4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 செப்டம்பர், 2021

நிகண்டுகளில் நிறங்களின் பெயர்கள் - முனைவர் கி. சுமித்ரா

 

நிகண்டுகளில் நிறங்களின் பெயர்கள்

முனைவர் கி. சுமித்ரா

உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை

ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்)

மல்லுப்பட்டி, பாலக்கோடு, தருமபுரி – 636 805.

ஆய்வுச் சுருக்கம்

சொற்களின் பொருள்களைத் தெளிவுற அறிவதற்கு நிகண்டு நூல்கள் உறுதுணையாக உள்ளன. அவற்றுள் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிகண்டின் பன்னிரெண்டு தொகுதிகளில் காணலாகும், அனைத்துச் சொற்களுக்கும் சொல்லடைவு தொகுக்கப்படுதல் என்பது இன்றியமையாததாகும். கட்டுரையின் அளவு கருதி ஒன்பது நிகண்டுகளில் பதிவாகியுள்ள நிறப்பெயர்கள் குறித்து மட்டும் இக்கட்டுரை ஆராய்வதாக அமைக்கப்பட்டுள்ளது.

முக்கியச் சொற்கள்

நிறப்பெயர்கள், பண்புப்பெயர்கள், வெண்மை நிறம், சிவப்பு நிறம், கருப்பு நிறம், பொன்நிறம், பச்சை நிறம், குரால் நிறம், புன்மை நிறம், பொதுப்பெயர்

முன்னுரை

நிகண்டுகளில் பல்வேறு பண்புப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, கயாதர நிகண்டு, பாரதிதீப நிகண்டு, சூடாமணி நிகண்டு, ஆசிரிய நிகண்டு, பொதிகை நிகண்டு, நாமதீப நிகண்டு ஆகிய ஒன்பது நிகண்டுகளில் மட்டும் பண்புப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதில் காட்சிப்பொருட் பண்புப்பெயர்களான அளவு, வடிவம், நிறம் ஆகிய பண்புப்பெயர்களும், கருத்துப்பொருட் பண்புப்பெயர்களான அறிவு, குணம் இவற்றின் பண்புப்பெயர்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ்மொழியினது சொற்பொருள் வளத்தினுக்குப் பயனை நல்கும் நோக்கத்தோடு மேற்கண்ட 9 நிகண்டுகளில் பதிவாகியுள்ள நிறங்களின் பெயர்கள் குறித்து மட்டும் இக்கட்டுரை அமைகின்றது.

நிறத்தின் வகைப்பாடு

ஒன்பது நிகண்டுகளில் பதிவாகியுள்ள நிறத்தின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ஆராயப்பட்டுள்ளன. சில நிறங்கள் ஒரே நூற்பாவில் கலந்துவந்துள்ளன. அவ்வாறு இருப்பதை அங்கங்கே கொடுக்கப்பட்டுள்ளன. கீழ் உள்ள பிரிவு பெரும்பான்மைக் கருதி பிரிக்கப்பட்டுள்ள வகைப்பாடாகும்.


Ø வெண்மை

Ø சிவப்பு

Ø கருப்பு

Ø நிறம், நிறத்தின் பொது பெயர்

Ø பொன்நிறம்

Ø பச்சை நிறம்

Ø புகர் நிறம் () புன்மை நிறம்

Ø குரால் நிறம்

Ø மாசின் பெயர் () மலினம் பெயர்

Ø செம்மை


வெண்மை நிறத்தின் பெயர்

திவாகர நிகண்டு

          வால், பால், சுவேதம், தவளம் வெண்மை”(1389)

1. வால், 2. பால், 3. சுவேதம், 4. தவளம்

பிங்கல நிகண்டு

          சுவேதந் தவளங் சுக்கிலங் குருத்து

விளர்வால் வெள்ளை நரைசிதம் வெண்மை” (1930)

            1. சுவேதம், 2. தவளம், 3. சுக்கிலம், 4. குருத்து, 5. விளர், 6. வால், 7. வெள்ளை,

8. நரை, 9. சிதம்

  வெண்மை (தொடர்ச்சி) பெயர்

          குருகுபால் சுப்பிர மென்னவுங் கூறும்” (1931) - 1. குருகு, 2. பால், 3. சுப்பிரம்

உரிச்சொல் நிகண்டு

          பாண்டுரங் கௌரஞ் சிதஞ்சுவை தந்தவளம்

பாண்டரம் பால்வா லருச்சுனம் - பாண்டு….” (152)

1. பாண்டுரம், 2. கௌரம், 3. சிதம், 4. சுவேதம், 5. தவளம்,

6. பாண்டரம், 7. பால், 8. வால், 9. அருச்சுணம், 10. பாண்டு, 11. சுசி,

12. அவதாதம், 13. சுதை, 14. சுப்பிரம், 15. விசதம், 16. விளர், 17. கம்

பாரதிதீப நிகண்டு

குரானிறம், புன்மை, வெண்மை, பச்சைநிறம் பெயர்

          போற்றுங் கபீலம் குரானிற மாகும் புகர்புன்மை வால்

தோற்றுஞ் சுவேத முடன்பால் தவளந் துலங்கு வெண்மை…” (380)

  குரானிறத்தின் பெயர் - 1. கபீலம்

  புன்மை பெயர் - 1. புகர்

  வெண்மை நிறத்தின் பெயர்

1. சுவேதம், 2. பால், 3. தவளம், 4. வெள்ளை

  பச்சைநிறத்தின் பெயர்

            1. பாசு, 2. பசுமை, 3. பைத்து, 4. சாமளம், 5. பச்சை

சூடாமணி நிகண்டு

வெண்மை, சிவப்பின் பெயர்

குருகுபால் தவளம் வெள்ளை குருத்துவால் சுவேதம் பாண்டு

நரைவிளர் பத்தும் வெண்மை சிதமுஞ்சக் கிலமும் நாட்டும்…” (544)

  வெண்மையின் பெயர்

1. குருகு, 2. பால், 3. தவளம், 4. வெள்ளை, 5. குருத்து, 6. வால், 7. சுவேதம்,

8. ஈண்டு, 9. நரை, 10. விளர்

  சிவப்பின் பெயர்

            1. குருதி, 2. கிஞ்சுகம், 3. இராகம், 4. சேது, 5. பூவல், 6. அருணம், 7. சேய்,

8. சோணம், 9. செக்கர், 10. அரத்தம், 11. சேப்பு

ஆசிரிய நிகண்டு

வெள்ளை, சிவப்பு, பச்சை இவற்றின் பெயர்

          சுப்பிரம் வால்பால் குருத்துநரை பாண்டுச்

சுவேதம்விளர் வெண்மை குருகு….” (189)

1. சுப்பிரம், 2. வால், 3. பால், 4. குருத்து, 5. நரை, 6. பாண்டு,

7. சுவேதம், 8. விளர், 9. வெண்மை, 10. குருகு, 11. சுசி, 12. வெளில்,

13. வாருணம், 14. காரி, 15. சீனம், 16. சுதை, 17. சுக்கிலம், 18. தவளம், 19. விசிதம்,

20. செப்பு, 21. அருச்சுனம்

நாமதீப நிகண்டு

          வெள்ளைசுப்பி ரங்கவுரம் வெள்ளிவிளர் சுக்கிலமே

கொள்ளும் விசிதங்குருகு கூர்குருத்துத் துள்ளும் வெண்மை…” (785)

            1. வெள்ளை, 2. சுப்பிரம், 3. கவுரம், 4. வெள்ளி, 5. விளர்,

6. சுக்கிலம், 7. விசிதம், 8. குருகு, 9. கூர், 10. குருத்து, 11. வெண்மை,

12. பால், 13. சிதம், 14. சுவேதம், 15. நரை, 16. பாண்டு, 17. அவதாரம்,

18. தவளம், 19. வால், 20. வெளுப்பு, 21. அருச்சுனம்      

சிவப்பு நிறத்தின் பெயர்

திவாகர நிகண்டு

            அரக்கு, செம்மை, துப்பு, துவர், சோணம்,

அரத்தம், சேது, பூவல், பாடலம்….” (1385)

