சீர்சால் செல்வன்
சீர்சால் செல்வன் சிவகாமி புதல்வன் சூலையி
லுதித்த கல்விச் சூரியன்
ஏழைக் குழந்தைகள் என்றும் ஏடெடுத்துக்
கற்க கலைச்சாலை யீந்த கல்வி வள்ளல்!
பழைய சோறில்லா பாமர நெஞ்சங்
குழைய மதியஉண வீந்தமுதன் மந்திரி
தலையாய மந்திரிகள் கண்டராஜ தந்திரி
பரதகண்டம் படித்த படிக்காத மேதை! சொத்து சேர்க்கா சொக்கத் தங்கம்
தாயைக் காட்டிலும் தாயகத்தைத் தாங்கிய
தானைத் தலைவர் தர்மத் தலைவர்
கர்மவீரர் காமராசர் கருப்பு காந்தியே!
இரா. விஜயலெட்சுமி,

முதன்மையானவைகள்
|
புதன், 1 செப்டம்பர், 2021
சீர்சால் செல்வன் - இரா. விஜயலெட்சுமி,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக