4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

பாலியல் வன்கொடுமை - முனைவர் கோ.வ. பரத்வாஜ்,

 

பாலியல் வன்கொடுமை

மூங்கிலால் நெய்து

படைப்பான்

அவள் வயிற்றில்

நெருப்பைக் கட்டிவிட்டான்.

 

இந்த தேசத்தில்

நெருப்பை

முகரும் நாய்கள்

ஆங்காங்கே.

 

கல் நெஞ்சங்களை

இரும்பால் உடைத்தாலும்

பாலியல் எனப்

பொறித்ததை மறைக்க

எந்த மன்னன் வருவானோ?

 

ஏழு  பருவங்களில்

புதைகின்றாள்

பாதையில் மட்டும்

சிதறுகிறாள்

வன்மனிதர்களால்.

 

விண்ணகம் சென்ற

பாரதியும்

பெண்களை வெளிச்சத்திற்கு

வர வைத்தான்அன்று.

 

இன்றோ!

பெண்ணின் இறப்பைக்

கவி பாட

அழைத்தாலும்

வரமாட்டான்.

 

கண்ணகி

உருவாக்கிய நெருப்பு

சந்தேகத்தைப் பொசுக்கியது.

 

பால்மனம் மாறாப்

பச்சை மண்ணைப்

பாழாக்கும்

பாவிகளைப்

பொசுக்க வேண்டும்அதற்கு

அவர்களுக்கு

நெருப்பு வேண்டும்.

 

யாரதை உருவாக்குவது?

 

பெண்மையில் பிறந்தவன்

பெண்ணைச் சீரழிக்கிறான்அவனின்

பிறப்புறுப்பை அறுப்பது யார்

 

பிறப்பால்

ஆணும் பெண்ணும் குழந்தையே!

குழந்தைகளின்

கருவறையைக் கிழிப்பவனின்

வயிற்றைக் கிழிக்கும் நாள்எந்நாளோ?

அந்நாளே பொன்னாளாகும்.

முனைவர் கோ.. பரத்வாஜ்,

மதிப்புறு உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரி,

வியாசர்பாடி, சென்னை – 39.

தொடர்பு எண் மற்றும் புலனம் : 94448 78212,

மின்னஞ்சல் : barathwajgv32@gmail.com