  சிவப்பின் பெயர்

1. அரக்கு, 2. செம்மை, 3. துப்பு, 4. துவர், 5. சோணம், 6. அரத்தம், 7. சேது,

8. பூவல், 9. பாடலம், 10. சிந்துரம், 11. அத்து, 12. படீரம், 13. அருணம், 14. சேந்து,

15. செக்கர், 16. குலிகம், 17. சேப்பு

  மிகச்சிவத்தலின் பெயர்

சேத்தலும், சேப்பும் மிகச்சிவத்தல் ஆகும்” (1396)

1. சேத்தல், 2. சேப்பு

பிங்கல நிகண்டு

          அத்து மருணமு மரத்தமுஞ் சேப்புஞ்

சோணமுங் குருதியுந் துவருஞ்சிந் தூரமும்…..” (1933)

1. அத்து, 2. அருணம், 3. அரத்தம், 4. சேப்பு, 5. சோணம், 6. குருதி, 7. துவர்,

8. சிந்தூரம், 9. பூவல், 10. படீரம், 11. சேத்து, 12. அரக்கு, 13. செக்கர், 14. செம்மை,

15. சேந்து, 16. பாடலம், 17. கிஞ்சுகம், 18. குலிகம், 19. துப்பு

உரிச்சொல் நிகண்டு

  கருமை, சிவப்பு இவற்றின் பெயர்கள்

                   கருமை கறையசிதங் காழகங் கான

மிருணீலந் சாமளஞ் சாம - மருணமொளி….” (153)

  கருமையின் பெயர்

1. கறை, 2. அசிதம், 3. காழகம், 4. கானம், 5. இருள், 6. நீலம், 7. சாமளம்,

8. சாமம்

  சிவப்பின் பெயர்

1. அருணம், 2. அரத்தம், 3. சோணம், 4. உலோகிதம், 5. அஞ்சிட்டம், 6. பாடலம்,

7. பூவல்

பாரதிதீப நிகண்டு

சிவப்பு, பொன்னிறத்தின் பெயர்

                   தொக்கவரத்தந் துவரருக்குச் செம்மை சோணந்துப்புச்

செக்க ருடன்பாட லங்குலி கமத்துச் சிந்துரமே….” (379)

  சிவப்பின் பெயர்

1. அரத்தம், 2. செம்மை, 3. சோணம், 4. பாடலம், 5. செக்கர், 6. இராகம்,

7. அருணம், 8. சிவப்பு

  பொன்னிறத்தின் பெயர்

1.    பீதகம், 2. புற்கலம், 3. பிங்கலம்

நாமதீப நிகண்டு

          செக்கர்கிஞ்சு கஞ்சோணஞ் சேதரத்த மஞ்சிட்டம்

அக்குருதி பாடலம ராகஞ்சேய் - மெய்க்குஞ்…” (786)

1. செக்கர், 2. கிஞ்சுகம், 3. சோணம், 4. சேது, 5. அரத்தம்,

6. மஞ்சிட்டம், 7. குருதி, 8. பாடலம், 9. அராகம், 10. சேய், 11. சிவப்பு,

12. இராகம், 13. பூவல், 14. சேப்பு, 15. அருணம், 16. செம்மை,

17. உலோகிதம்

கருமை நிறத்தின் பெயர்

திவாகர நிகண்டு

          காளிமம், களங்கம், கார், களம், நீலம்

காளம், அஞ்சனம், கருள், மஞ்சு, மாலே

காளகம் எனப்பதி னொன்றும் கருமை” (1391)

1. காளிமம், 2. களங்கம், 3. கார், 4. களம், 5. நீலம், 6. காளம், 7. அஞ்சனம்,

8. கருள், 9. மஞ்சு, 10. மால், 11. காளகம்

பிங்கல நிகண்டு

          காளமுங் காழகமுங் காளிமமுங் காரிமால்

மாவு மிருளு நீலமு மசிதமுங்….” (1935)

