியினர் உட்பட அனைத்துத் தமிழர்களும் தங்களின் அடையாளமானக் கடவுச்சீட்டைச் சிதைத்து, அகதிவாழ்விற்கு அடித்தளமிட்டு விடுகிறார்கள். ஏனெனில், பாஸ்போர்ட் இருந்தால் அகதிகளைச் சொந்த நாட்டிற்கேப் புகலிட நாடுகள் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இவ்வாறாகப் புலம்பெயர்த் தமிழர்களின் அகதிவாழ்வு ஜெர்மனியில் தொடங்குவதாக நாவலும் தொடங்குகிறது.

அகதிமுகாம்களின் அவலம்

            புலம்பெயர்ந்து செல்லும் மக்களைப் புகலிட நாடுகள் தங்களின் நாட்டிற்குள் எளிதில் நுழையவிடுவதில்லை. ஏனெனில் அகதிகளின் வருகையால் தங்களின் நாட்டிலுள்ளவர்களுக்கு வேலையின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுமென புகலிடநாடுகள் கூறுகின்றன. ஆகையால்தான் அடைக்கலம் நாடிவரும் அகதிகளைத்தடுத்து நிறுத்தி, அவர்களின் தாயகத்திற்கேத் திருப்பியனுப்ப முயற்சிப்பதாகவும் தடுப்பு முகாம்களில் அடைத்துவிடுவதாகவும் கூறுகின்றனர். எனவேதான், பாஸ்போர்ட் இல்லாமல் ஜெர்மனி விமான நிலையத்திற்குள் நுழையும் ஈழத்தமிழர்களான தமிழ், சுபா, செல்லத்துரை, மூர்த்தி மற்றும் பலரையும் ஜெர்மனிய போலீஸ் சிறைபிடித்து பலவித விசாரணைகளுக்குப் பிறகுப் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக அனுப்பத்தயாராகிறது. அகதிகளைப் பற்றிஜெர்மனிய அரசாங்கம்கவலைப்படப்போவதில்லை. பட்டியலில் ஒன்று குறைந்தால் கவலைப்படுவதற்கு இவர்கள் என்ன வருமானம் தரும் ஆடு, மாடு, பன்றி, குதிரைகளா? தங்கள் நாட்டைச் சுரண்ட வந்த பொருளாதார அகதிகள்8 என்றே கிழக்கு மற்றும் தெற்காசிய அகதிகளை மேலைநாடுகள் கருதுகின்றனர். ஏனெனில், அதிகளவு அகதிகளின் வருகையால் தங்கள் நாட்டவர்களின் வருமானம் பாதிப்படையும் என்றே உலக நாடுகளனைத்தும் கருதுகின்றன.    

            ஜெர்மன் நாட்டைக் காட்டிலும் டென்மார்க் நாடானது சற்று அதிகமாகவே அகதிகளுக்கு அந்தஸ்தும் வாழ்வுமளிக்கிறது என நம்பிதமிழ், சுபா உட்பட பலரும் அகதிமுகாமிலிருந்து இரவோடு இரவாகத் தப்பிச் செல்கின்றனர். கடுகுவேலியையும் பனைவேலியையும் மட்டுமே பார்த்திருந்த ஒரு சமூகம் அகதிமுகாம்களின் இரும்புக் கம்பிவேலிகளை அறுத்து, அகழி அகழிகளாகத் தாண்டி காடுகளையும் கரடு முரடானப் பாதைகளையும் கடந்து புகலிட நாட்டிற்குப் பயணிக்கிறார்கள்.

