4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

தீநுண்மி - தா.சரவணன்

 

தீநுண்மி

 

உருமாறி உருமாறி

உயிரை எடுக்கும்

ஒத்த கொரோனாவே

உன் உத்தேசம் தான்

என்ன?

 

அணு ஆயுதங்களோடு

போர் செய்யும்

நாடுகள் எல்லாம்

அற்ப கிருமி நீ

உனை கண்டு

அஞ்சும்படி ஆக்கிபுட்ட

 

ஒற்றை பூமியில்

ஓர் ஆயிரம் வேறுபாடு

எத்தனை எத்தனை

 வழிபாடு

அத்தனையும்

முறியடித்து மூடிவிட்ட

 

மதத்தால் சாதியால்

சண்டை இல்லை

அதிகாரத்தின்

அடக்குமுறை இல்லை

வன்முறையால்

ரத்தக் கரையோ

காயங்களோ இல்லை

இவை எல்லாவற்றையும்

ஒற்றை கிருமியாகிய நீ

அடக்கி தான் ஆள்கிறாய்

 

ஆடாத ஆட்டமெல்லாம்

ஆடிய மனிதனை

ஆட்டி அடக்கதான்

பார்க்கிறாய்

 

வேலை வேலை என

அலைந்தவர்களை

வீட்டோட முடக்கி வச்ச

வீதி எல்லாம்

மாசற்று இருக்க வச்ச

 

வளர்ச்சியை மட்டுமே

விரும்பிய மனிதனை

வீழ்ச்சி அடைய செய்த

வீரிய கிருமி தான் நீ

 

கொண்டாடி

குதூகலித்த மனிதனை

கூண்டடைத்து

திண்டாட வைத்த தீங்கிருமியே

உலகையே புரட்டி

உயிர்களை எடுத்ததுபோதும்

இனியேனும் வாழவிடு

 

தா.சரவணன்

கல்யாணமந்தை         

திருவண்ணாமலை(மாவட்டம்)635703

தொடர்பு எண்:9786577516