            1. காளம், 2. காழகம், 3. காளிமம், 4. காரி, 5. மால், 6. மா,

7. இருள், 8. நீலம், 9. அசிதம், 10. கார், 11. அஞ்சனம், 12. நல்லம்,

13. அருள்

பாரதிதீப நிகண்டு

கருமை நிறம் பெயர், நிறப்பொது, மலினம் இவற்றின் பெயர்  

கருமை களங்க கறைநீலங் காளகங் காளிமமால்

பொருவரு மஞ்சனங் காரென்பர் மாமை புகர்கெழுவே….” (381)

  கருமை நிறப்பெயர்

            1. கருமை, 2. களங்கம், 3. கறை, 4. நீலம், 5. காளம், 6. காளி, 7. மால்,

8. அஞ்சனம்,

  நிறப்பொதுப் பெயர்

1. மாமை, 2. புகர், 3. கெழு, 4. உரு, 5. கேழ், 6. சந்தம், 7. வண்ணம், 8. குரு

  மலினம் பெயர்

1. மரு, 2. கறை, 3. மாசு, 4. கசடு, 5. களிங்கம்

  சூடாமணி நிகண்டு

          இருண்மணி நீலம் நல்லம் ஏற்றகா கமே காளம்

கருள்களங் காரி கார்மால் குறைமாயங் கறுப்பின் பேரே..” (546)

1. இருள், 2. மணி, 3. நீலம், 4. நல்லம், 5. காழகம், 6. காளம், 7. கருள், 8. களம், 9. காரி, 10. கார், 11. மால், 12. கறை, 13. மாயம்

ஆசிரிய நிகண்டு

கருமை, பொன்னிறம், புகர், மாசு, நிறம் இவற்றின் பெயர்

          கருமையசி தங்காரி காளிமைக் காரளங்

காளம்நீ லங்களங்கங்

காளிமம் கருள்மாக் களங்காரோ (ஞ்சனங்)

கறைமாய மாலிருள்மணி…..” (190)

  கருமையின் பெயர்

1. கருமை, 2. அசிதம், 3. காரி, 4. காளிமை, 5. காரளம், 6. காளம், 7. நீலம்,

8. களங்கம், 9. காளிமம், 10. கருள், 11. மா, 12. களம், 13. கார், 14. ஓடு, 15. அஞ்சனம், 16. கறை, 17. மாயம், 18. மால், 19. இருள், 20. மணி, 21. பெருமை பெறும் நல்லம்

  பொன்னிறத்தின் பெயர் - 7

            1. பீதம், 2. புலம், 3. புற்கலம், 4. பீதகம், 5. அரித்திரம், 6. பிங்கலம், 7. பசப்பு

  புகர் நிறத்தின் பெயர் - 3

            1. கபிலம், 2. குரால், 3. புன்மை

    நிறத்தின் பெயர் - 19

1. அரி, 2. வரு, 3. புகர், 4. இராகம், 5. குரு, 6. வருணம், 7. மேனி, 8. உரு,

9. வண்ணம், 10. பயப்பு, 11. குணம், 12. சாயல், 13. சந்தம், 14. மாமை, 15. கெழுமை,

16. கேழ், 17. செழுமல், 18. பிறங்கல், 19. குலவு

நாமதீப நிகண்டு

கறுப்பு, புன்மை நிறத்தின் பெயர்

          மால் கருள்கா ளங்காரி மாக்கறைமா யங்கருமை

நீலமிருள் காளகங்கார் நீடுமணி - மேலசிதங்….” (787)

  கறுப்பின் பெயர்

            1. மால், 2. கருள், 3. காளம், 4. காரி, 5. மா, 6. கறை, 7. மாயம், 8. கருமை,

9. நீலம், 10. இருள், 11. காளகம், 12. கார், 13. மணி, 14. அசிதம், 15.  காளிமம், 16. களம், 17. கறுப்பு

  புன்மையின் பெயர்

1. புகர், 2. குரால், 3. கபிலம், 4. புன்மை, 5. புற்கெனு நிறம்

 