முகாந்திரம் பெறுவதற்குள் மூச்சற்றுப் போதல் 

            மனிதர்தம் இயல்பு வாழ்விற்கு முற்றிலும்மாறானச் சூழலேற்படும் போது அவற்றிலிருந்து தப்பிக்க முயலுகின்றனர். சற்றும் எதிர்பார்த்திராத நிலையில் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டுமெனக்கன நேரத்தில் புலம் பெயர எத்தணிக்கின்றனர். இவ்வாறானப் புலம்பெயர்வில் பயணமுகவர்களை மட்டுமே நம்பிபுகலிடம் நோக்கிச் செல்லும் பலரும் தங்களின் நெடுவழிப்பயணத்திலேயே உயிரிழக்கநேரிடுகின்றது. இதனைமேலும் உறுதிப்படுத்துவதாகவே, டென்மார்க் நாட்டில் அகதி அந்தஸ்தும் சலுகைகளும் மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இலகுவாககிடைத்துக் கொண்டிருக்கிற தென்றபயண முகவரின் வார்த்தைகளை நம்பிபல் வேறுதடைகளைக் கடந்து, டென்மார்க் நாட்டிற்குப் பயணிக்கின்றனர். தமிழ் மற்றும் சுபாஉட்பட அனைவரும் பன்றி ஏற்றிச் செல்லும் வண்டியிலும் பெட்ரோல்டேங்க் வண்டியிலும் செல்கிறார்கள். “ஒன்றில் மூச்சுமுட்டும்... மற்ற திலை மூக்கை ஏன் கடவுள் தந்தான் என்று இருக்கும்9 என்கிற நிலையில் பன்றி வண்டியிலே பயணிக்கும் தமிழ், சுபாவிற்கு வாந்தி வருவது போன்றிருந்த நிலையிலும் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படும் ஆயிரக் கணக்கான பன்றிகளின் நடுவே, தங்களின் உயிர்ப் பாதுகாப்பிற்காகத் தேசம் விட்டுத்தேசம்; செல்லும் பயணமும் விரைந்து கொண்டிருந்தது. டென்மார்க் நாட்டினை இலக்காகக் கொண்டு வாகனம் ஓடுகிற வேளையில், மற்றொருவாகனமான பெட்ரோல் டேங்கில் பயணித்தசெல்லத்துரை உட்படலெ பனானியக் குழந்தைகள் தொடக்கம் சிறியோர், இளையோர், வயதானோர் என அனைவரது உடல்களும் கருகிக் காலனுக்கு இரையாகியிருந்தன10 இவர்களைப்போன்றே தமது சொந்தநாட்டிலிருந்து தப்பித்து உயிர்வாழ வேண்டுமென்றுப் புலம்பெயரும் பலரும்புகலிட நாட்டை அடைவதற்கு முன் பாகவே இறந்து விடுகின்றார்கள். இது கவலைக்குரியதுமட்டுமின்றி கவனத்திற்குட் படுத்தக் கூடியதாவும் உள்ளது.

மொழி சார்சிக் கல்கள்     

            வேற்றுப்பலநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லும்மக்கள் வேலையின்மை, நிறபேதம், கலாச்சார மற்றும் பண்பாட்டு உராய்வுகள், மொழிச் சிக்கல்கள் எனப் பல்வேறுபட்டப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். முக்கியமாக இதுநாள்வரையிலுமாகத் தாய்மொழியை மட்டுமே அறிந்தமக்கள், தங்களின் கலாச்சாரத்திற்கு முற்றிலும் முரணான நாட்டினுள் வாழநேரிடும்போது மொழியினால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. அந்த வகையில், டென்மார்க் நாட்டின்சான்கொலாம்அகதிமுகாமில் தினமும் 100 க்கும் மேற்பட்ட அகதிகள் வந்த வண்ணமிருந்தனர். டெனிஸ் மொழியினையும் அதற்கான சமூகமனோபாவத் தினைக்கொண்டு மட்டுமே வாழும் சமூகத்தில், புதியதோர் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்குப் புலம்பெயர் மக்கள் ஆளாகின்றனர். இவர்களில் தமிழை மட்டுமே தெரிந்தமிஞ்சிப் போனால் ஆங்கிலம், சிங்களம் மட்டுமே அறிந்த ஈழத்தமிழர்களுக்கு டெனிஷ் வகுப்பில் நாவைப் பழக்கப்படுத்துவதென்பது பெரும் சிரமமாகவே இருந்ததுள்ளது. எனவேதான்;, “டெனிஷ் மொழி என்பது எங்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வராது என ஓரிரு மாதங்களில் பாக்டரி வேலைதேடிப் போனவர்களும் உண்டு11. இவ்வாறாகப் புகலிடம் நாடி அந்நிய நாடுகளுக்கு அகதிகளாகச் செல்லும் தமிழர்களுக்கு உதடுகள் பிரியாமல் நுனிநாக்கால் மட்டுமே பேசும் டெனிஷ் மொழியைப்புரிந்து கொள்வ தென்பதும் அதற்கு நாவைப் பழக்கப்படுத்துவதென்பதும் பெரும்பாடாகவே இருந்துள்ளது.