நிறத்தின் பொதுப் பெயர்

திவாகர நிகண்டு 

புகரே, மேனி, மாமை, கேழ், வண்ணம்

குருவே, கொழுமை, கெழுவே, சந்தம்

உருஎனப் பத்தும் நிறத்தின் பொதுப்பெயர்” (1393)

1. புகர், 2. மேனி, 3. மாமை, 4. கேழ், 5. வண்ணம், 6. குரு, 7. கொழுமை,

8. கெழு, 9. சந்தம், 10. உரு

பிங்கல நிகண்டு

          குருவுங் கொழுமையுங் குணமுங் கொழுமையு

மரியுஞ் சாயலும் வருணமு மன்றிப்

பயப்புங் கறையும் கருவு நிறமே” (1944)

1. குரு, 2. கொழுமை, 3. குணம், 4. கொழுமை, 5. அரி, 6. சாயல், 7. வருணம்,

8. பயப்பு, 9. கறை, 10. கரு.

சூடாமணி நிகண்டு

          வரிபுகர் சாயல் சந்தம் மானமகேழ் பசப்பு வண்ணம்

குருவுரு வருணம் மேனி யீராறும் நிறப்பேர் கூறும்” (550)

            1. வரி, 2. புகர், 3. சாயல், 4. சந்தம், 5. மானம், 6. கேழ், 7. பசப்பு, 8. வண்ணம்,

9. குரு, 10. உரு, 11. வருணம், 12. மேனி

நிறம், பஞ்சவர்ணத்தின் பெயர்

நாமதீப நிகண்டு

சாயல்குரு மேனிபுகர் சந்தமுரு வண்ணம்வரி

யாய்வருணம் வன்னங்கே ழாகுநிறஞ் - சாயைநிழல்….” (784)

  நிறத்தின் பெயர்

1. சாயல், 2. குரு, 3. மேனி, 4. புகர், 5. சந்தம், 6. உரு 7. வண்ணம், 8. வரி,

9. வருணம், 10. வன்னம், 11. கேழ், 12. நிறம்

  பஞ்சவர்ணத்தின் பெயர்

1. வெண்மை, 2. செம்மை, 3. கருமை, 4. மென்பசுமை, 5. பொன்மை

பொன்னிறத்தின் பெயர்

திவாகர நிகண்டு

          பீதம், பிங்கலம், பொற்கெனல் பொன்னிறம்” (1386)

            1. பீதம், 2. பிங்கலம், 3. பொற்கெனல்

பிங்கல நிகண்டு

பீதகம் பசப்புப் பிங்கல மரிதம்

நாலுங்காஞ் சனியும் பொன்மையின் பெயரே” (1932)

   1. பீதகம், 2. பசப்பு, 3. பிங்கலம், 4. அரிதம், 5. காஞ்சனி

உரிச்சொல் நிகண்டு

பச்சை, பொன்னிறம், புகர்நிறம், கபிலநிறம் இவற்றின் பெயர்

          அரித்துப் பலாச மரிதமரி பச்சை

யரித்திரா பம்பீதம் பொன்மை - தரித்த

புகர்நிறம் புன்மையாம் போற்றுங் குராலா

நிகரில் கவில நிறம்” (154)

  பச்சையின் பெயர் (4) - 1. அரித்து, 2. பலாசம், 3. அரிதம், 4. அரி

  பொன்னிறத்தின் பெயர் (2) – 1. அரித்திராபம், 2. பீதம்

  புகர்நிறத்தின் பெயர் (1) – புன்மை

  கபிலநிறத்தின் பெயர் (1) – குரால்

சூடாமணி நிகண்டு

பொன்மை நிறம், பச்சை, புகர்நிறம், மாசின் பெயர்

          சுமை யரிதஞ் சாமம் பசுமைசா மளமே பச்சை

பேசுபிங் கலம்ப சப்புப் பீதகம் பீதம் பொன்மை

பூசிய குரால்புற் கோடு புகர்க பிலமும்ஆம் என்ப

மாசின்பேர் கறைக ளங்கம் மலினமாங் கசடும் அப்பேர்” (545)

  பொன்மையின் பெயர் (4) - 1. பிங்கலம், 2. பசப்பு, 3. பீதகம், 4. பீரம்

  பச்சையின் பெயர் (6) – 1. பாசு, 2. பை, 3. அரிதம், 4. சாமம், 5. பசுமை, 6. சாமளம்

  புகர்நிறத்தின் பெயர் (3) – 1. குரால், 2. புற்கு, 3. கபிலம்

  மாசின் பெயர் (4) - 1. கறை, 2. களங்கம், 3. மலினம், 4. கசடு

நாமதீப நிகண்டு

பொன் நிறம், பசுமை நிறத்தின் பெயர் - 7+8 = 15

          பிங்கலம்பீ தம்பீத கம்மரித்தி ராபமொடு

பொங்குபொன்மை யும்பசப்பும் பொன்னிறமாந் - தங்குபச்சை

பாசரிய ரித்தரிதம் பைசாம ளஞ்சாம

மாசில் பசுமைநிற மாம்” (788)

  பொன் நிறம் பெயர் - 7

1. பிங்கலம், 2. பீதம், 3. பீதகம், 4. அரித்திராபம், 5. பொன்மை, 6. பசப்பு,

7.  பொன்னிறம்

     பசுமை நிறத்தின் பெயர் - 8

          1. பச்சை, 2. பாசு, 3. அரி, 4. அரிதம், 5. பை, 6. சாமளம், 7. சாமம், 8.பசுமைநிறம்

பச்சை நிறத்தின் பெயர்

திவாகர நிகண்டு

            பாசும், பைம்மையும், சாமமும் பைத்தும்….” (1390)

            1. பாசு, 2. பைம்மை, 3. சாமம், 4. பைத்து, 5. பசுமை, 6. சாமளம்.

பிங்கல நிகண்டு

பாசும் பையு மரியும் பசுமையும்…” (1934)

1. பாசு, 2. பை, 3. அரி, 4. பசுமை, 5. பலாசு, 6. சாமம், 7. அரிதம்.

வண்ணத்தின் பெயர்

திவாகர நிகண்டு

செம்மையும், கருமையும், பொன்மையும், பசுமையும்…” (1384)

1. செம்மை, 2. கருமை, 3. பொன்மை, 4. பசுமை, 5. வெண்மை.

            வண்ணம் சந்தம்” (1401) - 1. சந்தம்

பிங்கல நிகண்டு

வண்ணஞ் சந்தம்” (1946) - 1. சந்தம்

பாரதிதீப நிகண்டு

மலிர்தல் மலிதல், நெகிழ்தல், தெவிழ்தல்மல் கல்துவன்றல்…” (378)

1. வெண்மை, 2. செம்மை, 3. கருமை, 4. பசுமை, 5. செம்பொன்

 “…. வண்ணஞ் சந்தந்தானதுவே” (384) - 1. சந்தம்

சூடாமணி நிகண்டு

          மருவிய வண்ணம் சந்தம் ….” (551) - 1. சந்தம்

ஆசிரிய நிகண்டு

          சந்த வண்ணமாமே..” (191) - 1. சந்தம்

பஞ்ச நிறத்தின் பெயர்

நாமதீப நிகண்டு

பஞ்சநிறத் திற்றிரிவு பட்டாற் பொதுநிறமாந்” (789) - 1. பொதுநிறம்

புன்மை நிறத்தின் பெயர்

திவாகர நிகண்டு

புகார் புன்மை நிறமே” (1388) - 1. புகார்

புற்கெனு நிறத்தின் பெயர்

திவாகர நிகண்டு

கபிலங் குரால்புகர் புற்கெனு நிறமே” (1936) - 1. கபிலம், 2. குரால், 3. புகர்

குரால் நிறத்தின் பெயர்

திவாகர நிகண்டு

கபிலம், குரால் நிறம்” (1387) - 1. கபிலம், 2. குரால்

செம்மையின் பெயர்

நாமதீப நிகண்டு

“…இருசு செப்பம்

செம்மைசெவ்வன் செவ்வை…” (1392)