கலாச்சாரப் பண்பாட்டு இழப்புகள்

            புகலிடச் சூழலில் இன்றைய புதிய தலைமுறைச் சந்ததியினருடன் வாழும்புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்றைக்கும் தங்களின் தாய்நாட்டுப் பண்பாட்டை இழக்க விரும்பாதவர்களாகவே இருக்கின்றார்கள். அதேவேளையில், புகலிட நாட்டுக் கலாச்சாரத்தைக் கண்டு பேரதிர்ச்சிக்குள்ளாகின்றனர். எனவேதான், டென்மார்க் நாட்டில்ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாது கிட்டத்தட்ட பிறந்த மேனியாக தமது உடல்களில் எண்ணெய் தடவிக் கொண்டு சுற்றுமுற்றத்தைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாது சூரியக்குளியல் குளிக்கும்12 கலாச்சாரத்தைக் கண்டதும் தமிழ் மற்றும் சுபா உட்பட அனைத்துத் தமிழர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைகின்றது. இத்தகு, கலாச்சாரத்தில் தங்களின் பிள்ளைகளும் சிக்கிவிடுவார்களோ என்ற பயமானது தமிழுக்கு மட்டுமின்றி புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரிடத்திலும் ஏற்படக் கூடியதாகவுள்ளது.

 

இக்கோடைக் காலக்குளியலைக் கண்ட வயதான தமிழரொருவர்என்னுடைய மனுசி பிள்ளையைக் கடைசி வரை இந்தநாட்டுக்கு கூப்பிட வேமாட்டேன்13 என்று டென்மார்க் நாட்டின் கலாச்சாரத்தைக் கண்டதும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். இத்தகு மனவோட்டமே தமிழ் மற்றும் சுபா உட்பட அனைவரிடத்திலும் தோன்றுகிறது.

            சொந்த மண்ணிலிருந்து சுமந்து சென்ற தமிழ்ப்பண்பாட்டுக் கலாச்சாரம், குடும்பக் கட்டமைப்பு சார்ந்த ஒழுங்காற்று விதிகள், பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் மீதான உரிமைகள் ஆகியன புகலிடத்தில் கேள்விக்குறியாகிவிடுகிறது. புலம்பெயர்த் தமிழர்களின் பிள்ளைகள் புகலிடச் சூழலில் வளரும் போது தமிழ் மற்றும் சுபாவின் பிள்ளைகளான சுமிதா, லக்ஷனாவைப் போன்றே தாம் பிறந்து வளர்ந்த தேசமான டென்மார்க் நாட்டின் பண்பாட்டைப் பின் பற்று பவர்களாகவே வளர்ந்து விடுகிறார்கள். அல்லது புகலிடச்சூழல் அவ்வாறு மாற்றிவிடுகிறது எனலாம். டென்மார்க்கில் பருவமெய்திய பெண்கள் வெளியே செல்லும்போது கருத்தடை மாத்திரைகளை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும், பெற்றோர்களும் அதனை நினைவு கூறவேண்டும் என்பது கலாச்சாராமாவுள்ளது. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரத்தினைக் கொண்ட தமிழர்கள், இவ்வெதிர் நிலைக் கலாச்சாரத்திற்குள் தள்ளப்படும் போது புகலிடத்தின் மீதான பற்று முற்றிலுமாகச் சிதைந்து வெறுப்பை ஏற்படுத்தி விடுகிறது.