1. இருசு, 2. செப்பம், 3. செம்மை, 4. செவ்வன், 5. செவ்வை

அகராதி வடிவில் நிகண்டுகளின் நிறப்பெயர்கள்

ஒன்பது நிகண்டுகளில் இடம்பெறும் நிறப்பெயர்களை அகராதி வடிவில் அகரவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே இடம்பெறும் அட்டவணையில் முதலில் நிறத்தின் பெயர்களும் அடுத்து அப்பெயருக்குரிய பொருள்களும், அடுத்து அந்நிறப்பெயர்கள் எந்தெந்த நிகண்டுகளில் இடம்பெற்றுள்ளன என்பதும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து நிறங்கள் குறித்தும் மீண்டும் மீண்டும் வரக்கூடிய சொற்களை விட்டுவிட்டுநிறத்தின் பெயர்கள், பொருள், இடம்பெறக்கூடிய நிகண்டுகள் என்ற வகையில் இவ்வட்டவணையில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

.

நிறத்தின் பெயர்கள்

பொருள்

நிகண்டுப் பெயர்கள்

1.             

ஐவகை நிறத்தில் திரிவுபட்டது

பொதுநிறம்

நாமதீபம் – 784

2.             

ஐவகை வண்ணம்

செம்மை, கருமை, பொன்மை, பசுமை, வெண்மை

திவாகரம் – 1384

பாரதிதீபம் – 378

நாமதீபம் – 784

3.             

கருமை நிறம்

காளிமம், காளம், களங்கம், கார், களம், நீலம், அஞ்சனம், கருள், மஞ்சு, மால், காளகம், காழகம், காரி, மா, இருள், அசிதம், நல்லம், கறை, சாமளம், சாமம், மணி, மாயம், காளி, யாமம், காளிமை, காரளம், ஓடு, பெருமை, நல்லம், கருப்பு, கறுப்பு

திவாகரம் – 1931

பிங்கலம் – 1935

கயாதரம் – 302

உரிச்சொல் – 153

பாரதிதீபம் – 386

சூடாமணி – 546

ஆசிரியம் – 190

பொதிகை – 278

நாமதீபம் – 787

4.             

குரால், புற்கெனு நிறம்

கபிலம், குரால், புகர், பசலை, பசப்பு

திவாகரம் – 1387

பிங்கலம் – 1936

கயாதரம் – 301

உரிச்சொல் – 154

பாரதிதீபம் – 380

பொதிகை – 279

5.             

சிவப்பு நிறம்

அரக்கு, செம்மை, துப்பு, துவர், சோணம், அரத்தம், சேது, பூவல், பாடலம், சிந்துரம், அத்து, படீரம், ஒடு, சேந்து, அருணம், செக்கர், குலிகம், சேப்பு, குருதி, சிந்தூரம், சேத்து, கிஞ்சுகம், உலோகிதம், இராகம், அஞ்சிட்டம், சேய், சேதம், , அர்த்தம், மஞ்சிட்டு, துவரி, அராகம்

திவாகரம் – 1385

பிங்கலம் – 1933

கயாதரம் – 300

உரிச்சொல் – 153

பாரதிதீபம் – 379

சூடாமணி – 544

ஆசிரியம் – 189

பொதிகை – 278

நாமதீபம் – 786

6.             

பச்சை நிறம்

பாசு, பைம்மை, சாமம், பைத்து, பசுமை, பலாசு, சாமளம், பை, அரி, அரிதம், அரித்து, பலாசம், பைமை

திவாகரம் – 1390

பிங்கலம் – 1934

கயாதரம் – 301

உரிச்சொல் – 154

பாரதிதீபம் – 380

சூடாமணி – 545

ஆசிரியம் – 189

பொதிகை – 279

நாமதீபம் – 788

 

7.             