தொழில் சார் நெருக்கடிகள்

            புகலிடம் நாடிச் செல்லுகிற அனைவரிடத்திலுமுள்ள ஒரே எண்ணவோட்டம் யாதெனில் தங்களின் இருப்பைத் தக்கவைத்துப் பொருளீட்டல் வேண்டும் என்பதே யாகும். ஆனால் இவற்றிற்கு மாறாகப் புகலிட நாடுகளில் இருப்பைத்தக்கவைப்பதிலும் அதற்குரிய வேலைகள் கிடைப்பதிலும் பல்வேறான இடர்பாடுகள் உள்ளன. அந்த வகையில் டெனிஸ் மொழியில் தேர்ச்சிப் பெற்றாலே பணி என்ற நிர்ப்பந்தத்தில் தமிழ் மற்றும் சுபா இருவரும் ஆர்வமுடன் மொழிக் கல்வியையும், தொழிற்கல்வியையும் வேகமாகக் கற்றுவிடுகிறார்கள். இருப்பினும் தொழிற்கல்வியில் தமிழ் அதிசிறப்படைந்து காணப்பட்ட போதிலும், அவனுக்குப் பணி வழங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதனால், தமிழுக்கு டென்மார்க் நாட்டின் மீது முதன்முதலாக வெறுப்பு உண்டாகிறது. தமிழ் வேலைக்காக ஏறத்தாழ 150 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கிறான். ஆனால், அவற்றுள் 100 விண்ணப்பங்களை அந்நாட்டு நிறுவனங்கள் நிராகரித்து விடுகின்றன. முப்பதுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்குப் பதிலேதும் வராத நிலையில் பத்துப் பதினைந்து நிறுவனங்கள் அடுத்தாண்டுப் பார்க்கலாம் என்று கூறிவிடுகின்றன. எனவேபெயரைப் பார்த்தே தனது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டிருக்கிறது எனத் தமிழ் கவலைப்பட்டான்14 இந்நிலையில், ஒரு நில அளவை நிறுவனம் மட்டுமே சம்பளமில்லாமல் தமிழைப் பயிற்சிக்கு அழைத்தது. தமிழ் தனது மனவோட்டத்தில் தான் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பதாலும் தமிழ் என்று பெயர்வைத் திருப்பதாலேயே தனக்குப் பயிற்சியளிக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லையென எண்ணிக் கவலையுறுகிறான்.

வேலையிடத்தில் தமிழுக்கு அளிக்கப்பட்ட வாகன இருக்கையானது பன்றிக் கூட்டுக்கு நடுவே இருளில்பயணித்த நினைவுகளைத் தரக்கூடிய வகையில் அமைந்திருந்தது. அப்போது தமிழ், “எங்கள் தமிழ் இனத்துக்காகவே இந்த வண்டிகள் தயார் செய்யப்படகின்றனவோ16 என எண்ணிக் கவலையுறுகிறான். இவ்வாறாக, தங்களின் மத நம்பிக்கைகளின் மீதான எதிர்ப்பும் மற்றும் பணியிடங்களில் நிகழ்த்தப்படும் அவமானங்கள் போன்றவைகள் தமிழுக்கு மட்டுமன்றி,  புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவருக்குமே நிகழக் கூடியதாகவுள்ளது.

சாதி மற்றும் நிறத்துவேஷங்கள்

            புலம்பெயர் மக்கள் இதுவரைக் கண்டிராத, பரிச்சயமில்லாத நாடுகள் என எங்கே போனாலும், ஈழத்தமிழர்களின் இரத்தத்திலேயே ஊறிப்போன சாதியத்தைக்கைவிடாமல் பிடித்து வைத்திருக்கும் அவலநிலையானது இன்றளவும் காணப்படுகிறது. இவ்வாறாக, டென்மார்க் நாட்டிலும் சாதியம் பார்க்கும் கௌரி அன்ரி போன்றவர்களைக் கண்டுஅகதிகளாகப் புலம்பெயர்ந்த மக்களிடமும் இந்த சாதிய மனப்பான்மை தொடர்வது கண்டு17 புகலிட நாட்டிலும் யாழ்ப்பாணம் வாழ்கிறதே என்று தமிழும் சுபாவும் வேதனை கொள்கின்றனர். ஆனால், டென்மார்க் மக்களிடையே கௌரி, தமிழ், மற்றும் சுபா உட்பட அனைவருமே கீழைத் தேயவர்கள் என்கிற பார்வையின் அடிப்படையில் தோல்நிற அரசியலுக்கு ஆளாகின்றனர். “மருந்து வேண்டச் சென்ற பொழுது வீதியில் குடிகாரர் சூழ நின்று அடித்த பொழுது அது இனத்து வேசம் கொண்டவர்களின் வெளிப்படையான செயல்18 என எண்ணித் தமிழ் தனக்குள்ளேயே சமாதனப்பட்டுக் கொண்டான். மேலைத்தேய நாடுகளில் நிறத்து வேஷம் தடைசெய்யப்பட்டிருந்தாலும் கூட சமூகமட்டத்தில் தடைசெய்யப்படாத ஒரு வடிவமாகவே இன்றளவும் இருக்கின்றது என்பது புலனாகிறது.