புகர்நிறம்

குரால், புற்கு, கபிலம், புகார், புன்மை, பன்மை

சூடாமணி – 545

ஆசிரியம் – 190

நாமதீபம் – 787

8.             

புன்மை நிறம்

புகார், நவிரம், புகர் நிறம், புன்மை, புற்கெனல், குரானிறம்

திவாகரம் – 1388

பிங்கலம் – 1915

கயாதரம் – 301

உரிச்சொல் – 154

பாரதிதீபம் – 380

பொதிகை  279

9.             

பொன்நிறம்

பீதம், பிங்கலம், பொற்கெனல், பீதகம், அரிதம், காஞ்சனி, அரித்திராபம், புலம், புற்கலம், பசப்பு, பொன்மை

திவாகரம் – 1386

பிங்கலம் – 1932

கயாதரம் – 300

உரிச்சொல் – 154

பாரதிதீபம் – 379

சூடாமணி – 545

ஆசிரியம் – 190

பொதிகை – 279

நாமதீபம் – 788

10.          

வண்ணம்

சந்தம்

திவாகரம் – 1401

பிங்கலம் – 1946

கயாதரம் – 308

பாரதிதீபம் – 384

சூடாமணி – 551

ஆசிரியம் – 191

11.          

வெண்மை நிறம்

வால், பால், சுவேதம், தவளம், சுக்கிலம், குருகு, குருத்து, விளர், வெள்ளை, நரை, சிதம், சுப்பிரம், தண்மை, வெளிறு, பாண்டு, விதம், சுசி, கூர், வெளில், வாருணம், காரி, சீனம், சுதை, விசிதம், கம், செப்பு, அருச்சுனம், வெள்ளி, கவுரம், அவதாரம், வெளுப்பு, பாண்டூரம், கௌரம், பாண்டரம், அவதாதம், விசதம்

திவாகரம் – 1389

பிங்கலம் – 1914, 1930, 1931

கயாதரம் – 301

உரிச்சொல் – 152

பாரதிதீபம் – 380

சூடாமணி – 544

ஆசிரியம் – 189

பொதிகை – 277

நாமதீபம் – 785

முடிவுரை

நிறத்தின் பெயர்களை - வெண்மை நிறத்தின் பெயர், சிவப்பு நிறத்தின் பெயர், கருமை நிறத்தின் பெயர், புன்மை நிறத்தின் பெயர் போன்ற வகையில் பிரித்து ஆராயப்பட்டுள்ளன.

சொற்களின் பொருள்களைத் தெளிவுற அறிவதற்கு நிகண்டு நூல்கள் உறுதுணையாக உள்ளன. ஒன்பது நிகண்டுகளில் உள்ள காட்சிப்பொருள் பண்புப்பெயரில் ஒன்றான நிறப்பெயர்களைத் தொகுத்துக் கூறப்பட்டுள்ளதால், வருங்கால அகராதியியல், மொழியியல் ஆய்வாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

துணைநூற்பட்டியல்

    1. .வே. சுப்பிரமணியன்(.), தமிழ் நிகண்டுகள் (தொகுதி - 1,2), மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் - 608 001.  முதற்பதிப்பு, டிசம்பர் - 2008.
    2. மு. சண்முகம் பிள்ளை, நிகண்டுச் சொற்பொருட் கோவை, பதிப்புத் துறை, மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 625 021. முதற்பதிப்பு, (1982).
    3. மா. சற்குணம், தமிழ் நிகண்டுகள் ஆய்வு, இளவழகன் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை - 14. ஆகஸ்டு, 2002.
    4. வீ.ஜே. செல்வராசு, தமிழ்ச் சொற்றொடர் அகராதி (தெசாரசு), மெய்யப்பன் பதிப்பகம், 53புதுத்தெரு, சிதம்பரம் - 608 001.முதற் பதிப்பு மே, 2003.
    5. வெ. பாலமுருகன், இரா. மோகனா, நிகண்டு ஆய்வு, மெய்யப்பன் பதிப்பகம், புதுத்தெரு, சிதம்பரம் - 608 001.முதற் பதிப்பு நவம், 2009.