முடிவுரை

            அகதிகளாகப் புலம்பெயர்ந்த தமிழர்களினால் புகழிடத்தின் கலாசாரத்தையும் தாயகத்தின் கலாச்சாரத்தையும் ஒருசேர ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும், புலம்பெயர்ந்த நாட்டில் தங்களுக்கான அந்தஸ்தும் உதவிகளும்; கிடைக்கின்றபோது நாட்டின் வனப்பையும், நேர்த்தியையும் மெச்சவும் செய்கின்றனர். அதே வேளையில், புதிய மற்றும் தமக்கு முற்றிலும் மாறுபட்ட எதிர்க்கலாச்சாரத்திற்குள் வாழநேரிடும் போது பன்முகப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது. மேலும், தாயகத்திலேயே வாழ்ந்து பழகிவிட்ட முந்தைய தலைமுறையினர், தங்களின் பிள்ளைகளான இன்றைய தலைமுறையினர் புகலிடத்தின் கலாச்சாரத்தைப் பின் பற்றிடும் போது அவற்றை ஏற்கமுடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையானது புலம்பெயர்ந்த மக்கள்புகலிடத்தில் எதிர்கொள்ளும் பெரும் சிக்கலாக அறியப்படுகிறது. இறுதியில் இந்தப் புகலிட நாட்டினால் தாங்கள் பெற்றதைவிட இழந்ததே அதிகம் என்கிற மனோநிலைக்கு ஆளாகித்தாயகத்திற்கே திரும்பிவிடுவோம் என்கிற அளவிற்குப் புகலிட வாழ்வியல் அமைந்திருக்கிறது என்பது தெளிவாகப் புலனாகிறது. 

 

மேற்கோள்விளக்கக்குறிப்புகள்

1.    சுப்பிரமணியன்,பா.ரா.,(பதி..),க்ரியாவின்தற்காலத்தமிழ்அகராதி, .251,க்ரியா

பதிப்பகம், சென்னை-41, தமிழ்நாடு, இந்தியா. 

2.    மாணிக்கனார்,.,(..),சங்கஇலக்கியம் - பத்துப்பாட்டு,பொருநராற்றுப்படை, .210.வர்த்தமானன்பதிப்பகம், முதற்பதிப்பு,1999, சென்னை-17, தமிழ்நாடு, இந்தியா. 

3.    பஞ்சாங்கம்,., இலக்கியமும்திறனாய்வுக்கோட்பாடுகளும்,.346, அன்னம்பதிப்பகம், பதிப்பு – 2011, தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா.

4.    சுபாசு, தமிழ்இலக்கியத்தில்புலம்பெயர்வு, .21, அன்னம்பதிப்பகம்,  பதிப்பு – 2015, தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா.

5.    தொல்காப்பியம், . 328, டிவர்த்தமானன்பதிப்பகம், முதற்பதிப்பு – 1999, சென்னை-17, தமிழ்நாடு, இந்தியா.

6. . மாணிக்கனார்(..), சங்கஇலக்கியம் - பத்துப்பாட்டு, பட்டினப்பாலை, .438,வர்த்தமானன்பதிப்பகம், முதற்பதிப்பு – 1999, சென்னை-17,    தமிழ்நாடு, இந்தியா.  

7.    ஜீவகுமாரன்,வி., கடவுச்சீட்டு,.9,நற்றினைபதிப்பகம், பதிப்பு – 2014. சென்னை, தமிழ்நாடு, இந்தியா.

8.    மேலது., .18.

9.    மேலது., .28.

10.  மேலது., .34.

11.  மேலது., .46.

12.  மேலது., .47.

13.  மேலது., .47.

14.  மேலது., .91.

15.  மேலது., .93.

16.  மேலது., .94.

17.  மேலது., .71.

18.  மேலது., .91.